Sunday, December 18, 2022

ஆட்டுக்காரா, ரஃபேலே . . .

 


மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் வாட்ச் கட்ட நான்கு ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்து என்று சொல்லும் ஆட்டுக்காரனுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது கேள்வி.

டீ விற்றதாக கதை அளக்கும் ஏழைத்தாயின் மகனின் ஆடம்பர, ஊதாரித்தனத்துக்கு  எங்கிருந்து காசு வருகிறதோ, அதே வழியில்தான் ஆட்டுக்காரனுக்கும் வந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதைப் பற்றிய கேள்விக்கு ஆட்டுக்காரன் பதில் சொல்லாமல் ரபேல் விமானத்தின் பாகங்கள் இதிலும் உள்ளது. நான் தேசியவாதி அதனால்தான் அணிந்துள்ளேன். உயிர் உள்ளவரை கட்டிக் கொள்வேன் என்ற பதில்தான் சிரிப்பை வரவழைத்து விட்டது.

அடேய் ஆட்டுக்காரா, ரபேல் என்பது உந்தலைவன் மோடியின் ஊழலின் அடையாளம். முறைகேட்டிற்கு உதாரணம் ரபேல், இந்தியாவின் இளிச்சவாய்த்தனத்திற்கு உதாரணம் ரபேல்.

ஆமாம். அதை கட்டுபவர்கள் எல்லோருமே ஊழல்வாதிகள்தான்.

நீ ஒரு ஊழல்வாதி. மத்தவங்க பெயரையும் வரிசையா சொல்லிடு பார்ப்போம். 

1 comment:

  1. நான் பள்ளியில் படிக்கும்போது புத்தகத்தில் மயிலறகு வைத்திருந்தேன், மயில் தேசியப்பறவை அதனால நான் தேசியவாதி.
    போடா ம.....!

    ReplyDelete