தான்
உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிக்கு இல்லை என்று
இத்தனை நாள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டிருந்தேன்.
இப்போதுதான்
அது தவறு என்று தெரிகிறது.
வெங்காயமே
தன் விலையை நிர்ணயித்துக் கொண்டு உயர்ந்து போய் விட்டதே! தானே தன் விலையை நிர்ணயத்திக்
கொண்ட முதல் விவசாய உற்பத்திப் பொருளான வெங்காயத்திற்கு மனமார்ந்த நன்றி.
அத்தியாவசியப்
பொருட்கள் தடைச்சட்ட,ம் அகற்றப்பட்டதால் பதுக்கல் அதிகமாகி விலை உயர்ந்து விட்டது என்று
மத்தியரசு மீதும் பதுக்கல் பேர்வழிகள் மீதும் கோபப்பட்டது தவறு என்பதை மய்யமாக உணர்த்தியதற்கு
நன்றி திரு கமல் அவர்களே!
திரும்பவும் வெங்காயம் விலையேறிப் போச்சா...?
ReplyDeleteஅதிகமில்லை ஜெண்டில்மேன். கிலோ ஜ்ஸ்ட் 100 ரூபாய்தான்
Deleteகமல்தான் அவரது கட்சிக்கு முதல்வர் வேட்பாளர். அவர் முதல்வரானால் கவிதைபாடியே விலைவாசியை குறைத்துவிடுவார். எனவே அவருக்கே வாக்களித்து அவரை முதல்வராக்குவோம்!!!!!!
ReplyDelete