சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, September 1, 2010
கலைஞர் எனும் இரும்புக்கை மாயாவி
சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத மனிதராக
கலைஞர் மாறி விட்டார். பாலும் தேனும்
பெருக்கெடுத்து ஓடும் மாநிலமாக தமிழ்நாடு
இருப்பதாகவும் ஏதோ அவரது அரசுக்கு
களங்கம் விளைவிப்பதற்காகவே மார்க்சிஸ்ட்
கட்சியும் தொழிற்சங்கங்களும் போராட்டங்கள்
நடத்திக்கொண்டிருப்பதாக கற்பனை உலகில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மக்கள்
அரசிடமிருந்து நியாயம் கிடைக்கும் என
எதிர்பார்க்கிறார்கள். மனு அளித்தல் ,
ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் என்ற
பல்வேறு வடிவங்களை ஆளும் வர்க்கம்
அலட்சியப் படுத்துகையில்தான் வேலை
நிறுத்தம், முற்றுகை போன்ற ஆயுதங்களை
கையில் எடுக்க வேண்டியுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களை வேலை நிறுத்தம்
செய்யவைத்தது தமிழாக அரசுதான். ஐந்து
முறைக்கு மேல் சந்தித்தும் மாவட்ட ஆட்சியர்
காண்பித்த அலட்சியம் குடியாத்தம் தாலுகா
அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் முடிவு
செய்ய காரணியாக இருந்தது.
26 வருட கால சோகம் சத்துணவு ஊழியர்களை
கோட்டையை நோக்கி முற்றுகை என்று அறிவிக்க
வைத்தது. முப்பது நாட்களுக்கு முன்பே அறிவிப்பு
அளித்திருந்தும் அதனை கண்டு கொள்ளாதது யார்
குற்றம்? ஒரு வேளை சத்துணவு ஊழியர்களும்
பாசததலைவனுக்கு பாராட்டு விழா என நடத்தி
குத்தாட்டம் நிகழ்த்தியிருந்தால் கலைஞருக்கு
புரிந்திருக்குமா?
போராடிய சத்துணவு ஊழியர்களை காவல்துறை மூலம்
அணுகியவிதம் கேவலமானது. ஜெயலலிதா பிரயோகித்த
அதே பிற்போக்கு ஆயுதத்தை இவரும் பயன்படுத்தி
நானும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என
நிருபித்து விட்டார்.
ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஏராளமான
பொறுப்பாளர்கள் பணி நீக்கமும் இடை நீக்கமும்
செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு தீவிரவாதத்திற்கு
எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடமை
ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவருக்கும் உண்டு.
ஒழுங்கு நடவிக்கை என்பது பணிக்குச்செல்லாதவர்கள்
மீதும் பணியை முறையாக செய்யாதாவர்கள் மீதும்
எடுக்கப்படுவதுண்டு. நாடாளுமன்றத்திற்கு செல்லாத
அமைச்சர் பதவியை ஒழுங்காக செய்யாத
அஞ்சா நெஞ்சன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்
தைரியம் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த
வீரருக்கு உண்டா?
போராட்டத்திற்காக சென்னை வந்தவர்களை
கோயில்களுக்கும் சுற்றுலா செல்வதாகவும் சொல்லி
போய் சொல்லி கூப்பிட்டு வந்துவிட்டார்கள் என்று
வேறு கொச்சைப்படுத்தியிருக்கிறார். தன்னைப் போல்
பிறரையும் என்னும் தயாள குணம் கொண்டவரல்லவா?
குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தால்
மட்டுமே இவர் கட்சித்தொண்டர்கள் வருவதால்
எல்லோரையும் அப்படியே நினைக்கிறார். ( இன்று
வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில்
இதைச்சொன்னபோது ஒரு தோழர் என்னை சரி
செய்தார். ரேட் ஏறி விட்டதாம். ஆப் பாட்டிலும்
இருநூறு ரூபாயும் பிரியாணியுமாம்)
நான் சிறுவனாக இருக்கையில் சித்திரக்கதைகள்
வரும். இரும்புக்கை மாயாவி என்ற கதாபாத்திரம்
மிகவும் பிரபலம். அவர் மின்சாரத்தில் கைவைத்தால்
உடல் மறைந்து போய் கை மட்டும் தோன்றும்.
அவர் கதாநாயகன். ஆனால் இவரோ வில்லனாக
அல்லவா மாறியிருக்கிறார். அதனால்தான்
இரும்புக்கரம் கொண்டு உழைக்கும் மக்களின்
போராட்டத்தை ஒடுக்கப்பார்க்கிறார்.
தொழிலாளி வர்க்கம் எனும் மின்சாரத்தை
இவரது இரும்புக்கரம் தீண்டுகிறபோது இவரே
வரலாற்றிலிருந்து மாயமாக மறையப்போகிறார்.
மாயாவியின் ஆட்சியின் அந்திமக்காலம்
இதுதான் போலும்.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரை திட்டுவதைத்
ReplyDeleteதவிர வேறு பிழைப்பு கிடையாதா? நீங்கள் தலைகீழாய் நின்று தவம் இருந்தாலும் மீண்டும் நாங்கள்தான், என்றும் நாங்கள்தான். ஜெயலலிதாவும் அராஜகம் செய்தார்
என்பதை ஒப்புக்கொண்டதால் இத்துடன் விட்டுவிடுகிறோம்
ஹீண்டாய் மோட்டார்
ReplyDeleteதொழிலாளர் சங்கத்தின் சாரபாக பாராட்டுக்கள் தோழர் .
உங்களுடன் நாங்கள் என்றும் இருப்போம்
ஹீண்டாய் மோட்டார்
ReplyDeleteஇந்தியா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பாராட்டுக்கள் தோழர் .
உங்களுடன் நாங்கள் என்றும் இருப்போம்
அமைச்சர்தான் நாடளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிவிட்டாரே.நடவடிக்கையா...? உமக்குப் பேராசைதன்.காஸ்யபன்
ReplyDeleteதிமுக தகைவருக்குத்தான் சகிப்புத்தன்மை
ReplyDeleteஇல்லைஎன்று பார்த்தால் அதன்
உடன்பிறப்புக்களுக்கும் அறவே கிடையாது
என நிரூபித்த அனானி அண்ணனுக்கு நன்றி.
நன்றி தோழர் தமிழ் யாளி, நாம் அனைவரும்
சத்துணவு ஊழியர்களுக்கு துணையாய் இருப்போம்.
தமிழக அரசின் அடக்குமுறையை தொடர்ந்து
சந்திக்கும் அமைப்பாக உங்கள் அமைப்பும்
உள்ளதுவே!
கேள்வி எண் 169 எனச்சொல்லி விட்டால் அது
நாடாளுமன்றத்தில் பேசியதாக அர்த்தமாகி
விட்டதா? என்ற கேள்வியை நான் அஞ்சா
நெஞ்சனைப் பார்த்துத்தான் கேட்கிறேன்
தோழர் காஷ்யபன், உங்களிடம் அல்ல.
ஆனால் இதுவே முதல் பக்க செய்தியாய்
பல பத்திரிகைகளில் வெளிவந்தது.
என்ன கொடுமை சார் இது?
நீங்கள் குறிப்பிட்ட போராட்டங்கள் நிச்சயம் தேவையானவை.ஆனால் உங்களுக்கு நேர்மையும், துணிவும், மனசாட்சியும் இருக்குமானால் பெரியாறு நீரை தரமறுக்கும் cpm கட்சிக்கு எதிராகவும் தமிழகம் தழுவிய அளவில் ஒரு போராட்டத்தை நடத்தவும்.
ReplyDeleteநன்றி