சங்கிகளுக்கு எரிச்சல் வந்தால்!
நேற்று இறந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இந்தி நடிகர்
ஷாருக்கான் இஸ்லாமிய முறையிலும் அவரது மேனேஜர் இந்து முறையிலும் அஞ்சலி
செலுத்தியுள்ளனர்.
அதனை சங்கிகள் விமர்சித்து வருகிறார்கள்.
ஒரு விஷயம் சங்கிகளை எரிச்சல் பட வைத்தால் அது மிகவும்
நல்லதொரு விஷயம் என்று தான்அர்த்தம்.
இதிலே அவர்களுக்கு என்ன எரிச்சல்?
ஷாருக்கான் மேனேஜர். தன் முதலாளியை பின்பற்றாமல் சுதந்திரமாக
செயல்படுவது மட்டும் சங்கிகளுக்கு எரிச்சலை தரவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை
அங்கே வெளிப்படுவதுதான் அவர்களுக்கு கோபம். அவர்களின் பொய்ப் பிரச்சாரம் ஒன்று
தகர்ந்து போவதையெல்லவா இந்த படம் காண்பிக்கிறது!
தேவையில்லாமல் மோடி புகழ் பாடிய ஷாருக்கானுக்கு இது தேவைதான்.
No comments:
Post a Comment