மூத்த
தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முகநூல் பக்கத்தில்தான் ராகுல் காந்தியின் இந்த புகைப்படங்களைப்
பார்த்தேன்.
இந்து
வாக்காளர்களை ஈர்க்க ராகுல் காந்தி போட்டுள்ள வேஷம் என்பது நன்றாகவே தெரிகிறது.
மோடி
செய்யும் அதே ஏமாற்று வேலையை அரவிந்த் கேஜ்ரிவால் ரூபாய் நோட்டில் லட்சுமி படம் போட
வேண்டும் என்று சொல்வதன் மூலம் செய்தார். நான் மட்டும் உங்களுக்கு சளைச்சவனா என்று
இப்போது ராகுல் காந்தியும் வேஷம் கட்டி விட்டார்.
அனைவருமே
இப்படி மத வெறி சாக்கடையில் மூழ்கினால் எதிர்காலம் என்ன ஆகும்?
இந்திய
ஒற்றுமைப் பயணத்தின் மூலம் கிடைத்த நல்ல பெயரை மோடியை நகலெடுப்பதன் மூலம் இழக்கிறார்
ராகுல் காந்தி.
அப்பா செய்து கொண்ட சமரசம்தான் இந்தியாவில் இன்று மத வெறி
தலை எடுக்க காரணம் என்பதை புரிந்து கொண்டு கொள்ளு தாத்தாவினை பின்பற்றினால் அவருக்கு
நல்லது.
No comments:
Post a Comment