எழுத்தாளர்
தோழர் மதுரை பாலன் அவர்களின் முக நூல் பதிவிலிருந்து. 
சுவாரஸ்யமான
விஷயத்தை சுட்டாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமல்லவா! நான் அவருக்கு நன்றி சொல்லியே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
தவத்திரு அடிகளார் தலைமையில் பட்டிமன்றம். அதில் நான் பேசியபோது "சுவாமி..உலகிலேயே முதல் இடதுசாரி    யார் தெரியுமா? என்றேன்.
"நீங்களே சொல்லுங்க" என்றார். 
"சக்தி இல்லையேல் சிவனில்லை என்று தன் உரிமைக்காகப் போராடிய அன்னை பராசக்திதான்    உலகத்திலேயே முதல் இடதுசாரி" 
என்ற    நான்
"சக்தியின் போராட்டத்திற்குப்   பணிந்த சிவன் தன் உடம்பில் சரிபாகத் தைக் கொடுக்க சம்மதிக்கிறான். இப்போது எந்தப் பக்கத்தைக் கொடுப்பது?
வலப் பக்கத்தைக் கொடுப்பதா இடப்பக்கத்தைக் கொடுப்பதா? 
நீயே தேர்ந்தெடுத்துக் கொள் என்று சிவன் கூற
போராடக்கூடியவர்கள் எல்லாம் எந்தப் பக்கத்தில் இருக்கவேண்டும்   என்பதை   உணர்த்துவதற்காக அன்னை பராசக்தி     இடப்பக்கத்தையே தேர்ந்தெடுத்தாள்    சுவாமி "
 என்று விளக்க அடிகளார் முகத்தில் அத்தனை பரவசம். 
அருமை அருமை   என்றுகூறி மேஜையைத் தட்டித் தீர்த்து
விட்டார்.

No comments:
Post a Comment