Wednesday, December 20, 2023

அத்வானி கதி நாளை டிமோவுக்கும்

 


முன் விளக்கக் குறிப்பு : அத்வானி மீது எந்த பாசமோ, நேசமோ, மரியாதையோ கிடையாது. மத வெறிக் கலாச்சாரத்தை இந்தியாவில் ர(த்)த யாத்திரை மூலம் விதைத்த நபர் என்பதால் என்றைக்கும் என் வெறுப்புக்கு உரியவர்.

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வர வேண்டாம் என்று பாபர் மசூதி இடிப்புக்கு அடிக்கல் நாட்டிய அத்வானிக்கும் அப்போதைய பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷிக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று டிமோ திறக்கவுள்ள ராமர் கோயிலுக்கு அடித்தளமே பாபர் மசூதி இடிக்கப்பட்டதுதான் காரணம். அதை செய்தவர்கள் இந்த இரண்டு வயோதிகர்கள்தான்.

பின் அவர்களுக்கு ஏன் அனுமதி மறுப்பு?

ராமர் கோயிலை தன் பிரத்யேகமான சாதனையாக பீற்றிக் கொள்ள நினைக்கும் டிமோவால் அந்த இரண்டு வயோதிகர்களை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்ப்பவர்கள் அவர்களின் பங்களிப்பைப் பற்றி  பேசினால் எப்படி தாங்க முடியும்?

சங் பரிவார அமைப்புக்களில் இது சகஜம்தான். ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் ஆட்டுவிக்கிற கயிற்றுக்கு ஏற்றார்போல ஆடுபவர்கள்தான் எல்லோரும்.

இன்று அத்வானி அசிங்கப்படுத்தப்பட்டது போல, நாளை டிமோவும் அசிங்கப்படுத்தப்படலாம். அதை செய்வது அமித்தாகக் கூட இருக்கலாம்,

 

No comments:

Post a Comment