மொட்டைச்சாமியார்
உருவாக்கிய மோசமான அடக்குமுறைக் கலாச்சாரமே புல்டோசர் மூலம் போராடுபவர்வர்களின் வீடுகளை
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி இடிப்பது.
மொட்டைச்சாமியார்
இடித்த வீடுகள் இஸ்லாமியர்களின் வீடுகள்தான் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அவற்றில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகள் அல்லது அமைதியாக ஜனநாயக வழியில் போராடியவர்கள்.
மொட்டைச்சாமியார்
வழியில் ஹரியானா முதல்வரும் செல்கிறார்.
“நூஹ்”
நகரத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று பலரது வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன.
கலவரத்தின்
போது சிக்கிக் கொண்ட ரவீந்தர் போகட், மற்றும் அவருடைய இரு நண்பர்களுக்கு அடைக்கலம்
கொடுத்து உணவும் கொடுத்து பாதுகாத்த அணீஷ் என்பவரின் வீடும் புல்டோசருக்கு தப்பவில்லை.
புல்டோசரை
ஏவுவது வீரம், இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் என்றெல்லாம் சங்கிகள் பீற்றிக் கொள்கிறார்கள், தண்டனை
அளிப்பதை நீதிமன்றத்துக்கு பதிலாக ஆட்சியாளர்களே எடுத்துக் கொள்வது சட்ட விரோதம் என்பதைப்
பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. வீடுகளை இடிப்பது என்றொரு தண்டனை இந்திய சட்டங்களில்
இல்லவே இல்லை. வீடுகள் இடிக்கப்பட்டவர்கள் அப்பாவிகளாக இருந்தால் அவர்களுக்கு மறுபடியும்
வீட்டை கட்டித் தருவார்களா?
உண்மையான
குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை பதிந்து உரிய சாட்சிகளோடு
தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாத கையாலாகததனத்தைத்தான் இப்படி சட்ட விரோத நடவடிக்கைகள்
மூலம் மூடி மறைக்கிறார்கள்.
இனிமேல்
எவனாவது புல்டோசர் அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தி பேசவோ எழுதவோ செய்தால் அவன் மானத்தை
வாங்கி விடுங்கள். கோழைத்தனமான நடவடிக்கையை ஆதரிப்பவனுக்கெல்லாம் மானம் ஒரு கேடா?
No comments:
Post a Comment