இந்திய வரலாற்றின் கருப்பு தினம். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த நாள்.
1)    
இந்தியப் பொருளாதாரத்தை நிலை குலையச் செய்த நாள்.
2)    
வங்கிகள் வாசலில் மக்களை கால் கடுக்க நிற்க வைத்த நாள்,
3)    
கையில் மை வைத்து இந்தியர்களை அசிங்கப்படுத்திய நாள்.
4)    
ரஜினிகாந்த், புளிச்ச மாவு ஆஜான் போன்ற பொருளாதார மேதைகளை
உருவாக்கிய நாள்.
5)    
ஆளும்கட்சிக்காரர்கள் முன் கூட்டியே தகவல் தெரிந்து தங்கள்
கையில் இருந்த நோட்டுக்களை முன்பே மாற்றிய மோசடிக்கு வழி வகுத்த நாள்,
6)    
ஊழல் பேர்வழிகள் பதுக்குவதற்கு வசதியாக 1000 ரூபாய் நோட்டுக்கு
பதிலாக 2000 ரூபாய் நோட்டு வந்த நாள்.
7)    
மக்கள் அவதிப்பட்ட நேரத்தில் பாஜககாரர்களுக்கும் சேகர் ரெட்டி
போன்ற முதலாளிகளுக்கும் பெட்டி பெட்டியாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்த
நாள்.
8)    
சிப்பு வைத்த நோட்டு. அதனால் பதுக்க முடியாது என்று
எஸ்.வி.சேகர்களும் விஷமூர்த்திகளும் காமெடி செய்த நாள்.
9)    
கருப்புப் பணமும் ஒழியாமல் கள்ள நோட்டும் ஒழியாமல்
புழக்கத்தில் இருந்த பணம் அனைத்தும் வங்கிகளுக்கே வந்து சேர்ந்து அரசின் வாதம்
அனைத்தும் ஜூம்லாவான நாள்.
மொத்தத்தில் மோடி எனும் முட்டாள், இந்தியர்கள் அனைவரையும்
முட்டாளாக்கிய நாள். 

No comments:
Post a Comment