பஞ்சாப்
மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா என்பவர் அரசு டெண்டரில் 1 % லஞ்சம்
கேட்ட காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப்
முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.
சில
கேள்விகளும் இயல்பாகவே எழுந்தது.
ஆட்சி
அனுபவம் இல்லாத ஆட்கள் இவர்கள். பதவிக்கு வந்து இரண்டு மாதங்கள் முழுமையாக முடியாத
நிலையிலேயே பணம் சம்பாதிக்க துடிக்கிறார்கள் என்றால் அவர்களின் பின்னணி என்ன? ஊழலுக்கு
எதிரான அமைப்பு என்றே அறியப்படும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரே லஞ்சம் வாங்குபவர்
என்றால் மற்றவர்கள் எப்படி? இந்த சம்பவம் தனித்த நிகழ்வா அல்லது பானைச் சோறுக்கான உதாரணமா?
மந்திரியோடு
அவரது சிறப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகார வர்க்கம் யார் ஆட்சிக்கு
வந்தாலும் மாறாது. தன் குணாம்சத்தின் படியே செயல்படும் என்பதை சொல்கிறது இந்த சம்பவம்.
No comments:
Post a Comment