Wednesday, December 14, 2022

முட்டாள் முன்னாள் மந்திரி

 


“அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க நான் மோடியை கொல்வேன்” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் மந்திரி ராஜா பட்டேரியா  பேசி இப்போது கைதாகியுள்ளார்.


மோடியோடு நமக்கு லட்சம், கோடி முரண்பாடுகள் உண்டு.  அவர் பிரதமர் பதவியில் தொடரக்கூடாது என்பதுதான் தேசத்தை உண்மையாக நேசிக்கவர்கள் விரும்புகிறார்கள். அவரை மக்களிடத்தில் அம்பலப் படுத்தி தேர்தலில் தோற்கடித்து அப்பதவியிலிருந்து அகற்றுவதே  சரியான, ஒரே வழியாகும். அதை விடுத்து அவரைக் கொல்வது என்பதெல்லாம் முட்டாள்தனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அது மட்டுமல்ல இது ஒரு வெட்டி உதார். அவ்வளவுதான். கட்சித் தலைமையின் அருட்பார்வை படுவதற்கான ஒரு கவன ஈர்ப்பு வஜனம்.

இந்த வெட்டி உதார் மூலம் என்ன பாதிப்பு வருமென்பதெல்லாம் இந்த முட்டாளுக்கு தெரியவில்லை போலும். . .

சாதாரணமாகவே தேர்தல் வந்தால் மோடி  ஏராளமான டயலாக்   விடுவார். கடந்த நாடாளுமன்றத்தில் வெற்றி பெற உளவுத்துறை எச்சரிக்கை இருந்தும் புல்வாமாவில் ராணுவ வீரர்களை சாக விட்டவர். என்னை கொல்ல பாகிஸ்தானில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று சீன் போட்டார். அதற்கு முன்பாக உபி தேர்தல் நடந்த நேரத்தில் இயல்பாக நடந்த ஒரு  ரயில் விபத்தை எல்லைக்கு அப்பால் நடந்த சதி என்று பிரச்சாரம் செய்து மொட்டைச் சாமியாரை முதலமைச்சராக்கினார்.

என்னத்தான் குஜராத்தில் ஜெயித்திருந்தாலும் அது கேஜ்ரிவாலும் ஓவைசியும் செய்து கொண்ட பேக்கரி டீலிங்கின் வெற்றி என்பது மோடியின் உள் மனதுக்கு தெரியுமல்லவா! 2024 க்கு என்ன நாடகம் நடிகலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த மோடிக்கு அதே “உயிருக்கு அபாயம்” நாடகம் போட இப்படி ஆதாரத்துடன் ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுத்த அந்த மந்திரியை எப்படி திட்டுவது!

முட்டாள்! முட்டாள்!! முட்டாள் !!!

No comments:

Post a Comment