சங்கிகள் சூழ் ஆட்டுக்காரன் அரசியல் குழுவில்
பார்த்த பதிவு கீழே உள்ளது. புதிய தலைமுறை செய்தியை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ்.ரெவிக்கு
துதி பாடிக் கொண்டிருந்தார்கள்.
டெல்லி துணை நிலை ஆளுனருக்கான அதிகாரம் குறித்து
தெளிவான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஏன் பஞ்சாப் விஷயத்தில் பல்டி அடித்தது என்று
தேடிப்பார்த்தால் கிடைக்கும் உண்மை வேறு.
பஞ்சாப் ஆளுனருக்கு உச்ச நீதிமன்றம் குட்டுதான்
வைத்துள்ளது.
“நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
கிடையாது. மாநில அரசுகள் நீதிமன்றத்திற்கு
வரும் வரை ஆளுனர்கள் ஏன் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறீர்கள்?”
என்று சூடாக கேட்டுள்ளார்கள்.
இந்த செய்தியை திரித்து எழுதியதன் மூலம் புதிய
தலைமுறை தன்னுடைய பெயரை சங்கித் தலைமுறை என்று மாற்றிக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment