திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜை சங்கிகள் நாய்களைப் போல கடித்துக் குதறியிருக்கிறார்கள். கர்னாடகாவில் போலீஸில் புகார் கொடுத்து வழக்கு பதிந்துள்ளார்கள்.
அதற்கு என்ன காரணம்?
ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்ட படமும் செய்தியும்.
என்ன அது?
இதுதான்
வாவ், நிலவிலிருந்து சந்திராயன் அனுப்பப்போகும் முதல் புகைப்படம் இதுவாக இருக்கும் என்று அவர் எழுதியிருந்தார்.
இதற்குத்தான் சங்கிகள் குதி குதி என்று குதித்தார்கள்.
அந்த மூடர்கள் அறியாத ஜோக் ஒன்று உண்டு,
ஆர்ம்ஸ்டிராங்கும் ஆல்ட்ரினும் நிலவில் கால் வைத்த போது ஒரு கேரள டீக்கடைக்காரர் கையில் டீ க்ளாஸுடன் அவர்களை வரவேற்றார் என்பது அந்த ஜோக்.
இதே ஜோக்கை டென்சிங்கும் ஹில்லாரியும் எவரெஸ்டை அடைந்த போது நிகழ்ந்ததாகவும் சொல்வார்கள்.
எனக்கு பெயர் மறந்து போன ஒரு திரைப்படத்தில் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் பாதாள சாக்கடை வழியாக பயணிக்கும் விவேக் கையில் டீ க்ளாஸோடு வருவார். உள்ளே ஒரு நாயர் டீக்கடை போட்டுள்ளதாகவும் சொல்வார்.
இந்த ஜோக்கை புரிந்து கொள்ள முடியாத மாட்டு மூளைக்காரர்களால், சந்திராயன் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்தவுடன் எடுத்த முதல் புகைப்படம் என்பதில் சந்திராயனின் வெற்றி சொல்லப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
டீ விற்பவர் படம் போட்டவுடன் டிமோ வை குறிப்பதாக நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல . .
அடேய்களா, டீ விற்றதாக அந்தாள்தானய்யா கதை விட்டான்! அதை கூட புரிந்து கொள்ள முடியாத மாட்டு மூளைக்காரர்கள்தானே நீங்கள்!
ஒரு நாடு மிகவும் வளமாகவும் மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் இருக்கிறார்கள் என்றால் ,
ReplyDeleteஅந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியில்லை என அர்த்தம் .
மாட்டு மூளை கொண்ட ஒருவரால்தான் இப்படி முட்டாள்தனமான பின்னூட்டத்தை எழுத முடியும்
Delete