புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான கோப்பினை மத்தியரசுக்கு அனுப்பாமல் துணை நிலை ஆளுனரே கிடப்பில் போட்டு வைத்துள்ளார். புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை அவர் முடக்கி வைத்துள்ளார் என்று புதுவையின் சபாநாயகர் செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குற்றம் சுமத்துகிறார். இவர் பாஜக கட்சிக்காரர்.
சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக இவர் கொடுத்த மதிப்பீடு மிக மிக அதிகம். முப்பது சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவைக்கு புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான தொகையை விட அதிகம் செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த ஊழலுக்கு எப்படி ஒப்புதல் தர முடியும் என்று திருப்பிக் கேட்கிறார் தமிழிசை அம்மையார்.
ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லுங்கள் என்று பாஜக மேலிடம் இருவரிடமும் சொல்லியுள்ளது என்றும் அந்த செய்தி சொல்கிறது.
சரி, தமிழிசைக்கு பாஜக மேலிடம் அறிவுரை வழங்க வேண்டும்? அவர் இப்போது அரசியல் சாசனப்பதவியான ஆளுனர் பதவியில் உள்ளாரா அல்லது பாஜக உறுப்பினராக தொடர்கிறாரா?
இரண்டில் ஏதாவது ஒன்றில்தானே இருக்க முடியும்!
No comments:
Post a Comment