பாஜக எம்.பி யின் துணையோடு உள்ளே வந்து மக்களவையில் "வண்ணப்புகை உமிழும் கருவி" பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று போராடியதற்காக சபாநாயகர் 15 எம்.பிக்களை இடை நீக்கம் செய்கிறார்.
இந்த நடவடிக்கையே அராஜகமான ஒன்று. பாஜக எம்.பி க்குள்ள தொடர்பை திசை திருப்ப ஏற்கனவே சில கதைகளை கட்டவிழ்த்துள்ளது பாஜக ஐ.டி விங். மக்களவை உறுப்பினர்கள் இது பற்றி பேசக்கூடாது என்பதற்காகத்தான் இடை நீக்க நடவடிக்கை.
இதிலே மிகப் பெரிய கொடுமை என்பது
அன்றைய தினம் அவைக்கே வராத திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனையும் இடை நீக்கம் செய்துள்ளதுதான்.
இந்த அளவு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதே பாஜகவும் டிமோவும் ஆட்சி நடத்த அருகதையற்றவர்கள் என்பதற்கான லேட்டஸ்ட் சான்று.
No comments:
Post a Comment