Saturday, October 31, 2020

சிங்கத்தோடு எப்போ போஸ் மோடி?

 


அம்மா, ராணுவ வீரர்கள், மயில், வாத்து, நாய் ஆகிய செட் ப்ராப்பர்டிகளோடு போஸ் கொடுத்த மோடி புதிதாக கிளிகளோடு போஸ் கொடுத்து ஒரு போட்டோ ஷூட் நடத்திய மோடி எப்போது கூண்டில் அடைக்கப் படாத சிங்கத்தோடோ, புலியோடோ எப்போது போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்கப் போகிறார்?

 

அவருதான் 56 இஞ்ச் மார்பு கொண்ட வீரராச்சே!

 அவரால முடியாதா என்ன?

 

பாட்டு கேட்ட பிறகு . . . .

நாசர் -ராஜா -ஹிட்டான பாட்டு






" தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" என்ற பாடல் உருவானது பற்றி நாசர் சொல்வதே ஒரு அழகு. ஏற்கனவே பார்த்தது நேற்று மீண்டும் கண்ணில் பட்டது. 

அந்த காணொளி உங்களுக்காக



பாடல் வந்த கதையை சொல்லி விட்டு பாடலை பகிர்ந்து கொள்ளாவிட்டால் என்னை சபித்து விடுவீர்கள் அல்லவா?

உங்களுக்கு அப்படி ஒரு தர்மசங்கடம் நான் தருவேனா?

இதோ பாடல்



மாலை வேளை இனிமையாகட்டும். 

பாடலை கேட்டு விட்டீர்கள் அல்லவா!


சரி, வாருங்கள்,

இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்.

இசை வாழ்க்கையை ரசனையுள்ளதாய் மாற்றும்.

ஆனால் இசையை ரசிக்க நமக்கு வாழ்க்கை வேண்டுமல்லவா?

 நம் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிற அபாயம் என்னவென்று உணர்ந்து கொண்டால்தானே அதை முறியடிப்பதற்கான உபாயத்தை தேட முடியும்!

 ஒவ்வொரு தொழிலாளி, நடுத்தர ஊழியர் ஆகியோரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது மத்தியரசின் தொழிலாளர் சட்ட திருத்தங்கள்.

 வாருங்கள் அது பற்றி அறிந்து கொள்வோம்.

 மத்திய தர ஊழியர் இணையவழி மாநிலக் கருத்தரங்கம்

 #################################################################################

31.10.2020 - சனிக் கிழமை - மாலை 6.45 மணி முதல் இரவு 8.15 மணி வரை ################# ##################################################################  *தலைமை* : தோழர் எஸ்.செல்லப்பா, *BSNLEU*

*வரவேற்புரை* : தோழர் டி.செந்தில்குமார், *AIIEA*

 *சிறப்புரை:*

தோழர் *ஆர். கருமலையான்,* அகில இந்திய செயலாளர், *CITU*

 *தொழிலாளர் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளதில் உள்ள பாதகமான அம்சங்கள்*

 *நன்றியுரை* தோழர் என். இராஜகோபால், *BEFI*

 ###################################################################################

*நவம்பர் 26 நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெல்லட்டும்*

 ***********************************************************************************

அனைவரும் வருக!

 Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/84068051428?pwd=VTBaK2d1ZC9QSHl3cCszZjNzWEdIdz09

 Meeting ID: 840 6805 1428

Passcode: alltu


தென் கொரியாவிலிருந்து ஜி.கியோன் ரியோங்

 


கிளம்பிட்டாங்கய்யா, சதுரங்க வேட்டை ஆளுங்க மறுபடியும் கிளம்பிட்டாங்க.  நேற்று எனக்கு வந்த குறுஞ்செய்தி கீழே உள்ளது.



கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் போல இது போன்ற சதுரங்க வேட்டை குறுஞ்செய்திகள் வராமல் இருந்தது. இப்போது மீண்டும் துவங்கி உள்ளது. ஆயிரம் பேரில் ஒருவர் ஏமாந்தால் கூட அவர்களுக்கு லாபமே.

எச்சரிக்கை, எச்சரிக்கை.எச்சரிக்கை.

இது போன்ற குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் டெலீட் செய்து விட்டு உங்கள் வேலையை பாருங்கள்.

ட்ரூ காலர் மூலமாக  7628812041 என்ற எண்ணை சோதித்து அந்த எண் எந்த பெயரில் உள்ளது என்பதை அறிய முயன்றேன். 

அது கொடுத்த தகவல் சுவாரஸ்யமானது

Fraud Investor Bal


Friday, October 30, 2020

புறா கறியாகியிருக்குமோ?


எங்கள் வீட்டு வாசலில் ஒரு மாதத்திற்கு முன்பு எடுத்த படம் இது. 




இந்த புறாவோடு இன்னொரு வெண்புறாவும் கறுப்பு நிற புறாவுமாக சிறகடித்துக் கொண்டிருந்தது. அலைபேசியை எடுத்து புகைப்படம் எடுப்பதற்குள் அவை இரண்டும் அலைபேசியின் எல்லைக்கு அப்பால் போய் விட்டது.

 மீண்டும் அவை வரும் என்று காத்திருக்கிறேன். ஆனால் ஒரு புறாவைக் கூட காணவில்லை.

எந்த இம்சை அரசன் அவற்றை நெய்யில் வறுத்து சாப்பிட்டானோ?


துட்டுக்கு முட்டா மாலன்?

 


கீழே உள்ளது மனசாட்சியற்ற எழுத்து வியாபாரி மாலனின் முகநூல் பதிவு.



தமிழக அரசு அரசாணை வெளியிட்ட பின்பு வேறு வழியில்லாமல் மசோதாவில் கையெழுத்து போட்டார் ஆட்டுத்தாடி புரோஹித்.  அந்த ஆளுக்கு சட்ட ஆலோசனை வேண்டுமானால் கேட்க வேண்டியது மாநில அட்வகேட் ஜெனரலிடம்தானே தவிர மத்தியரசு வழக்கறிஞரிடம் கிடையாது. 

திரு மு.க.ஸ்டாலினுக்கு புரோஹித் 22.10.2020 அனுப்பிய கடிதத்தில் கூட மூன்றிலிருந்து நான்கு வாரம் அவகாசம் தேவைப்படும் என்று எழுதுகிறார்.



அதன் பின்புதான் தமிழக அரசுக்கு அழுத்தம் அதிகமாகிறது. வேறு வழியில்லாமல் எடப்பாடி அரசாணை வெளியிடுகிறார். பிறகு ஆட்டுத்தாடி கையெழுத்து போடுகிறார்.

இதுதான் நடந்தது.

அரசாணை வராவிட்டால் கையெழுத்தும் வந்திருக்காது.

இந்த உண்மை அனைத்தையும் அப்படியே மறைத்து புரோஹித்துக்கு முட்டு கொடுக்கிற மாலன் புரோஹித்தை விட கேவலமான மனிதன். 

இதிலே தமிழர்களை வேறு  நக்கலடிக்கிறது இந்த கேவலமான ஜென்மம். 

துட்டுக்கு முட்டு கொடுக்கிற நீ முதலில் தமிழனா மாலன்?

குஷ்பு மாதா கீ ஜெய்


 போன மாதம் வரை மிகக் கடுமையாக திட்டிக் கொண்டிருந்த ஒருவரை இப்படி பாரத மாதாவாக சித்தரிக்கிறோமே என்று பாஜக ஆட்களில் ஒருவருக்காவது குற்ற உணர்ச்சி வந்திருக்குமா?

அட, வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை, சுய புத்தி, சொல் புத்தி உள்ளவனா, மனுசனா இருந்தா அவன் ஏங்க பாஜகவில் இருக்கப் போறான் என்ற உங்கள் குரங்குக் குளியல் எனக்கு கேட்கிறது.

ஆமாம்.
மானங்கெட்ட மடையர் கூட்டம்தானே அது

Thursday, October 29, 2020

அட! எட்டு வடிவேலு!!

  குஷ்பு போராட்டம் தொடர்பாக நான் ரசித்து சிரித்த இன்னொரு மீம் உங்களுக்காக . . .



 

கவர்னராக ரஜினி ????

 






அறிக்கை அவருது கிடையாதாம். ஆனால் அதிலே சொல்லப்பட்ட விஷயங்கள் கரெக்ட்தானாம்.

 எப்படியும் நீங்க அரசியலுக்கு வரப்போவதில்லை. அதை சொல்லக் கூட ஏன் இழுத்தடிக்கிறீங்க? "அண்ணாத்தே" படத்தை ஓட்டவா?

 அதனால்தான் உங்களை கவர்னாராக்க சொல்லியிருக்காங்க. அது மரண பங்கம் ரஜினி, அதிலும் கடைசி வரி சூப்பர் . . .

 உடல்நலன் கருதி ரஜினியை கவர்னராக்கி விடலாம். 
நல்ல ஓய்வு கிடைக்கும். 

 உடனடியாக முடிவெடுக்காமல் அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பதால் 100% கவர்னருக்குப் பொருத்தமாக இருப்பார். 

முக்கியமான விஷயம், ராஜ்பவனுக்கு வாடகையையோ சொத்து வரியையோ ரஜினி கட்ட வேண்டியதில்லை.

 Suguna Diwakar

 நன்றி திரு சுகுணா திவாகர்

Wednesday, October 28, 2020

ஒருவராவது பாஜகவில் உண்டா?

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் என்று அழைக்கப் படுகிற கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஒன்பது தலைவர்களும் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தனர் என்ற தகவல்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது.

 

இது போல சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு போன தலைவர் என்று ஒருவராவது பாரதீய ஜனதா கட்சியில் உண்டா?

 அந்தமான் ஜெயிலுக்கு போன ஒரே ஒரு செல்ஃபி சாவர்க்கரும் பிரிட்டிஷ் மகாராணியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு கோழை சாவர்க்கர் ஆகி விட்டார்.

 அடல் பிகாரி வாஜ்பாயோ வெள்ளையனே வெளியேறு போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த துரோகி.

 எங்களுடையது வீர,  தியாகப் பாரம்பரியம்.

பாஜகவுடையது  கோழை, துரோகப் பாரம்பரியம்

அயோக்கியர்களுக்கு பதவி கொடுப்பவர்களும் . . .

 



மருத்துவர் என்று சொல்வதற்கே அருகதை இல்லாதவன். அவன் செய்த அசிங்கம் வெளியான போதே அவனை  பாதுகாக்கும் வேலையைத்தான் செய்தது பாஜக. இப்போது மோடி அரசு அவனுக்கு புதிய பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளது.

 கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பது பழைய மொழி.

 பொறுக்கிகளை பொறுக்கிகளே காமுறுவர்

 என்பது பாஜக உருவாக்கியுள்ள புதிய பொன்மொழி.

 மனுதர்மத்தில் சொல்லப்பட்டதை எடுத்துச் சொன்னதற்கே “பெண்களை இழிவு படுத்தி விட்டார் திருமாவளவன்” என்று குதித்த சங்கிகள் ஒருவர் கூட “அடுத்த வீட்டுப் பெண்ணின் வாசலில் சிறு நீர் கழித்த” இந்த உத்தமனின் செயலை பெண்களுக்கு இழைக்கப்பட்ட இழிவு என்று அப்போதும் கண்டிக்கவில்லை. இப்போதும் அவர்கள் வாய் திறந்து பேசாத படி கொழுக்கட்டையை வைத்து வாயை அடைத்துக் கொண்டிருப்பார்கள்.

 ஜெயேந்திர சரஸ்வதி, சிப்பு சேகர், குருமூர்த்தி சொன்னதோ, சுப்பையா செய்ததோ இவர்களுக்கு ஒரு சாதாரண விஷயமாகக் கூட தெரியவில்லை.

 “களவாணிப் பசங்க கூடத்தான் சகவாசம் வச்சிருக்கோம்” என்று தெரியாத வடிவேலு போன்ற அப்பாவிகளா இவர்கள்?

 பெண்களின் காவலராக புதிதாக வேஷம் கட்டியுள்ள ஒரு கண்ணியவான், சுப்பையா விவகாரம் குறித்து எழுதவே இல்லை.  அந்த உத்தமனை அடுத்த பதிவில் கவனித்துக் கொள்கிறேன்.

 சுப்பையா நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கரூர் எம்.பி செல்வி ஜோதிமணி சுகாதார அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதற்கு சங்கிகள் போட்டு வரும் பின்னூட்டங்களில் மிகவும் நாகரீகமாக உள்ள ஒன்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 


இப்போது சொல்லுங்கள் சங்கிகளா பெண்ணின் காவலர்கள்? இந்த திமிர்ப்பேச்சு மனுவின் பாரம்பரியமல்லாமல் வேறென்ன?

அவருக்கு சீமான் பெட்டர்

 


"இலங்கைக் கச்சேரிக்கு போகட்டுமாடா தம்பி" என்று தன்னிடம் எஸ்.பி.பி கேட்டதாக சீமான் சொன்னதை வைத்து அவரை எல்லோரும் நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"இறந்து போனவர்களைப் பற்றி மட்டும் தான் கதை விடுவாயா" என்றும் கேட்கிறார்கள்.

வேண்டாம்.

சீமான் பற்றி அப்படி பேச வேண்டாம்.

இறந்து போனவர்களைப் பற்றி கதை விடுவதில் சீமானுக்கு முன்னோடி ஒருவர் இருக்கிறார்.

அவரும் திரைத்துறையிலும் இருக்கிற அழகியல் புனைவுக் காரர்.

இறந்து போனவர்களைப் பற்றி அவர் எழுதினால் அது முழுவதும் வன்மமாகவே இருக்கும். இறந்து போனவருக்கு அதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நாலு அறை விட்டு விட்டு மறுபடியும் இறந்து போவார்.

இவர் உயிரோடு இருக்கும் வரை நாம் சாகக் கூடாது என்று கூட சிலர் பிரார்த்திப்பதாக ஒரு தோழர் முன்பு எழுதினார்.

இறந்து போனவர்களைப் பற்றி அவர் வன்மத்துடன் எழுவதைப் படித்தால் நமக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி நாம் மருத்துவரைப் பார்க்க ஓடுவோம்.

ஆனால் சீமான் சொல்வதை படித்தாலோ, அவர் காணொளியை பார்த்தாலோ "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்ற வாசகத்தின் படி மருத்துவரிடம் செல்வதை தவிர்ப்போம்.

ஆகவே அவருக்கு சீமான் பெட்டர்.

யார் அந்த அவர்?

தமிழின் தலைசிறந்த படைப்பாளியை, எந்த மொழியில் எழுதினாலும் அந்த மொழியின் முதன்மையான படைப்பாளியாக இருக்கக் கூடியவரை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லையென்றால், உங்களிடம் "அறம்" இல்லையென்றே அர்த்தம்.

இந்த பாவச்செயலுக்கு பரிகாரமாக பத்து முறை வெண்முரசு படிக்கவும். 

Tuesday, October 27, 2020

நீலவானம் இல்லாமல் நிலவு சிரிக்குமா?

 


*நாளொரு கேள்வி: 24.10.2020*

 

இன்று நம்மோடு சென்னைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் *கு. மனோகரன்*

####################

 

*நீலவானம் இல்லாமல் நிலவு சிரிக்குமா?*

 

*கேள்வி:*

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சோசலிச நாடுகளும் - முதலாளித்துவ நாடுகளும் எவ்வாறு வித்தியாசப்படுகின்றன

 

*கு. மனோகரன்*

 

கொரோனா இன்று உலகம் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஓர் அபாயச் சொல். இவ்வாண்டின் துவக்கத்தில் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மரணமாஸ் காட்டிய இக்கொடூர ஆட்கொல்லி வைரஸ், உலகம் முழுவதையும் துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. *உலக நாடுகளை தனது அதிகார பலத்தால் அடிபணிய வைக்கும் அமெரிக்காவை, கொரோனா மண்டியிட வைத்துள்ளது.* ஐரோப்பா கண்டத்தை ஆக்டோபஸ் போல் கவ்விப் பிடித்துள்ளது கொரோனா. ஆசியக் கண்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவையும் இறுகப் பற்றிக்கொண்டது இக்கொடூர வைரஸ். தற்போது முதல் இடத்தை பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, நிலைகுலைந்து நிற்கிறது இந்தியா.

 

ஒரு வேளை, பொருளாதார வீழ்ச்சியினால் கேலிக்கு ஆளாயிருக்கும் பிரதமர் மீது இரக்கம் கொண்டு, நான் இருக்க பயம் ஏன்? என்று கொரோனா கருணை காட்டியிருக்கக் கூடும்! மனிதகுல முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை செலுத்தி வரும், சோசலிச நாடுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. ஆனால்... இப்பெருந் தொற்றிலிருந்து "மக்களையும் - பொருளாதாரத்தையும்" மீட்பதில் சோசலிச நாடுகள் முதன்மை இடத்தில் உள்ளன. வல்லரசுகள் மீட்சிபெற முடியாமல் தவித்து நிற்கின்றன. இந்தியாவின் எதிர்காலம் என்னாகுமோ என்று கவலையில் உறைந்து போயுள்ளனர் மக்கள்.

 

*உலகம் முழுமையும் 23.10.2020 வரை 4 கோடியே 19 லட்சம் பேர் பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்; 11 லட்சத்து 42000 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது பெருந்துயரின் பாதிப்பை நமக்கு உணர்த்துகின்றன.* இதில் அமெரிக்காவில் மட்டும் 86 லட்சம் பேர் பெருந்தொற்றுக்கு ஆளாகியிருப்பதோடு, 2,28,000 பேர் அங்கு மரணத்தையும் தழுவியுள்ளனர். இந்தியாவில் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 77 லட்சத்தையும், மரணங்கள் 1,17, 000 யையும் கடந்திருக்கின்றன. மூன்றாவது இடத்தில் பிரேசில் 53 லட்சம் தொற்றுக்களோடும், 1,55, 000 மரணங்களோடும் இருக்கிறது. வலதுசாரி கருத்துக்களை முன் வைக்கிற ஆட்சியாளர்கள் இம் மூன்று நாடுகளிலும் அதிகாரத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒற்றுமை

 

வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் பலவும் கொரொனா தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. *ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் முதல் 20 இடங்களுக்குள் உள்ள்ன.* இது முதலாளித்துவ அமைப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது

 

*முதன் முதலில் கொரொனா தொற்றுக்கு ஆளான சீனா 85747 தொற்றுக்களோடும், 4634 மரணங்களோடும் 54 வது இடத்தில் இருக்கிறது* எனில் எந்த அளவிற்கு அங்கு கொரொனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. *சோசலிச நாடுகளான  வியட்நாம் 1148 தொற்றுக்கள், 35 மரணங்களோடு 165 வது இடத்திலும், கியூபா 6421 தொற்றுக்கள், 128 மரணங்களோடு 119 வது இடத்திலும் உள்ளன.* மக்கள் தொகையைக் கணக்கிற் கொண்டு பார்த்தாலும் சோசலிச நாடுகள் கொரொனாவை மிகச் சிறப்பாக எதிர்கொண்டுள்ளன என்பது தெளிவாகும்

 

*முதலாளித்துவ நாடுகளிடம் இல்லாத எது... சோசலிச நாடுகளிடம் உள்ளது? எப்படி அங்கே கட்டுப்படுத்த முடிந்துள்ளது. சற்றே விரிவாகப் பார்ப்போம்!*

 

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் துவங்கிய போது, அந்நாட்டின் அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்த கருத்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. கொரோனா என்பது வெறும் மாயை, அப்படியொரு வைரஸ் இல்லவே இல்லை என்று பொறுப்பற்ற முறையிலும், அலட்சியமாகவும் கூறிஎகத்தாளத்துடன் நடந்து கொண்டார். அவரது அலட்சியத்தின் விளைவால், அமெரிக்காவின் மக்கள் மிகப்பெரும் அவதிக்கு உள்ளாயினர்.   மக்களின் அடிப்படை தேவையான மருத்துவம் முற்றிலும் தனியார்வசம் இருப்பதனால், கட்டுப்படுத்த முடியாமல் உலகின் வல்லரசு திணறிப்போனது. கொரோனாவின் தாக்கத்திலிருந்து விடுபட அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளது. அமெரிக்காவின் நிலையே இப்படி என்றால், தனியார்மயக் கொள்கைகளை தாரக மந்திரமாக ஏற்றுக் கொண்டுள்ள இதர முதலாளித்துவ நாடுகளின் நிலையோ பதறச் செய்கிறது.

 

இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்வீடன், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு முதலாளித்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் கலங்கிப் போயுள்ளன. அதேசமயம், கனடா, ரஷ்யா, அரபு நாடுகள், கிழக்காசிய நாடுகள், முதலாளித்துவ கொள்கைகளை கடைபிடித்து வந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தையும், உயிரையும் காப்பாற்றுவதில் தனிக்கவனம் செலுத்தின என்பது கவனிக்கத்தக்கது. அந்நாடுகளில் உயிரிழப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதோடு, வைரஸின் தாக்கத்தையும் ஓரளவிற்கேனும் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. *கல்வியும், மருத்துவமும், பொதுசுகாதாரமும், பொதுவிநியோகமும்"* எங்கெல்லாம் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததோ, அங்கெல்லாம் கொரோனாவையும் கட்டுப்படுத்த முடிந்தது, மக்களின் உயிரையும் - வாழ்வாதாரத்தையும் காக்க முடிந்தது. அது குறித்த சில தகவல்களை இனி பார்ப்போம்

 

*"கியூபா - பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல"* என்கிற திரைப்பட வசனம் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை தாங்கிக் கொண்டு, தன்னிகரில்லா சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மிகச்சிறிய நாடு. 1.5 கோடிக்கும் குறைவான மக்கள் தொகையினை கொண்ட நாடு. கல்வி, மருத்துவம், உணவு உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வரும் நாடு. ஃபிடல்காஸ்ட்ரோவும் - செகுவேராவும் உயர்த்திப் பிடித்த சோசலிசக் கொள்கைகளை அடியொற்றி ஆட்சி புரிந்து வரும் நாடு. அந்நாடு குறித்து இதுவரை தெரியாதவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது கியூபா. காரணம்,கொரோனா வைரஸ் தொற்றை தனது நாட்டில் கையாண்ட விதமும், உலக நாடுகளுக்கு உதவி புரிந்த பாங்கும் தான். மேலும், கியூபாவின் மருத்துவர்கள் குழு 110 நாடுகளுக்கும் மேலாக பயணித்து, கொரோனாவை கட்டுப்படுத்த மனித நேயத்தோடு சேவையாற்றினர். அதேப்போல் *பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 600 பேர் கப்பலில் சிக்கித்தவித்த போது, எந்தவொரு நாடும் அவர்களை அனுமதிக்க மறுத்த நிலையில், கியூபா அவர்களை தன் நாட்டிற்குள் வரவழைத்ததோடு, அவர்கள் அனைவருக்கும்  கோவிட் பரிசோதனை செய்து பாதுகாத்தது.* கியூபாவின் இச்சிறப்பான மனிதநேய சேவையை உலகமே மெச்சியது

 

கொரோனாவை சிறப்பாக கையாண்ட மற்றொரு நாடு *வியட்நாம்!* 10 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. வியட்நாமின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பார்த்து உலகமே அதிசயித்து நிற்கிறதுமக்களுக்கு மட்டுமல்லாது இயற்கைக்கும் முன்னுரிமை வழங்கி வரும் நாடு வியட்நாம். தெருக்கள் தோறும் தானியங்கி இயந்திரங்களை நிறுவி [ATM இயந்திரம்] அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வரும் நாடு. வியட்நாமின் தந்தை என போற்றப்படும் *"ஹோசிமின்"* அவர்கள் வகுத்தளித்த சோசலிசக் கொள்கைகளை, சமரசமின்றி உயர்த்திப் பிடித்து மக்களை காத்து வருகிறது வியட்நாம் அரசு. அதே போல் *வடகொரியா, லாவோஸ்* போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் பரவாமல், கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவையனைத்தையும் தாண்டி, கொரோனா உருவான *சீனா* மீண்டெழுந்திருப்பது உலக சுகாதார அமைப்பையும், உலக நாடுகளையும் மலைக்க வைத்துள்ளது. கொரோனாவால், வல்லரசு முதல் வளர்ந்த நாடுகள் வரை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் நிலையில், சீனாவின் பொருளாதாரம் 3.5℅ சதத்திற்கும் மேல் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது சீனா.  *சீனாவின் மருத்துவப் படிப்பில், பாரம்பரிய வைத்தியம் சார்ந்த பாடப்பிரிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர் ஆராய்ச்சிகள் மூலம், புதிய புதிய நோய் தொற்றுகள் உருவாகும் போது, ஆங்கில மருத்துவத்துடன், பாரம்பரிய வைத்திய முறையும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை மூலம் கொரோனா வைரஸ் தொற்று சீனா முழுவதும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.* மேலும், சுகாதாரம் மற்றும் மருத்துவம் சீன அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருவதும் ஆகும்! *அதே போல், பொருளாதாரத்தில் வளர்ச்சி நிலையைத் தொடர்வதற்கான காரணம் உள்நாட்டுச் சந்தையே ஆகும். சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் எதுவாகினும், அதில் கிட்டத்தட்ட 50% சீன மக்களாலேயே வாங்கப்படுகிறது. சீனாவின் உற்பத்தியில் பெரும்பகுதி, மக்களின் அடிப்படை தேவைகளான உணவுப்பொருட்கள் மற்றும் உடைகளையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த உள்நாட்டுச் சந்தை கட்டமைப்பே நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறது! அதேப்போல் உலகின் 175 நாடுகளில் சீனா தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வருவதோடு, தன்னாட்டிலுள்ள பொதுத்துறைகளையும் பாதுகாத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.* சீனா குறித்து உலக அரங்கில் முரணான கருத்துக்கள் நிலவி வந்தாலும், தன்நாட்டு மக்களை காப்பதில், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் சீனா தனிச்சிறப்புடன் செயல்பட்டு வருவதை எவராலும் மறுக்க இயலாது

 

உலகின் பல்வேறு  நாடுகளின் அனுபவங்கள் நமக்கு ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது. மக்களை நேசிக்கும் அரசுகள் முன்னோக்கிச் செல்கின்றன! மக்களைப் பொருளாய் பாவிக்கும் அரசுகள் பின்னோக்கிச் செல்கின்றன! இதில் இந்திய அரசு எந்த ரகம்?

 

*இந்தியா* எத்தகைய கொள்கையுடன் செயல்பட வேண்டுமென்று, நமது அரசியல் சாசனம் மிகத்தெளிவாக வரையறுத்துள்ளது. *மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிசக் குடியரசு"* என்பதே இந்தியாவின் கொள்கை என நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவுபட சுட்டிக்காட்டியுள்ளது. விடுதலைக்குப் பின்னர் பொதுத்துறைகள், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், சமூகநீதி கோட்பாடுகள், மக்கள்நல மேம்பாடுகள் என முற்போக்கான பல விசயங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1990-களுக்கு பின்னர், உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணிக்கத் தொடங்கியது

 

தேசத்தின் இறையாண்மையும், மக்கள் நலனும் புறந்தள்ளப்பட்டு, முழுக்க முழுக்க பெருமுதலாளிகள் - கார்ப்பரேட்டுகள் நலன்கள் முன்னெடுக்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு பிஜேபி அரசு அதிகாரத்திற்கு வந்த பின்பு, இந்தியாவின் சுயசார்புத்தன்மையை முழுமையாக புறந்தள்ளிவிட்டு, சுதேசி என்ற பாவனை செய்து கொண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக மாறியுள்ளது. அமெரிக்கா சார்பு கொள்கையால் ஏற்பட்டு வரும் மிகமோசமான பாதிப்புகளை, இந்திய மக்கள் இன்று சந்தித்து வருகின்றனர். தற்போதைய இந்தியாவின் பொருளாதாரம் 24% அளவிற்கு சரிந்து விழுந்து கிடக்கிறது. *கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னரே, இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது என்றால், கொரோனாவிற்கு பின்பு படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது.* இவ்வாண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் போது, வெறும் ஆயிரக்கணக்கில் இருந்த தொற்று, ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், அறிவியல் பூர்வமற்ற அணுகுமுறையாலும் லட்ச லட்சமாய் உயர்ந்து, தற்போது முதலிடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

 

இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு, வாசல், உணவு, வேலை ஏதுமின்றி அலைக்கழிக்கப்பட்டனர். பலர் மடிந்து போயினர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துகிறோம் என்கிற பெயரில் நடந்தேறிய "கோமாளித்தனங்களை" கண்டு உலகமே கைகொட்டி சிரித்தது.  

 

ஆனால் கேரளம் விதி விலக்கு. இந்தியாவின் *கேரளா* மாநிலம் மேற்கொண்ட கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்புப் பணிகள், முன்மாதிரியானது மட்டுமல்லாது பின்பற்றப்பட வேண்டியதும் கூட என்று உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்து, பாராட்டி, பட்டயம் வழங்கியது! இந்திய அரசு எத்தகைய முன்மாதிரியையும் கடைபிடிக்காமல், தான்தோன்றித் தனமாக செயல்பட்டதன் விளைவே, இவ்வளவு மோசமான நிலைக்கு காரணமாகும். தொற்றிலிருந்து மீள முடியாமலும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாமலும் கோடிக்கணக்கான மக்கள் இன்னலுற்று இடிந்து போயுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வளவு பேர் என்று அரசிடம் கணக்குக் கேட்டால், தெரியாது என்று கை விரிக்கிறது மத்திய அரசு. ஆலைகளில், முறைசாரா தொழிலில் ஈடுபட்டு வந்தோர் ஏறத்தாழ 14 கோடி பேர் வேலையிழந்து நிற்கின்றனர். ஊரங்கு முடிந்து விட்டது என்று அரசு அறிவித்தாலும், பிழைப்புக்கு வழியின்றி சாமானியத் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். பொது ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில், கிடைக்கும் சொற்பத் தொகையும் பேருந்துக் கட்டணமாக பறித்தெடுக்கப்படுகிறது. மாதச்சம்பளம் வாங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தோர் சுமார் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். பட்டினியால் வாடுவோர் வாழும் 107 நாடுகளின் பட்டியலில், இந்தியா 94வது இடத்தில் இருக்கிறது. *கொரோனாவை கட்டுப்படுத்தவும் இயலவில்லை! மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க முடியவில்லை! நாட்டின் பொருளாதாரத்தையும் நிலைநிறுத்த இயலவில்லை! ஆனால்... இக்காலகட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பெருமுதலாளிகள் மட்டும் கொழுத்து வளர்ந்திருக்கிறார்கள்!* இதுதான் முதலாளித்துவத்தின்  மூர்க்கத்தனம்!

 

கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் குறித்த புள்ளி விபரங்களை பதிவிடுவது, எனது முதன்மையான நோக்கம் அன்று! மாறாக, எத்தகைய கொள்கை மக்களை காப்பாற்றி கண்ணியமாக வாழ வைக்கும் என்பதனை விளக்குவதே ஆகும்! சோசலிசக் கொள்கைகளே, அனைத்து விதமான துயர்களிலிருந்தும் மக்களை மீட்டெடுத்து, சுபிட்சமாக வாழ வைக்கும் மகத்துவம் நிறைந்தது என்பதனை சோசலிச நாடுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன

 

*நிலத்தை நிராகரித்து விட்டு... நதி நடக்க இயலாது!*

 *நீலவானத்தை அலட்சியப்படுத்தி விட்டு... நிலவு சிரிக்க இயலாது!*

 *தண்ணீரை மறுதலித்து விட்டு... தாகத்திற்கு விடைகாண முடியாது!*

 *மின்சாரத்தை புறந்தள்ளி விட்டு... புத்துலகம் சமைக்க இயலாது!*

 *""சோசலிசத்தை தவிர்த்து விட்டு... சுபிட்சம் காண முடியாது!!*

 

*****************

*செவ்வானம்*