Thursday, December 15, 2022

முதல் சீனை மறந்துட்டீங்க டைரக்டர்

 

நேற்று முன் தினம்  மாலை கையில் காபி டம்ப்ளரோடு டி.வி முன் அமர்ந்திருந்த போது ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ரஜினிகாந்தின் எஜமான் திரைப்படம் துவங்கியிருந்தது. அபத்தமான கதையம்சம் கொண்ட படம் அது என்றாலும் காபி டம்ப்ளர் கையில் இருந்ததால் ரிமோட்டை தேடவில்லை.

 மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்துவாசி புல்லரித்துப் போய் “எங்க எஜமான் நடந்த காலடியில கூட நாங்க நடக்க மாட்டோம். எப்படி விலகி நடக்கறோம் பாருங்க” என்பார். ரஜனி நடுவில் நடக்க அவருக்கு இரு புறமும் கோடு கிழித்தது போல நடந்து போய்க் கொண்டிருப்பார்கள். “எங்க எஜமான் காலடி பட்ட மண்தான் எங்களுக்கு திருநூறு” என்று காலடி மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்வார். ரஜினி ரசிகர்கள் புல்லரித்து விசிலடிக்கும் காட்சி இது.


இதற்கு முந்தைய சீனை பாவம் இயக்குனர் மறந்து விட்டார். அந்த கிராமவாசியும் கூட.

 நான் குறிப்பிட்ட சீனுக்கு முந்தைய காட்சியில்தான் ரஜனி அறிமுகக் காட்சி வரும். அதிலே ரஜினி மக்களோடு நடந்து வருகையில் மக்கள் எல்லாம் விலகி நடக்க மாட்டார்கள். ரஜனி நடந்த வழியாகவே நடப்பார்கள்.  

ரஜினி நடந்த காலடியின் மீது நாம் நடக்கக்கூடாது என்ற சம்பிரதாயம் அப்போது அந்த மக்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா இல்லை அப்படி ஒரு சீன் முன்பு வைத்ததை டைரக்டர் மறந்து விட்டாரா என்று தான் தெரியவில்லை/


என்ன ஆர்.வி.உதயகுமார் இயக்கிக் கொண்டிருந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லை. அதனால் அவர் தப்பித்தார்.


பிற்போக்குத்தனமான நிலவுடமையாளர்களான ஜமீன்தார்கள், பண்ணையார்களை புனிதப்படுத்தும் வேலையைத்தான் அவரது பெரும்பாலான திரைப்படங்கள் செய்து கொண்டிருந்தது என்பதால்தான் இந்த பதிவு எழுத வேண்டும் என்றே தோன்றியது.

 

பிகு: காலடி மண்ணை திருநூறாக பூசிக் கொள்வது கூட அவரது கற்பனை இல்லை. அக்னிசாட்சி படத்தின் “கனா காணும் கண்கள் மெல்ல” பாடலில் வாலி எழுதிய

 

நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால் தான் உன் நிழல் விழுந்த
நிலத்தின் மண்ணைக் கூட
என் நெற்றியில் நீறு போல் திருநீறு போல்
இட்டுக் கொள்கிறேன்

 

என்ற வரிகளைத்தான் அவர் சீனாக்கி விட்டார்.

2 comments:

  1. இதைவிட அபத்தமான விசயம் மனைவி வளைகாப்பு வரையில் கணவனிடம் கர்ப்பிணியாக நடித்து தான் கர்ப்பம் இல்லை என்று சொல்வது.

    தமிழக மக்களை கேனயர்களாக நினைப்பதற்கு காரணம் இப்படி படங்களை வெற்றியடைய வைப்பதால்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அதைத்தான் அபத்தமான கதையம்சம் கொண்ட படம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

      Delete