நாங்குனேரி சம்பவம் படிக்க மனம் பதை பதைத்தது. சக மாணவனை வெட்டிக் கொல்ல துணியும் அளவிற்கு மாணவர்கள் மனதில் ஜாதி வெறி ஊறிப் போனது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ரத்தம் தோய்ந்த படிக்கட்டுக்கள் கொடுத்த வேதனையை வார்த்தையில் விவரிப்பது கடினம்.
வேங்கைவயல், நாங்குனேரி போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய களங்கம்.
இப்பிரச்சினை குறித்து ஆராய நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்துள்ளது நல்லது.
குழு அமைப்பது போதாது. அளிக்கும் பரிந்துரைகளை நேர்மையாக அமலாக்க வேண்டும்.
இச்சூழலில்தான் சின்ன டாக்டரின் அறிக்கை. . .
யார் எதைச் சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. ஜாதி வெறியை பரப்புவதும் அதை தக்க வைப்பதிலும் நிலைக்க வைப்பதிலும் இவரும் இவர் அப்பாவும்தான் மிகப் பெரிய குற்றவாளிகள். சாதி என்பது ஒரு அழகிய சொல் என்று வர்ணித்தவரும் இவரே . . .
இப்படியெல்லாம் எரிச்சலூட்டும் அறிக்கை தருவதற்குப் பதில் அன்புமணி வகையறாக்கள் அமைதியாக இருக்கலாம்.
இதுதான் திராவிட கருத்தியலா, பெரியாரிசமா. முற்போக்கா, அதுவா இதுவா என்று இதுதான் வாய்ப்பு என்று சங்கிகள் ஓவராக குதிக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள வேண்டும்.
நாங்குனேரி சம்பவம் மட்டுமல்ல அனைத்து ஒடுக்குமுறை நிகழ்வுகளுமே சங்கிகள் உயர்த்தி பிடிக்கும் மனு தர்மத்தின் வெளிப்பாடு. சாதி படிம நிலைகள்தான் சாதி ஒழிப்பிற்கான தடையாக உள்ளது. 2000 ஆண்டுகள் ஊறிப்போன ஒரு சூழலை மாற்ற ஐம்பதாண்டுகள் போதுமானதல்ல. அப்படி மாற்ற விடாமல் தடுக்கும் சக்திகளும் அவர்கள்தான்.
முற்போக்கு சிந்தனைகள் இம்மண்ணில் விதைக்கப்பட்டிராவிடில் நிலைமை இன்னும் கேவலமாக இருந்திருக்கும், உபி, மபி, குஜராத், ஹரியானா போல..
No comments:
Post a Comment