சங்கிகளின் முட்டாள்தனமான, சமீபத்திய வெற்றுப் பீற்றல் என்ன தெரியுமா?
ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. மோடியால்தான் இது சாத்தியமானது, மோடிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் இது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடேய் அற்பப் பதர்களே!
ஜி-20 தலைமை என்பது தேர்தல் மூலம் நிகழ்வதல்ல. அந்த வருட ஜி-20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை எந்த நாடு நடத்துகிறதோ, அந்த நாட்டுக்கு வழங்கப்படும் பொறுப்பு அது. அதுவும் சுழற்சி அடிப்படையில் நடப்பது.
அடுத்த வருஷம் இந்தியா துட்டு செலவு செய்யும். அதுக்காக கொடுக்கற தம்மாத்தூண்டு கௌரவம். அம்புட்டுத்தான் மேட்டரு.
இதுக்கு போய் ஏண்டா ரொம்பவும் சிலிர்த்துக்கறீங்க!
No comments:
Post a Comment