சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, July 11, 2011
இப்படித்தான் நடக்கிறதோ ?
இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் இது?
மிகவும் நன்றாக படிக்கிற மாணவர்கள் பொறியியல், மருத்துவம்
என தொழில்நுட்பப் படிப்புக்களை படித்து டாக்டர், இன்ஜினியர்கள்
என உருவாகின்றனர்.
நன்றாக படிக்கிற மாணவர்கள், ஐ.ஏ.எஸ் ,எம்.பி.ஏ என படித்து
டாக்டர்கள், பொறியாளர்களை நிர்வாகம் செய்கின்றனர்.
மிக மிக சுமாராக படிக்கின்றவர்கள் அரசியல்வாதிகளாகி
இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்துகின்றனர்.
இந்த செய்தி இத்தோடு முடிந்து போகவில்லை.
தேர்வுகளில் தோற்றுப் போனவர்கள் என்ன ஆகின்றார்கள்?
அவர்கள் கடத்தல், மாபியா என்றெல்லாம் சக்தியுள்ளவர்களாக
மாறி இவர்கள் அத்தனை பேரையும் ஆட்டுவிக்கின்றார்கள்.
இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அரசியல்வாதிகள்
அறிவற்றவர்கள் என பொதுமைப்படுத்துவதோ, தேர்வுகளில்
தோல்வியடைபவர்களை இழிவு படுத்துவதோ சரியல்ல.
நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. யாரும் வளர்ப்பில் தான் வீணாகிப் போகிறார்கள். அவர்களின் பழக்க வழக்கம் மோசமாகிறது என வேண்டுமானால் சொல்ல்லாம். அதற்காக படித்த இளைஞர்கள் தீவிர வாதிகளாக இல்லையா? சிந்திக்கவும்..
ReplyDelete