ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தின் புதிய கட்டிடத்
திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டு ஆதினங்கள் சென்றதிலிருந்து ஆதீனங்கள் பற்றிய
பில்ட் அப் அதிகமாகி விட்டது. அதனால் அந்த ஃபர்னிச்சரை கொஞ்சம் உடைத்தால் நன்றாக
இருக்குமே என்பதால்தான் இப்பதிவு.
மதுரை ஆதீனம்.
முக்கியமான நான்கு நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர்
நிறுவியதாக சொல்லப்படுகிறது. பார்வதி இவருக்கு ஞானப்பால் கொடுத்ததாக சொல்லப்படும்
புனைவில் தொடங்குகிறது இவரது வரலாறு. சமணர்களை அனல்வாதம், புனல்வாதத்தில் இவர்
வென்றார் என்று சொல்லப்படும் வரலாறு முழுக்க முழுக்க அறிவியலுக்கு முரணானது.
எண்ணாயிரம் சமணர்களை பாண்டிய மன்னன் மூலம் கழுவேற்ற வைத்ததன் மூலம் உலகில்
இனப்படுகொலை செய்த முதல் பயங்கரவாதி, ஹிட்லர், டிமோவுக்கு முன்னோடி.
இப்போதுள்ள மதுரை ஆதீனத்துக்கு முந்தைய ஆதீனம் சரியான காமெடி
பீஸ். துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்குப் போவேன் என்பது முதல்
எம்.ஜி.ஆர், ஜெ, சசிகலா ஆகியோருக்கு ஆதரவாக இவர் விடாத அறிக்கைகளே இல்லை.
நித்தியிடம் ஐந்து கோடி வாங்கிக் கொண்டு அடுத்த ஆதீனமாக முடி சூட்டியவர். இருவரும் சேர்ந்து அடித்த கூத்துக்கள் பல வார
இதழ்களில் கவர் ஸ்டோரிகளாகவே வந்தது. கடும் எதிர்ப்பால் நித்திக்கு கொடுத்த பதவி
ரத்து செய்யப்பட, சமீபத்தில் அவரும் மண்டையைப் போட இன்றைய ஓசி ப்ளைட் ஆதீனத்திற்கு
அடித்தது லாட்டரி.
திருவாடுதுறை ஆதினம்.
இப்போதுள்ள ஆதீனம் “என்னை மற்றவர்கள் தூக்கும் பல்லக்கில்தான்
பட்டிணப்பிரவேசம் வருவேன்” என்று அடம் பிடித்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்.
இவருக்கு முந்தைய சாமியாரை கொலை செய்ய முயற்சி நடந்தது.
கொலைக்கு திட்டம் போட்டு பணம் கொடுத்தது வருங்கால ஆதீனமாக பட்டம் கட்டப்பட்ட இளைய
தம்பிரான் என்று சொல்லப்பட்டது. பத்து
வருடத்துக்கு மேல் கேஸ் நடந்து கடைசியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.
சொத்து பிரச்சினை காரணமாக ஆதீனம் என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டார் என்பது
இளைய தம்பிரான் குற்றச்சாட்டு.
இந்த சொத்து பிரச்சினை இப்போதும் நீடிக்கிறது. இப்போதுள்ள
ஆதீனம் தனது வாரிசாக பட்டம் கட்டிய கட்டளைத் தம்பிரானுக்கும் பாஜக நகரச்
செயலாளருக்கும் “கோயில் குளங்களை தூர் வாரும் போது வெளியேற்றும் மணலை யார்
விற்பது” என்பதில் பிரச்சினை. பாஜக நகரச் செயலாளர் என்னை கொலை செய்ய முயற்சித்தார்
என்று ஆதீன வாரிசு போலீஸில் புகார் எல்லாம் கொடுத்தார். ஆனால் இறுதியில் வென்றது
பாஜக நகரச் செயலாளர்தான். வாரிசின் பதவி பறிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்
பட்டார்.
இந்த ஆதீனத்தை வைத்துத்தான் ஆரென் ரவியும் ஆடிட்டர் விஷ
மூர்த்தியும் செங்கோல் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
மற்ற ஆதீனங்கள்
திருப்பனந்தாள் மடம், தருமபுரம் ஆதீனம், திருப்பறாய்த்துறை
ஆதீனம் ஆகியவையும் வாரிசுச் சண்டைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவைதான்.
பேரூர் ஆதீனம் போல சில ஆதீனங்கள் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்
நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள்தான்.
காவி அணிந்த நல்ல சாமியார் என்று இது நாள்வரை மதித்திருந்த
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் டிமோ வலையில் விழுந்ததுதான் மிகவும்
அதிர்ச்சியளித்தது.
இந்து அற நிலையத்துறையின் கைகளில் கோயில்கள் இருக்கக்கூடாது
என்று சங்கிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் எப்படி உள்ளன?
சமீபத்தில் திருவாடாதுறை மற்றும் தருமபுரம் ஆதீனங்களின்
கட்டுப்பாட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில், சூரியனார் கோயில், கஞ்சனூர் கோயில்,
திருக்கொள்ளிக்காடு ஆகிய கோயில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கொஞ்சம் கூட பராமரிப்பு இல்லாத, வௌவால்களின் வேட்டைக்காடாக,
துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிற, பாசி படிந்த தரைகளோடு இருள் படிந்து
காணப்படுபவைதான் இக்கோயில்கள். கோயில்கள் மூலம் வரும் பணத்தை கல்லா கட்டுவதுதான்
ஆதீனங்களின் பணி.
இந்திய வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த தோழர்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதிய “யார் கைகளில் இந்துக் கோயில்கள்?” நூலில் இந்து
அறநிலையத்துறையின் இணை ஆணையாளராக இருந்த திரு ஜெயராமன் ஆதீன ஊழல்கள் பற்றி நிறைய
பேசியிருப்பார். அந்த நூலை தேடிப் பிடித்து அந்த பக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
சங்கிகள் எதைத் தொட்டாலும் அவை தேவையில்லாத ஆணிகளே, ஆதீனங்கள்
உட்பட.
No comments:
Post a Comment