Thursday, November 9, 2023

மேக்ஸ்வெலும் சத்ரு சம்ஹார யாகமும்

 


திரு இளங்கோவன் முத்தையா அவர்களின் இரு பதிவுகள் இங்கே

முதல் பதிவு

கிளென் மேக்ஸ்வெல், வினி ராமனை நமது ஹிந்து சனாதன தர்மத்தின்படி திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அப்போது அவர் ஒரு ரகசியமான காரியம் செய்தார். தனது திருமணத்தின்போது அவர் தான் கிரிக்கெட் விளையாடும் பேட்டையும் கொண்டு வந்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஏன் என்று புரியவில்லை.
ஆனால் க்ளென் மேக்ஸ்வெல்லின் திட்டமே வேறு...
அவர் தனது திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களிடம் தனது பேட்டைக் கொடுத்து அதற்கெனத் தனியாக "சத்ரு சம்ஹார" யாகம் வளர்த்து, வேத மந்திரங்களைக் கூறி, சக்தியேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்.
அந்த வேத விற்பன்னர்களும் அப்படியே செய்தனர். ஆனால் அவர்கள் சனாதன ஹிந்து மதக் காப்பாளர்கள் என்பதால் மேக்ஸ்வெல்லுக்கு இரண்டு கண்டிஷன்கள் வைத்தார்கள்.
அது என்ன தெரியுமா?
"நாங்கள் உங்கள் பேட்டுக்கு சக்தி ஏற்றிக் கொடுக்கிறோம், ஆனால் அதை நீங்கள் ஹிந்து தர்மத்தைக் காக்கும் பாரத தேசத்துக்கு எதிராக மட்டும் பயன்படுத்தக் கூடாது, வேறு வழியே இல்லாத, ஸ்பெஷல் ஆட்டம் தேவைப்படும்போது, அதுவும் பாரதம் அல்லாத அணிக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று சொன்னார்கள்.
மேலும் இரண்டாவது கண்டிஷனாக "இந்த பேட்டின் சக்தியை மனதால் சந்தேகப்பட்டு சோதித்துப் பார்க்கக் கூடாது, அதனால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும்" என்றும் எச்சரித்தார்கள்.
மேக்ஸ்வெல்லும் அதை ஏற்றுக் கொண்டார்.
நேற்று 90 ரன்களுக்கு 7 விக்கெட் என்று ஆஸ்திரேலிய அணி தத்தளித்தபோது, அவரது பேட்டுக்கு சத்ரு சம்ஹார யாகம் செய்து கொடுத்த வேத விற்பன்னர்கள் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்பு கொண்டு, மேக்ஸ்வெல் இப்போது விருப்பப்பட்டால் அந்த ஸ்பெஷல் பேட்டைப் பயன்படுத்தலாம் என்று பச்சை... ச்சேச்சே... காவிக்கொடி காட்டினார்கள்.
அந்த சிக்னலைப் புரிந்து கொண்ட மேக்ஸ்வெல் அந்த சக்தி வாய்ந்த பேட்டை எடுத்துக்கொண்டு களமிறங்கினார். அதுவும் யாருக்கு எதிராக என்பது இன்னேரம் இந்த உலகத்துக்கே தெரிந்திருக்கும்.
ஆனால் களத்துக்குள்ளே போன பிறகு, வேத விற்பன்னர்களின் எச்சரிக்கையையும் மீறி, மேக்ஸ்வெல்லுக்கு தனது பேட்டின் சக்தி பற்றிய சந்தேகம் வந்துவிட்டது. தெருமுனையில் விளையாடும் பில்லக்கா பசங்கள் கூட ஒற்றைக் கையால் அசால்டாகப் பிடிக்கும்படி இரண்டு கேட்ச் கொடுத்து தனது பேட்டின் சக்தியை சோதித்துப் பார்த்தார். பந்தோ, சனாதன எதிரிகளின் கைகளுக்கே போனாலும் நழுவிக் கீழே விழுந்தது. ரன்களுக்கு ஓடாமல் நடந்து பார்த்தார். அந்த பேட் இருக்கும் வரை அவரை ரன் அவுட் மட்டுமல்ல, வாக் அவுட் கூட செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்.
பிறகு அவர் செய்ததெல்லாம் சும்மா நின்று கொண்டு அந்த பேட்டால் பந்தைத் தொட்டது மட்டும்தான். அந்த சக்தியேற்றப்பட்ட பேட்டில் பட்ட எல்லா பந்துகளும் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் அலறியடித்துக் கொண்டு பறந்தன.
ஆரம்பத்தில், வேத விற்பன்னர்களின் எச்சரிக்கையையும் மீறி, சத்ரு சம்ஹார யாகத்தின் மகிமையையும், வேத மந்திரங்களின் சக்தியையும் சந்தேகப்பட்ட ஒரே காரணத்துக்காக மேக்ஸ்வெலுக்கு உடலெங்கும் க்ராம்ப் வந்து நடக்கவே சிரமப்படவும் நேர்ந்தது என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இதுவே நமது வேத மந்திரங்களின், சத்ரு சம்ஹார யாகங்களின் சக்தி.
இதே சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து, வேத மந்திரங்கள் கூறி சக்தி ஏற்றப்பட்ட பொருள், இந்தப் பெருமை மிகு பாரத வர்ஷத்திலே இன்னொன்றும் உண்டு, அதுதான் நமது தேர்தல்களில் பயன்படும் ஈவிஎம், அதாவது எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் என்பது.
அதைத்தான் நமது ஜி, இது வரை நடந்த தேர்தல்களில் பயன்படுத்தினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசம் முழுவதும் பயன்படுத்தவும் போகிறார். அதனால்தான் சொல்கிறோம், அவரை வெல்லவே முடியாது என்பதுதான் நிஜம் என்று. ஆனால் அதன் சக்தி பற்றி நமது ஜி க்கு மேக்ஸ்வெல்லைப் போல எந்த ஒரு சிறு சந்தேகமும் கிடையாது என்பது நம்மில் கித்னா பேருக்குத் தெரியும்?
சந்தேகத்தின் பலன் கால்வலி...
நம்பிக்கையின் பலனோ பிரதமர் பதவி...
ஜெய் ஸ்ரீராம்...

இரண்டாவது பதிவு

மேக்ஸ்வெல் தனது கிரிக்கெட் பேட்டுக்கு சத்ரு சம்ஹார யாகம் செய்து சக்தியேற்றிய பதிவு பல ஷேர்கள் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
சில சங்கிகள் கூட வழக்கம்போல அது சர்காஸ்டிக் போஸ்ட் என்பது புரியாமல் ஷேர் செய்த கூத்துகளையும், அதில் நண்பர்கள் என்னை டேக் செய்ததையும் பார்த்தேன்.
சில தீவிர பக்தர்கள் இன்பாக்ஸில் வந்து கடுமையாகச் சாடியிருக்கிறார்கள். நட்பு வட்டத்தில் இல்லை என்பதால் பாதி ஸ்பேமுக்கு போய்விட்டது.
அதெல்லாம் கூட பரவாயில்லை. ஒரு அதிதீவிர மோடி பக்த் ஒருவர் இன்பாக்ஸில் வந்து "ஜீ இந்த மாதிரியெல்லாம் எழுதாதீங்க ஜீ, நம்மளை எல்லாரும் கிண்டல் பண்றதுக்கு நாமளே இடம் கொடுத்த மாதிரி ஆயிடும். ஏற்கனவே பல திராவிடியாக்கள் இந்த போஸ்ட்ட ஷேர் பண்ணி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க" என்று உளவுத் தகவல் சொல்லியிருந்தார்.
"அப்படியா ஜீ, நானே சங்கிகளை கிண்டல்தான் பண்ணியிருக்கேன், அது கூடப் புரியாததாலதான் நீங்க ஓரு சங்கியா இருக்கீங்க ஜீ" என்று பதில் அனுப்பினேன்.
ப்ரொஃபைல் பிக்சர்ல திருநீறு, பட்டையெல்லாம் வச்சுக்கிட்டு பக்திமானா இருந்தாப்ல, ஆனா இதுக்கே, அம்புட்டு கெட்ட வார்த்தை பேசறாப்லப்பா...
ஃபிரண்டே ஆகாம, ப்ளாக் பண்ணிட்டாப்ல... ப்ச்ச்...
சநாதன தர்மத்துக்கு வந்த சோதனை...
ஆழ்ந்த சோகங்கள்...
சிரிக்காதீங்கய்யா, மழை நேரத்துல மனசுக்கு வருத்தமா இருக்கு.

மனசு முழுதும் எரிச்சல் மண்டிப் போயிருந்த நேரத்தில் அதை லேசாக்கிய பதிவு இது. முதல் பதிவை சங்கிகள் நம்பியதில் வியப்பேதும் இல்லை. அறிவார்ந்த சிலரே சில நேரம் பொய்களை ஏற்றுக் கொள்ளும் போது முட்டாள் சங்கிகள் பகடியை புரிந்து கொள்ளாததில் வியப்பிற்கான அவசியம் இல்லையே!

No comments:

Post a Comment