பேராண்மை, இயற்கை, ஈ, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற
வித்தியாசமான திரைப்படங்களை அளித்த இயக்குனர் தோழர் எஸ்.பி.ஜனநாதன் இன்று
காலமானார்.
மக்களுக்கு தேவையான பல கருத்துக்களை தன் படங்களின் மூலம்
தொடர்ந்து சொல்லி வந்த இயக்குனர் அவர். உலகமயத்தின் தீமையையும் கார்ப்பரேட்டுகளின்
பேராசையையும் அவர் படங்கள் அம்பலப் படுத்தியுள்ளன.
வெறும் நேரடிப் பிரச்சாரமாக அல்லாது அனைவரும் ரசிக்கக் கூடிய
விதத்தில் காட்சிகளை திரை மொழியிலேயே அமைத்திருப்பார். முற்போக்கு சிந்தனைகளை கலை
வடிவத்தில் தந்த இயக்குனரின் அகால மரணம் திரைத்துறைக்கு ஓர் பேரிழப்பு
தோழர் எஸ்.பி,ஜனநாதன் அவர்களுக்கு இதய அஞ்சலி.
பேராண்மை திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி
No comments:
Post a Comment