Sunday, September 30, 2018

அச்சம் தந்தது. அழகாயும் இருந்தது.

நேற்று சென்னை போயிருந்தோம்.

திரண்டிருந்த மேகங்கள் கடுமையான மழையில் சிக்கிக் கொள்ளப் போகிறோமோ என்ற அச்சத்தை தந்தது. 

ஆனாலும் அந்த மேகக் கூட்டங்கள் மிகவும் அழகாய் இருந்ததால் அலைபேசியில் பதிந்து கொண்டேன், இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



பிகு: வேலூர் திரும்பும் வரையில் சிறு தூறல் கூட போடவில்லை என்பது வேறு விஷயம்.


ஒரு மண்டபம் – இரு நினைவுகள்




கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்ற ஒரு தோழரின் மகனின் திருமணத்திற்காக சென்றிருந்தேன். வேலூரின் ஒரு கோடியில் உள்ள மண்டபம் அது.

பல முறை சென்ற மண்டபம் என்றாலும் இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.

ஒரு தோழரின் மகளின் திருமணம். ஒரு எட்டு மணி அளவில் மண்டபத்திற்கு சென்றால் திருமண வீட்டிற்கான சுவடே தெரியவில்லை. எங்கள் தோழரையும் காணவில்லை. அங்கங்கே சிலர் அமர்ந்திருந்தாலும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மணமக்கள் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்று மட்டும் சொன்னார்கள்.

அப்படியே வந்தார்கள். இருவர் முகத்திலும் உற்சாகமில்லை. மண மகள் கண்களெல்லாம் கலங்கி இருந்தது. எங்கள் தோழரை காணவில்லை. அவரது மனைவி சில மாதங்கள் முன்புதான் இறந்து போயிருந்தார். சரி ஏதோ திருமணத்தில் ஏதோ பிரச்சினை வந்து முடிந்திருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு பரிசுப் பொருளை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டோம்.

மறு நாள் காலையில்தான் விஷயம் தெரிந்தது. எங்கள் தோழரின் தம்பி, மணப்பெண்ணின் சித்தப்பா, மாலை நான்கு மணி அளவில் திருமணத்திற்கான பொருள் எதையோ வாங்க இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி ஒன்று மோத, அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போய் விட்டார்.

அந்த துயர வேளையிலும் மண மகன் வீட்டினர் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளனர்.  இவ்வளவு செலவு செய்து திருமண ஏற்பாட்டை செய்து விட்டு திருமணத்தை நிறுத்த வேண்டாம். நாங்களே பெண் வீடு, மாப்பிள்ளை வீடு இரண்டுமாக இருந்து திருமணத்தை நடத்திக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டனர். 

கெட்ட சகுனம் என்று சொல்லி திருமணத்தையே ரத்து செய்கிற காலத்தில் யதார்த்தமாக முடிவெடுத்த அந்த நிகழ்வு எப்போதுமே நினைவில் இருக்கும்.

அதே போல இன்னொரு நிகழ்வும் மறக்க முடியாதது.

2010 ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் குடியாத்தத்தில் எங்கள் கோட்டச் சங்க மாநாடு நடந்தது.

ஒரு ஞாயிறு, திங்கள் இரு நாட்களில் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வியாழன், வெள்ளி இரு நாட்கள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு வேலூரில். மாநாட்டு வரவேற்புக்குழுவின் சார்பில் ஏராளமான வேலைகள். மாநாட்டுக்கு வந்த இரண்டு தலைவர்கள் தோழர் பட்டூர் ராமையா எனும் ஆந்திர மாநில முன்னாள் எம்.பி, தோழர் சுனீத் சோப்ரா என்ற டெல்லித் தோழர். இருவரையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மாநாட்டை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் யெச்சூரி பேசினார்.  எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஆவணா இன் ஹோட்டலில்தான் அவர் தங்குவதற்கு ஏற்பாடு. எங்கள் தோழர்கள் பலரோடு அவருக்கு ஒரு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம். அன்றைய கூட்டம் கூட மிகச் சிறப்பாக இருந்தது. பாஜக கூட்டம் போல காலி நாற்காலி கூட்டம் அல்ல.

மனம் நிறைவாக இருந்தது. ஞாயிறு அன்று ஒரு தோழர் திருமணம். சனிக்கிழமை வரவேற்பில் மனைவியுடன் கலந்து கொண்டு மறுநாள் முகூர்த்தத்தில் சந்திப்போம் என்று சொல்லி வீட்டிற்கு திரும்பி வருகையில்தான் இன்னொரு இரு சக்கர வாகனம் ராங் சைடில் ஓவர் டேக் செய்ய, அந்த வாகனத்தின் பின்னே கட்டப்பட்டிருந்த இரண்டு கறுப்பு கேன்கள் (அனேகமாக அது கள்ளச்சாராய கேனாக இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் நாங்கள் கீழே விழுவதைப் பார்த்தும் நிற்காமல் அதி வேகத்தில் பறந்து விட்டார்கள்) இடிக்க, பேலன்ஸ் தவறி கீழே விழுந்து விட்டோம். வண்டி எங்கள் மேலே விழுந்து விட்டது.

சாலையில் இருந்தவர்கள் வந்து எழுப்பி விட்டார்கள். எழுந்து கொள்ளவே முடியவில்லை. கால் துண்டானது போன்ற உணர்வு. அந்த விபத்து, அதன் பின் விளைவு, கால் வலி, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இவை பற்றியெல்லாம் ஏற்கனவே எழுதியுள்ளதால் மீண்டும் எழுதி உங்களை எல்லாம் போரடிக்க விரும்பவில்லை.

அந்த மண்டபத்திற்கு சென்றதும் அந்த விபத்தின் நினைவு வந்ததை தவிர்க்க இயலவில்லை. அது போலவே அந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட ஊனத்தை சில நல்லவர்கள் நக்கலடித்ததும் நினைவுக்கு வந்து விட்டது.  முகமுடிகளையே முகங்கள் என நினைக்கிற உலகமிது என்பது கூட . . .

வாழ்க்கையில் எல்லாவற்றையும் மறப்பதும் மன்னிப்பதும் முடியாது அல்லவா !

சபரி மலை - சம்பிரதாயங்கள் மாறலையா?




அனைத்து வயது பெண்களையும் சபரி மலையில் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் உருப்படியான தீர்ப்பொன்றை அளித்துள்ளது.

அதை விமர்சிக்கிற பலர் முன்வைக்கிற ஒரே வாதம் “சம்பிரதாயங்களை மாற்றக் கூடாது”

சபரிமலைக்கு நான் சென்றது கிடையாது. ஆனால் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்பவர்களை அறிந்துள்ளேன்.

கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து கொண்டு நாற்பத்தி எட்டு நாட்கள் விரதமிருந்து பெரும் பகுதி தூரத்தை நடந்து சென்றவர்களை அந்த காலத்தில் அறிந்திருக்கிறேன்.

இப்போது அப்படியெல்லாம் அந்த சம்பிரதாயப்படித்தான் செல்கிறார்களா?

மாலையில் மாலை போட்டுக் கொண்டு இரவு புறப்பட்டு விடுகிறார்கள். “பெரிய பாதை” ,”சிறிய பாதை” என்ற வழிகளில் எல்லாம் எத்தனை பேர் செல்கிறார்கள்? பயணத்தின் தூரமும் பயணத்தின் சிரமமும் வெகுவாகக் குறைந்து விட்டதே! இதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் சொல்லும் சம்பிரதாயம் காணாமல் போய் விட்டதல்லவா?

மண்டல பூஜை காலத்திலும் மகர விளக்கு காலத்திலும் மட்டும்தான் சபரி மலை திறந்திருக்கும் என்பார்கள். பின்பு விஷூவின் போது திறக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு மாதமும் திறக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

சபரிமலை கோயில் பிரசாதமான அரவணைப் பாயச தயாரிப்பு, பேக்கிங் ஆகியவற்றில் மாற்றமே கிடையாதா?

வசதிக்காக பல சம்பிரதாயங்கள் கைவிடப்படுகிற வேளையில் பாலின சமத்துவம் என்ற உரிமைக்காக  இந்த சம்பிரதாயம் கைவிடப்படுவதில் எந்த தவறும் இல்லை.

மேலும் ஐயப்பனின் பிரம்மச்சர்யம் பாதிக்கப்படும் என்று அபத்தமாக பேசும் ஒரு சிலரிடம் சின்னதாக ஒரு கேள்வி

ஐயப்பன் அவ்வளவு பலவீனமானவரா என்ன?

கடவுளை நம்புபவர்கள்தான் கடவுளை இழிவுபடுத்துகின்றனர், மறுப்பாளர்கள் அல்ல . . .

அட! இவர் மந்திரியாம்!!!

"அதிமுகவிற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களின் நாக்கை அறுப்பேன்"

என்று பேசிய பின்புதான்

துரைக்கண்ணு என்று ஒரு அமைச்சர் 
தமிழகத்தில் உள்ளார் என்றும் 
அவர் விவசாயத்துறைக்கு பொறுப்பு என்பதும் 

தமிழக மக்களுக்கு தெரிய வந்தது.
எனக்கும் கூட,
சில தோழர்களை கேட்டேன்
நாங்களும் இப்போதுதான் கேள்விப் படுகிறோம் என்றார்கள்.




தாங்கள் பிரபலமாக,ஹெச்.ராஜா காட்டிய வழியில் 
ஒவ்வொருவரும் தடித்த வார்த்தைகளில் பேசத்துவங்கினால் என்ன ஆகும் தமிழகம்?


Saturday, September 29, 2018

இவ்வளவு அழகென்று எதிர்பார்க்கவில்லை !!!

குமரி சென்றிருந்த போது மாத்தூர் தொட்டிப் பாலம் சென்றிருந்தோம்.

கண்களுக்கு நிறைவான விருந்து.

இயற்கையின் எழில் அனைத்தும் அங்கேதான் குவிந்துள்ளதோ என்பது போல அவ்வளவு அருமை.

அற்புதமான அந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
















வெறும் "ப்ளெய்ன்" நிலா

நேற்றும் பார்த்தேன்,
நேற்று முன் தினமும் பார்த்தேன்,
படமெடுத்து அதையும் பார்த்தேன்.


வெறும் 'ப்ளெய்ன்" நிலா,

அங்கே பாபாவும் இல்லை,
வடை சுடும் பாட்டியும்
கூட இல்லை. 

Wednesday, September 26, 2018

அவன் முட்டாள், இவன்தான் திருடன்,



ஆந்திரா வங்கியில் 5000 கோடி ரூபாய் மோசடி செய்து நைஜீரியாவிற்கு ஓடிப் போன குஜராத்தி  முதலாளி நவீன் சந்தேசரா அமித் ஷாவுடனும் ராஜ் நாத் சிங்குடனும்  இருக்கும் புகைப்படங்கள் என்று கீழே  உள்ள புகைப்படங்களை பல தோழர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.




இது அல்ல அத்திருடன். மேலே இருப்பது திரிபுரா முதல்வரும் அடி முட்டாள் என பல முறை தன்னை நிரூபித்துக் கொண்ட பிப்ளப் குமார் தேப் .


 கீழே  உள்ள புகைப்படத்தில் இருப்பதுதான்  நைஜீரியாவுக்கு ஓடிப் போன மோசடிப் பேர்வழி 


மோடி வகையறாக்கள் ஆசீர்வாதம் இல்லாமல் இவன் ஓடிப் போயிருக்க மாட்டான் என்பது வேறு விஷயம். அருண் ஜெய்ட்லியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருப்பார்.

மோடிக்கு நோபல் கொடுத்தே ஆகணும்





அமைதிக்கான நோபல் பரிசை மோடிக்கு தர வேண்டும் என்று தமிழிசை அம்மையார் திருவாய் மலர்ந்துள்ளார்.

மாநிலத் தலைவர் பதவியை கைப்பற்ற எஸ்.வி.சேகர் விரும்புவதால் அதனை தடுக்க, தன் பதவியை தக்க வைக்க ஏதாவது டுபாக்கூர் வேலை செய்ய வேண்டிய அவசியம் அந்த அம்மையாருக்க்கு உள்ளது.

அதற்காகத்தான் இந்த அறிக்கை என்றாலும் மோடிக்கு அமைதிக்கான பரிசு தர வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

ஆமாம்.

குஜராத்தில் மூவாயிரம் இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்ட போது அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்த நல்லவர்.

ஐம்பது நாளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்று வீரமாக பேசினாலும் அப்படி எல்லாம் கொளுத்திக் கொள்ளாமல் அமைதியாய் இருந்தவர்.

மாட்டின் பெயரால் கொலைகள் கூடாது என்று அவர் எப்போதெல்லாம் சொல்கிறாரோ, அப்போதெல்லாம் இதுதான் அவர் பேச்சுக்கு மரியாதை என்று உடனடியாக சங்கிகள் இரண்டு பேரை வெட்டிப் போடுவார்கள். எனக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று கோபப்படாமல் அமைதியாய் இருப்பவர்கள்.

விஜய் மல்லய்யா தொடங்கி இன்று ஓடிப் போன இன்னொரு குஜராத்தி வரை மோசடிப் பேர்வழிகள் இந்தியாவை ஏமாற்றிப் போனாலும் அதற்காக வேகப் பட்டு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாய் இருப்பவர்.

மனித உரிமைப் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டால் ஒரு அஞ்சலி கூட சொல்லாமல் அமைதியாய் இருப்பவர்.

தேர்தலின் போது கொடுக்கப்பட்ட எந்த உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை என்பதற்காக நாட்டு மக்களால் கழுவி கழுவி ஊற்றப் பட்டாலும் கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாத ஜென்மமாக அமைதி காப்பவர்.

ஊர் ஊராய் பறந்து பறந்து வாய்ச்சவடால் விட்டாலும் நாடாளுமன்றத்தை ஒரு தியான மண்டபம் என கருதி அங்கே மட்டும் எப்போதும் அமைதியை கடை பிடிப்பவர்.

இதோ இப்போது ரபேல் ஊழல் அம்பலமான நிலையில் ஜெய்ட்லி, நிர்மலா போன்ற எடுபிடிகளை பேச வைத்து விட்டு தான் மட்டும் வாயில் கொழுக்கட்டை வைத்திருப்பதால் அமைதியாய் இருப்பவர்.

இப்போது சொல்லுங்கள்.

மோடிக்கு தராமல் வேறு யாருக்கு தருவதை அமைதிக்கான பரிசை?

மோடிக்கு நோபல் கொடுத்தே ஆகணும் 
ஆமாம், கொடுத்தே ஆகணும் 

Tuesday, September 25, 2018

நீட் அம்மையார் வசவு மொழிகள்

ராகுல் காந்திக்கும் ஹாலண்டேவுக்கும் கூட்டு உள்ளது.
மோடிக்கு எதிரான சர்வதேச சதி
பிரியங்கா கணவரை ஆட்டத்திற்கு சேர்க்காததால்தான் ஊழல் எனச் சொல்கிறார்கள்

என்று காவிக்கூட்டம் அவதூறுப் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.

நீட் நிர்மலா அம்மையார் ஹாலண்டேவை அடுத்து என்னவெல்லாம் சொல்லி திட்டுவார்?

அவருக்கு சிரமம் வைக்காமல் நானே எழுதி விட்டேன்






Monday, September 24, 2018

என் இனிய நீல்கமல் நாற்காலிகளே . .

வாட்ஸப்பில் வந்தது . . .
நான் ரசித்தேன். . . அதனால் பகிர்ந்து கொள்கிறேன் . . .




கலைஞர் : என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே... 

எம்ஜியார் : என் ரத்தத்தின் ரத்தங்களே...

பாஜக : என் இனிய நீல்கமல் சேர்களே... 

மச்சம் ஒட்டிய மாறுவேட ராசா . . .



இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு ஹெச்.ராசாவை தேடி வரும் நிலையில் அவர் எப்படி திருக்கடயூர் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்போடு வந்து போனார் என்று நம்முடைய ஸ்காட்லாண்ட்யார்ட் போலீசிற்கு நிகரான தமிழக போலீஸை பலர் கேள்வி கேட்கிறார்கள்.

"நான் தருகிறேன் லஞ்சம்" என்று அவர் சொன்னபடி லஞ்சம் கொடுத்து விட்டாரா? அதை வாங்கிக் கொண்டுதான் போலீஸ் மவுனமாக உள்ளதா என்றும் இதயமில்லாமல் கேட்கிறார்கள்.

ஹெச்.ராசா கைது செய்யப்படாமல் இருப்பதைப் பற்றி உயர்நீதி மன்றமும் கவலைப்படவில்லையே, அப்படியானால் அது உண்மையிலேயே ராசா சொன்னது போல கூந்தல் மன்றம்தானா என்றும் சிலர் இரக்கமில்லாமல் கேட்கிறார்கள்.

பாவம் அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மை தெரியவில்லை.



ஹெச்.ராசா, கன்னத்தில் மச்சம் ஒட்டிக் கொண்டு மாறு வேடத்தில் வந்தால் போலீசால் அவரை எப்படி கண்டுபிடிக்க முடியும்?


Sunday, September 23, 2018

திருடர் என்றும் பாராமல் . . .

#mere_pm_chor_hai



என்பதுதான் இன்றைய ட்ரெண்டிங்...

இதில் எனக்கு உடன்பாடில்லை . . .

ஆமாம்.

ஒருவர்

மிகப் பெரிய கொலைகாரர் என்றும் பாராமல்,
மிகப் பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் என்பதை அறியாமல்,
மக்கள் ஒற்றுமையை சீரழிக்கும் மத வெறியர் என்பதை உணராமல்,
பெரு முதலாளிகளின் சேவகன் என்பதை தெரியாமல்

பிரதமராக தேர்ந்தெடுக்க வாக்களித்த  மக்கள்தான் சொல்ல வேண்டும்

நாங்கள் முட்டாள்கள் 

ஜன்னல் வழியே . . .

குமரியில்  விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல அதற்கான வரிசையில் காத்திருந்த வேளையில் 

ஜன்னல் வழியே தெரிந்த காட்சி

புகைப்படமாக 

உங்கள் முன் 





Saturday, September 22, 2018

இரண்டு + இரண்டு



மறைந்த பி.பி.சீனிவாஸ் அவர்களுடைய குரல் தனித்துவமானது. மிகவும் இனிமையானது.

இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு 

அவருடைய நான்கு பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு பாடல்கள் நேரடியாக காணொளியாக . . .

பார்த்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்



மறக்க முடியாத கலை 




இரண்டு பாடல்கள் இணைய இணைப்பாக.



கேட்டு ரசியுங்கள்.



மோடிடா . . அம்பானியோட . . . . .



ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் மோடி- நிர்மலா அம்மையார் அனில் அம்பானிக்காக தரகு வேலை பார்த்துள்ளனர் என்பதற்கான புதிய சான்று இப்போது வந்துள்ளது.

இந்திய அரசாங்கம்தான் ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை வற்புறுத்தி இணைத்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே தெளிவாக அறிவித்து விட்டார்.

கூடுதல் விலை கொடுத்து ரபேல் விமானங்களை வாங்குவது இந்தியாவிற்காக அல்ல.

அனில் அம்பானியின் கஜானா நிரம்புவதற்காக.

பெரு முதலாளிகள் பணம் சேர்க்க இந்திய மக்களின் வரிப் பணத்தை அள்ளித் தரும் 

மோடி வகையறாக்கள்தான்

தேச பக்தர்களாம் . . .

இந்த ஊழலை சுட்டிக் காட்டுபவர்கள்

தேச விரோதிகளாம் . . .


Friday, September 21, 2018

வேலூர் விளம்பரம் -மோடி மீதான ??????

ஒரு தோழர் ஒரு குழுவில் பகிர்ந்து கொண்ட  விளம்பரம்.



ஒரு வணிக நிறுவனம், அது சின்ன பேக்கரியோ இல்லை பெரிய நிறுவனமோ, தன் விற்பனையில் இருபது சதவிகிதம் தள்ளுபடி கொடுப்பது என்பது புதிய விஷயமில்லை . . .

அதை பெட்ரோல்  என்று அறிவித்துள்ளது 

மோடி அரசின்  மீதான விமர்சனம் . . .
பெட்ரோல் விலை உயர்வின் மீதான கண்டனம் . . .

Thursday, September 20, 2018

அந்த போர்ஜரி தேசபக்தனா நிர்மலா மேடம்



ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர்களை தேச விரோதிகள் என்றும் தேசத்தின் மீது போர் தொடுப்பவர்கள் என்று வழக்கம் போல விஷ வாந்தி எடுத்துள்ள "ரபேல் விமான ஊழல்" புகழ் நீட் நிர்மலா அம்மையார் அவர்களே,

புதுடெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காவிகளின் ரௌடி அணியான  ஏ.பி.வி.பி யைச் சேர்ந்த "அங்கிவ் பைசோயா"  என்பவன் பல்கலைக்கழகத்தில் சேர போர்ஜரி செய்த சான்றிதழ் கொடுத்துள்ளானே! அவன் யார்? 





உங்கள் அகராதிப்படி அவன் தேச பக்தனோ?

உங்க தலைவர் மோடியே கூட எம்.ஏ படிச்சதா சொல்ற  ஒரு மோசடிப்  பேர்வழிதான். நாளைக்கு இந்த திருடனைக்கூட பிஜேபி பிரதமர் வேட்பாளரா நிறுத்தினால் கூட அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. 

Wednesday, September 19, 2018

செருப்பு வீசினா மாவீரனாம் !!!!!

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முக நூல் பக்கத்தில் கீழ்க்கண்ட செய்தியை படித்தேன்.



அப்படி நிதி திரட்டித்தரும் அளவிற்கு அந்த மாவீரர்(!) ஜெகதீசன் என்ன வீர தீரச் செயல் செய்தார் என்று தேடிப் பார்த்தால்

சென்னையில் தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீசிய இழி பிறவிதான் அந்த ஜெகதீசன்!

அடப்பாவிகளா!

யாரை, எதற்காக மாவீரன் என்று சொல்வது?
கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாதா?

ஆனால் ஒன்று அந்த மாவீரன் பெயரில் இந்த மனிதன் நன்றாக கல்லா கட்டுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. 

அதற்கும் ஐயாயிரம், பத்தாயிரம் என்று அள்ளித் தருகிறார்களே, அந்த இ.வா க்கள் இருக்கும் வரை இவர்களின் பிழைப்பு நன்றாகவே நடக்கும். 



பி.கு ; வீரத்துறவி என்று ஒருவரை அழைக்கிறார்களே, அவரும் இது போல செருப்பு வீசிய வீரர்தானோ? 


மீண்டும் பள்ளிக்கு போகலாமா?

மீண்டும் பள்ளிக்கு படிக்க போக முடியாது என்பதுதான் யதார்த்தம்.

ஆனால் இந்த படங்கள் பள்ளிக்கால அனுபவங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

பார்த்து விட்டு உங்கள் நினைவுகளுக்குள் செல்லுங்கள்.