புருவம் உயர்த்தி
ஒரு நொடி
அதிசயமாய்ப் பார்த்தார்கள்,
என்ன ஆனது
 உனக்கென்று
ஏராளமாய் கேள்விகளை
பார்வையாலே தொடுத்தார்கள்.
அவர்களுக்கு எப்படித்
 தெரியும்?
உடலும் உள்ளமும்
மகிழ்ச்சியின் மழையிலும் 
நனைய நனைய
சாலையில் நடந்த
நான்
மழை பொய்த்த
மண்ணின் மைந்தனென்று....
No comments:
Post a Comment