Sunday, April 5, 2026

மாட்டுக்கறி மட்டும் அவங்களுக்குத்தானாம்

 


அஸ்ஸாமில் அமித்ஷா கொடுத்துள்ள தேர்தல் ஜூம்லா கீழே உள்ளது. ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்போம் என்ற வாக்குறுதியை ஜூம்லா என்று சொன்னது அவர்தானே!



இதை படிக்கையில் மனதில் தோன்றியது  . . .

தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம்.

அப்படி தப்பித்தவறி யாராவது சிலருக்கு கொடுத்தால் அவர்கள் அந்த மாட்டிலிருந்து பால் வேண்டுமானால் கறந்து கொள்ளலாம்.

ஆனால் மாட்டுக்கறியை அவர்கள் சாப்பிடக்கூடாது. அதை பாஜகவிற்கு தாராளமாக நிதியளிக்கும் மாட்டுக்கறி ஏற்றுமதி கம்பெனிகளுக்கு கொடுத்து விட வேண்டும்.

ஆமாம். அமித்ஜி, மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்களில் பல இஸ்லாமிய பெயர்களில் இருந்தாலும் அவற்றின் உரிமையாளர்கள் பூண்டு, வெங்காயம் கூட சாப்பிடாத ஜெய்ன்கள்தானாமே! 

அது சரி நாய் விற்ற பணம் குரைக்காதல்லவா! 

சாதாரண மனிதர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால்தான் அடித்துக் கொல்வீர்கள்! அதை செல்வந்தர்கள் வெளி நாட்டினர் சாப்பிட ஏற்றுமதி செய்வது பொருளாதார நடவடிக்கை அல்லவா!

உங்களின் தவறுதான் ஸ்டாலின்

 


எடப்பாடிக்கு இத்தேர்தலில் அரசியல் செய்ய எதுவுமே கிடைக்கவில்லை போல. அதனால் "கலைஞரின் இறுதிக்காலத்தில் அவரை மு.க.ஸ்டாலின் கைதியாக அடைத்து வைத்திருந்தார், அவரது மரணம் சந்தேகத்திற்குரியது. தான் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பேன்"  என்றெல்லாம் பேசி வருகிறார்.

சிரிப்பும் எரிச்சலும் வருகிற குற்றச்சாட்டு இது.

இறுதியில் மருத்துவமனை செல்கிற வரை பொது வெளியில் இயங்கியவர் கலைஞர். மருத்துவமனையில் அவர் இருந்த சூழலில் பல தலைவர்களும் அவரை சென்று சந்தித்தனர்/பார்த்தனர். காவேரி மருத்துவமனையில் எந்த மர்மக் காட்சிகளும் நடைபெறவில்லை. அதனால் எடப்பாடியின் குற்றச்சாட்டு அபத்தமானது.

அதே நேரம்

ஏ1 ஜெயலலிதா எப்போது, என்று, எப்படி இறந்தார்?

அப்பல்லோ பிரதாப் ரெட்டி, ஏ2 சசிகலா என்ற இருவரைத் தவிர வேறு யாருக்காவது இந்த உண்மை தெரியுமா?

வித்யாசாகர் என்ற ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி பொறுப்பு கவர்னராக இருந்தாரே, அவர் கூட அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றாரே தவிர, ஜெ வை பார்க்கவில்லை.

ஏ1 ஜெயலலிதா மரண மர்மத்தையும் பின்பு ஏ1, ஏ2 ஆகியோர் அத்து மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கிய கொட நாட்டு மர்ம மாளிகை தொடர் கொலைகள் தொடர்பாக இந்த ஐந்தாண்டுகளில் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததுதான் மு.க.ஸ்டாலின் செய்த மிகப் பெரிய தவறு.

அப்படி செய்திருந்தால் இன்று கலைஞர் மரணம் பற்றி பேசும் தைரியம் எடப்பாடிக்கு வந்திருக்குமா? அதைப்பற்றி பேச தனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று வெட்கப்பட்டிருக்க மாட்டாரா? 

யார் கண்டது ! குற்றவாளியாக எடப்பாடியே கூட ஜெயிலில் இருந்திருக்கலாம்.

ஆகவே முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே அடுத்த ஆட்சிக்காலத்திலாவது

ஏ1 ஜெயலலிதா மர்ம மரணம்,

கொட நாட்டு மாளிகை தொடர் கொலைகள்

தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுங்கள். 

Saturday, April 4, 2026

புளிச்சமாவு ஆஜானும் வசூல் ராஜா வார்ட் பாயும்

 


என்னத்தான் தேர்தல் நேர பரபரப்பாக இருந்தாலும் புளிச்ச மாவு ஆஜானை கலாய்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இழக்க முடியுமா?

கீழே உள்ள செய்தி புதிதல்ல. ஆஜான் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பதுதான்.


இதனை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த வசூல் ராஜா படக் காட்சியைத்தான் மேலே உள்ள படத்தில் பகிர்ந்துள்ளேன்.

ஜெயமோகனை தன்னை சிறந்த படைப்பாளி என்று வேண்டுமானால் கதையளிக்க முடியுமே தவிர, சிறந்த மனிதன் என்று சொல்லிக்கொள்ள முடியுமா? வன்மமும் வக்கிரமும் நிறைந்த அவரால் அது இயலாது என்பது அவருக்கே தெரியும். 

பிகு: இன்னும் கொஞ்ச நாளைக்கு சமூக வலைத்தளங்களில் ஆஜான் புகழ் சத்தமாகவே ஒலிக்கும்.

ஆமாம். முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியவாதிகளை அமெரிக்காவிற்கு கூட்டிப் போயுள்ளார். அதற்கான நன்றியை எதிரொலிக்க வேண்டுமல்லவா!

Friday, April 3, 2026

நீங்களே விஷத்தை குடியுங்கள் சீமான்

 


தேர்தல் காலத்தில் பல விதமான வசனங்கள் பேசப்படும். அதில் சீமானின் லேட்டஸ்ட் வஜனம் கீழே. 


ஐய்யா சீமான், 

ஐம்பது நாட்களுக்குள் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் உயிரோடு கொளுத்துங்கள் என்ற வஜனத்தை கேட்டவர்கள் நாங்கள்.

அப்படியெல்லாம் உங்கள் மிரட்டலுக்கு பயந்தெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட முடியாது. அதற்காக உங்களுக்கு விஷம் வைக்கும் வேலையெல்லாம்  எங்களுடையது கிடையாது. நீங்களே விஷத்தை சாப்பிட்டு விடுங்கள்.  

உங்களுக்கு ஓட்டு போட்டு தமிழ்நாட்டுக்கு கொடுமை  செய்வதை விட நீங்கள் விடும் சாபத்தை அனுபவிப்பது மேல் 


சகவாச தோஷமா செங்கோட்டையன்?????

 


ஏ1 காலத்து முன்னாள் மந்திரியும் தற்போதைய தற்குறி தவெக கூட்டத்தில் உள்ளவருமான செங்கோட்டையனின் மீது பெரிய அபிப்ராயம் எதுவும் எப்போதும் இருந்தது கிடையாது. வாச்சாத்தி பிரச்சினையை கையிலெடுத்து போராடியதற்காக எங்கள் தோழர், மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டவர் அல்லவா அவர்! 

(பார்க்க : விஜய்-செங்கோட்டையன் கொலைகாரக் கூட்டாளிகள்

புஸ்ஸி ஆனந்த் சில மாதங்கள் முன்பாக அபத்தமாக உளறிய ஒன்றை இவரும் உளறியுள்ளார். 

அது என்ன?


நீண்ட காலம் எம்.எல்.ஏ ஆக, அமைச்சராக இருந்ததால் கொஞ்சமாவது விஷயம் தெரிந்தவராக இருந்திருப்பார் என்று நினைத்திருந்தேன். 

ஆனால் ?????

புஸ்ஸி ஆனந்த் உளறிய போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெயலலிதா ஆகப் போகிறாரா விஜய்?

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதன் காரணமாக வேட்பு மனு நிராகரிக்கப் பட்டது என்று பதிவாகக்கூடாது என்பதற்காக நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் ஏ1.

ஏ1 4 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தாரே தவிர, போட்டியிடவில்லை. போட்டியிடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது போல செங்கோட்டையன் பேசியதன் காரணம் என்ன?


ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா அவர்?

அல்லது

தவெக தற்குறிகளின் சகவாசத்தால் இப்படி ஆகி விட்டாரா?



Thursday, April 2, 2026

ராயபுரம் ஜெயகுமார் இப்போது தோற்கப் போவதற்கும் ?????

 


கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு தன் தோல்விக்கு காரணம் யார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார் விளக்கமாக சொல்லும் காணொளி இங்கே உள்ளது.

பாவம் ஜெயகுமார்!

2026 தேர்தலிலும் ஜெயகுமார் அதே வேஸ்ட் லக்கேஜ் பிஜேபியால்தான் தோற்கப் போகிறார். 

அவ்விரு கட்சிகளிலும் என்ன நடக்கிறது?

 


இன்னும் நான்கு  நாட்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விடும்.

இரண்டு தேசிய கட்சிகளும் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி அடம் பிடித்து அரசியல் செய்து அடுத்தவர்கள் பங்கையும் பெற்று 28 தொகுதிகளை பெற்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பின்னும் அவர்களால் வேட்பாளர்களை இறுதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் எப்போது முடிவு செய்து எப்போது அறிவித்து எப்போது உட்கட்சி குழப்பங்களை சரி செய்து எப்போது பிரச்சாரத்திற்கு செல்வார்கள்/

பாஜகவும் அதன் குழப்பங்களிலிருந்து வெளியே வர முடியவில்லை. அது பற்றி நமக்கு கவலையில்லை. நாசமாகப் போகட்டும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

ஆனால் காங்கிரஸ்  பின்னடைவு பெற்றால் அதன் தாக்கம் கூட்டணியை பாதிக்கும்.

ஒரு மாதமாகியும் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியவில்லையென்றால் அந்த கட்சிக்கு எதற்கு தேர்தல்? 28 தொகுதிகள்? அதிகாரத்தில் பங்கு? 

Wednesday, April 1, 2026

தவெக தற்குறிகளும் காக்கா பிரியாணியும்

 


தங்களை தற்குறிகள் என்று அழைத்தால் தவெகவினர் வருத்தப்படுகிறார்களாம்.  

கீழேயுள்ள பதிவுகளை பாருங்களேன்


ஒரு வாக்காளரால் இரண்டு தொகுதிகளில் வாக்களிக்க முடியாது என்றும் அப்படி வாக்களித்தால் அது கள்ள ஓட்டாக மட்டுமே இருக்க முடியும் என்பது கூட தெரியாமல், திருவல்லிக்கேனி-சேப்பாக்கம் என்பது ஒரே தொகுதி என்ற விஷயமும் கூட தெரியாமல் பதிவெழுதுகிற ஒரு ஆளை தற்குறி என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்! 

சரி கவுண்டம்பாளையம் விஜயகுமாருக்கு வாக்கு எங்கே இருக்கிறது? கவுண்டம்பாளையத்திலா? பெரம்பூரிலா அல்லது திருச்சியிலா?

அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இருந்தால் மோடி,அமித்ஷா வகையறாக்கள் நடத்திய SIR கூட வெறும் ஜும்லாதானா? 



மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்யுங்கள்

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்வது தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதற்கும் நல்லது.

அந்த குழுவின் சிகண்டி பதிவர் (பெண் பெயரில் செயல்படும் போலிப் பதிவர்) திங்களன்று போட்ட ஒரு பதிவையும் அதற்கு முட்டு கொடுக்கும் மாடரேட்டரின் பதிலையும் பாருங்கள்.




ஒரு வழியாக அந்த பதிவு நீக்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க் கிழமை அன்று அதே பதிவை வேறு ஒருவர் பதிவு செய்கிறார்.

என்னய்யா நியாயம் என்று கேட்டால் பதில் இல்லை.

தேர்தல் வரைக்கும் இந்த குழுவில் உள்ள சங்கி வெறியர்கள் என்னென்ன பொய்களை பரப்புவார்களோ! அந்த பொய்கள் தமிழ்நாட்டின் சமூக அமைதியை பாதிக்கும். சட்டம் ஒழுங்கை பாதிக்கும்.

அதனால் இந்த குழுவை தடை செய்வது நல்லது.

பிகு: இந்த குழுவை பற்றி இன்னும் ஒரு பதிவை மட்டும்தான் எழுத முடியும். ஏன்? அது நாளை . . .

Tuesday, March 31, 2026

மீண்டும் கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம்

 


பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.


Tuesday, December 22, 2015

கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம் - ஜெய்ட்லி அவுட்


கிரிக்கெட் வாழ்க்கையில் அவ்வளவாக பிரகாசிக்காதவர் கீர்த்தி ஆஸாத். அரசியலில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவ்வளவு பிரபலமான அரசியல்வாதி என்றும் சொல்ல முடியாது.

கிரிக்கெட்டில் அவர் கையாண்ட அதிரடி பாணியை இப்போது அவர் தனது சொந்தக்கட்சி பிரபலம் மீதே கையாள எப்படி மீள்வது என்று தெரியாமல் பாஜக தடுமாறுகிறது.

அசிங்கப்படுத்த முயல்பவர்களே அசிங்கப் படுவார்கள்  என்று சில தினங்கள் முன்பு நான் எழுதிய பதிவு நிஜமாகிக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக மோடி வகையறாக்கள் செய்த முயற்சி இப்போது அருண் ஜெய்ட்லிக்கு எதிராகவே திரும்பி விட்டது. 

டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக அருண் ஜெய்ட்லி இருந்த போது கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டிற்கு எதிராக அவதூறு வழக்கு போட்ட ஜெய்ட்லி அதே குற்றச்சாட்டுக்களை கீர்த்தி ஆஸாத் சொல்கிற போது வாய் திறக்க மறுக்கிறார்.

முடிந்தால் என் மீதும் வழக்கு தொடுங்கள் என்று கீர்த்தி ஆஸாத் சொல்லும் போது இந்தியாவின் மிகப் பெரிய சட்ட நிபுணர் அருண் ஜெய்ட்லி ஏன் பதில் பேசவில்லை?

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்றவர்களை ஒதுக்கித் தள்ளிய அமித் ஷா, மோடி கும்பல் ஏன் இப்போது மௌனமாக உள்ளது?

மொத்தத்தில் கீர்த்தி ஆஸாத்தின் அதிரடி ஆட்டத்தில் அருண் ஜெய்ட்லி இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த பந்தில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பி விடுவார் போல!

**********************************************************************************************

இப்போது தற்போதைய பிரச்சினைக்கு வருவோம்.

பீகாடின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பகவத் ஜா ஆசாதின் மகனும் மூன்று முறை பாஜக எம்.பி ஆக இருந்து பின் காங்கிரஸ் சென்று தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி யாக உள்ள கீர்த்தி ஆஸாத், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக அமித்ஷாவின் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷா மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.

இந்தியா டி-20 உலகக் கோப்பையை வென்றதும் ஜெய்ஷா, பயிற்சியாளர்  சங்கி கவுதம் கம்பீர் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவோடு அகமதாபாத்தில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு கோப்பையுடன் சென்று வழிபட்டுள்ளார்.

"இந்திய வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனால் அந்த கோப்பையுடன் சர்ச்சிற்கு செல்ல முடியுமா? முகமது சிராஜால் அந்த கோப்பையை ஒரு மசூதிக்கு எடுத்துச் செல்ல முடியுமா இல்லை அர்ஷ்தீப் சிங்கால் ஒரு குருத்வாராவுக்கு கோப்பையை கொண்டு போக முடியுமா? இந்த உலகக் கோப்பை என்பது பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றும் நூற்றி நாற்பது கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது. அதை ஒரு நம்பிக்கையை பின்பற்றுபவர்களோடு சுருக்குவது மோசமான செயல். விளையாட்டில் மதத்தை கொண்டு வராதீர்கள்."

கீர்த்தி ஆசாதின் கேள்வி மிகவும் சரியானது என்பதற்கு அக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் "யார் இந்த கீர்த்தி ஆசாத்" என்று கேட்டு கம்பீரும் வேறு சிலரும் திசை திருப்பியதே சான்று. 

பிகு: இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் மோடி என்பதை ஏன் யாருமே சொல்லவில்லை என்பது புதிராக உள்ளது. மோடி போட்டியை பார்க்க வந்திருந்தால் அதுவே இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து அவர்களின் விளையாட்டை பாதித்திருக்கும். 

50 ஓவர்கள் உலகக் கோப்பையில் இந்தியா தோற்க மோடியின் வருகைதானே முக்கியக் காரணம்!

பிகு 2 : டெல்லியில் உள்ள ஃபெரோட்ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜெய்ட்லி ஸ்டேடியம் என்று பெயர் வைத்ததையும் கீர்த்தி ஆசாத் கண்டித்தார். அவரை விட மிகக் கடுமையாக கண்டித்தவர் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. அப்படி அருண் ஜெய்ட்லி பெயரை வைக்க வேண்டுமென்றால் ஒரு ஸ்டாண்டிற்கு வைக்கப்பட்டிருந்த தன் பெயரை நீக்கி விடுங்கள் என்றார். டெல்லி கிரிக்கெட் வாரியம் பேடியின் பெயரை நீக்கி விட்டது.


புதிய பின் குறிப்பு : எழுதி நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு இது. 

ஐவரும் வெல்ல வாழ்த்துக்கள்

 


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)  சார்பில் 

பழனி தொகுதியில் தோழர் என்.பாண்டி,

கீழ்வேளூர் தொகுதியில் தோழர் டி.லதா,

கந்தர்வகோட்டை தொகுதியில் தோழர் எம்.சின்னதுரை,

பத்மநாபபுரம் தொகுதியில் தோழர் ஆர்.செல்லசுவாமி,

திருவொற்றியூர் தொகுதியில் தோழர் எல்.சுந்தரராஜன்

ஆகியோர் போட்டியிடவுள்ளனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.  

அவர்களின் குரல் உழைக்கும் மக்களின் குரலாக, ஜனநாயகத்தின் குரலாக, மத நல்லிணக்கத்தின், மதச்சார்பின்மையின் குரலாக தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கும்.

இந்த பதிவை படிப்பவர்களில் இத்தொகுதிகளின் வாக்காளர்கள் யாராவது இருப்பின் அவர்களை 


சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

Monday, March 30, 2026

சினிமா காமெடியை நிஜமாக்கிய விஜய்

 


கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் டெல்லி கணேஷ், தன் மனைவி, மகன், மகள் ஆகியோருக்காக செலவு செய்த தொகையை கணக்கு எழுதி அதை சொல்லி குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார். தான் செலவு செய்த பணத்தை மகனின் கல்யாணத்திற்கு வரதட்சணையாக வசூல் செய்ய துடிப்பார். சமைத்துப் போட்டதற்கான பணத்தை கழித்துக் கொண்டு மீதத் தொகையை கொடுத்து விட்டு அம்மா வீட்டிற்குப் போகச் சொல்லி மிரட்டுவார்.

இது திரைப்படக் காட்சி.

அதை தவெக தற்குறிகளின் தலைவன் விஜய் நிஜமாக்கி விட்டார்.

ஆமாம், அவர் இன்று தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் மனைவி, மகன், மகள் மட்டுமல்ல அப்பா, அம்மாவிற்குக் கூட கடன் கொடுத்ததாக கணக்கு காண்பித்துள்ளார்.


விஜய் தினம் ஒரு கண்டெண்ட் கொடுப்பார் என்பது நிச்சயம். சார் நான் மத்த விஷயங்களும் எழுதனும், அதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டெண்ட் கொடுங்க, போதும்.

நினைவுக்கு வந்த சண்டை

 நேற்று  நீதா அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஐ.பி.எல் போட்டியை என் மகன் பார்த்துக் கொண்டிருந்த போது எட்டாண்டுகள் முன்பாக  30, மே, 2018 அன்று எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. "முற்றுகை" எழுத தரவுகள் சேகரிக்க கொல்கத்தா போயிருந்த போது பார்த்த சம்பவத்தை பதிவாக எழுதியிருந்தேன்.

இரு அணிகளிலும் முதலாளிகள் அப்படியே தொடர்கிறார்கள். ரசிகர்களும் தங்கள் மாநிலத்து அணி என்ற விசுவாசத்தோடுதான் உள்ளனர். கொல்கத்தா போல மும்பையில் சண்டை நடந்ததா என்று தெரியவில்லை. 

இதோ பதிவுக்கு செல்கிறேன்.


என்ன தைரியம் இருந்தா அந்த கொடியை?





ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொல்கத்தா பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது அதனை தொடரலாம் என்று உள்ளேன்.

எங்கள் விருந்தினர் இல்லத்துக்கு அருகில்தான் ஈடன் கார்டன் மைதானம் உள்ளது.  நான் அங்கே இருந்த நாள் ஒன்றில்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே  ஒரு போட்டி இருந்தது.

அன்று மாலை ஏழு மணி அளவில் ஈடன் கார்டன் மைதானத்துக்குச் செல்லும் சாலை வழியாக நான் எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கி ரசிகர்கள் சென்று கொண்டிருக்க எதிர் திசையில் நடந்து செல்வதே சிரமமாக இருந்தது.

பல சாலையோர வியாபாரிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கொடியையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். விறுவிறுப்பாகவே வணிகம் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞர் கூட்டத்திடம் ஒரு வியாபாரி, மும்பை இந்தியன்ஸ் அணி கொடியை  வேண்டுமா என்று கேட்க அவர்களுக்கு கோபம் வந்து விட்டது.

அந்த வியாபாரியிடம் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். நான் புரிந்து கொண்ட வரை அவர்கள் கேட்டது

“எங்கே வந்து எந்த கொடியை விற்கிறாய்?  கொல்கத்தாகாரனிடம் மும்பை கொடியை வாங்கச் சொல்வதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்?”

அடிதடி என்று முற்றுவதற்கு முன்பாக மற்ற வியாபாரிகள் வந்து விலக்கி விட்டார்கள்.

அந்த இளைஞர்களை நினைத்தால் பாவமாக இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற அணி

கொல்கத்தா நகரத்தின் அணியும் கிடையாது,
மேற்கு வங்க மாநிலத்தின் அணியும் கிடையாது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்களா என்ற விபரம் எனக்கு தெரியாது.

அது ஷாருக்கானின் அணி.

அது போல மும்பை இந்தியன்ஸ் அணி முகேஷ்  அம்பானியின் அணி.

முதலாளிகளின் அணிக்காக நீங்கள் ஏனப்பா தேவையே இல்லாமல் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பின் குறிப்பு

மேலே உள்ள படம், எங்கள் விருந்தினர் இல்லத்திலிருந்து ஈடன் கார்டன் மைதானத்தை எடுத்த படம். ஒளி விளக்குகள் மட்டும்தான் தெரிகிறது.

பிகு: இன்னொரு கிரிக்கெட் பதிவு நீண்ட காலமாக ட்ராப்டிலேயே உள்ளது. முடிந்தால் மாலையில் இல்லை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, March 29, 2026

காமெடிக்கு அவங்க கியாரண்டி

 


தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. விறுவிறுப்பான காட்சிகள், திருப்பு முனைக் காட்சிகள், கண்ணீர் ததும்பும் செண்டிமெண்ட் காட்சிகள் மட்டுமல்ல காமெடிக் காட்சிகளும் நிறைந்ததாக மட்டும் தேர்தல் இருக்கப் போவதில்லை. காமெடி காட்சிகளும் நிறையவே இருக்கப் போகிறது. அப்படிப் பட்ட காமெடி காட்சிகளை வழங்குவதில் முக்கிய பாத்திரம் விஜய்க்கும் அவரது தவெக தற்குறிகளுக்கும்தான் இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் மேலே உள்ள படம். 

Friday, March 27, 2026

அப்துல் கலாம் ஆலோசகரின் இழிச் செயல்

 


முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ்.

இவர் விஜய் ரசிகைகளை மிகவும் கீழ்த்தரமான வார்த்தை மூலம் கொச்சையாக திட்டியுள்ளார்.  சில விஜய் ரசிகைகள் பேசுவது எரிச்சலூட்டும் என்பது வேறு விஷயம். அவர்களை தற்குறிகள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றால் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் பேசுவது  கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று.

அதற்காக ஒட்டுமொத்தமாக அனைத்து விஜய் ரசிகைகளையும் கேவலமாக சித்தரிப்பதும், சர்ச்சை உருவான பிறகும் வருத்தம் தெரிவிக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிப்பதும் மோசமான அணுகுமுறை.

அப்துல் கலாம் அவர்களோடு நெருக்கமாக இருந்ததாக பொன்ராஜ் சொல்வார். அப்துல் கலாமிடமிருந்து எதுவும் கற்கவில்லை போல .  அப்துல் கலாம் உயிரோடு இருந்திருந்தால் இவரது செய்கையை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

இவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Thursday, March 26, 2026

ட்ரம்பின் குரு சீமான் . . .

 


ட்ரம்ப் உதிர்த்த லேட்டஸ்ட் முத்து கீழே உள்ளது.


இப்படியெல்லாம் பேச அவர் சீமானிடம்தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மோடியையும் சீமானையும் தவிர இப்படியெல்லாம் கதை அளக்க உலகில் வேறு யார் இருக்கிறார்கள்!

ட்ரம்ப் சொன்னதை இரான் மறுத்துள்ளதாக அதே செய்தி சொல்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாந்தான் என்று ட்ரம்ப் அன்றாடம் சொன்னாலும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச மோடி அரசால் ஏன் முடியவில்லை?

பழத்தட்டு பறி போன கோபத்தில் துர்வாசர்

 


துக்ளக் பத்திரிக்கையில் துர்வாசர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தவரும் கரிசல் இலக்கிய நாயகர் கி.ரா இறந்த போது அரசு மரியாதை கொடுத்ததை பொறாமையுடன் எழுதிய வண்ண நிலவன் என்ற ராமச்சந்திரன் உலகநாதன் என்ற எழுத்தாளர் எழுதிய பதிவு கீழே உள்ளது.



அந்த பழத்தட்டை  வைரமுத்து எடுத்துக் கொண்டு போகாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் நமக்கு இந்த காமெடி பதிவு கிடைத்திருக்காது.

அவருடைய பதிவில் அதிகமான அழுத்தம் பழத்தட்டிற்குத்தானே இருக்கிறது!

பிகு: எழுதி ஒரு வாரமான பதிவு இது

Wednesday, March 25, 2026

கடுப்பிலிருந்து விடுபட விவால்டி அற்புதம்

 


மாறுதலாக ஒரு இசைப் பதிவு.

முகநூலில் பார்த்த ஒரு அருமையான காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




வளர்ந்த வயலின் கலைஞர்களுக்கு நிகராக அந்த சிறுவன் பியானோ வாசிப்பது அற்புதமாக உள்ளது.

அவர்கள் வாசிக்கும் இசைக் கோர்வை, பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த அண்டோனியா விவால்டி எனும் இசைக் கலைஞர் அமைத்த "விவால்டி" என்பதாகும். 

எரிச்சலான ஒரு தருணத்தில் ( பத்து கொடுத்த கடுப்புதான்) மனதை மாற்ற இந்த காணொளி  உதவிகரமாக இருந்தது.

பிகு: மேலே எதற்கு ஒரு சட்டையின் புகைப்படம்? 

விவால்டி என்றதும் அந்த காலத்தில் பாம்பே டையிங் கம்பெனி வெளியிட்ட பிராண்டட் ஷர்ட்டுகள்தான் நினைவுக்கு வந்தது. இன்னமும் அது இருக்கிறது என்பதும் இப்போது தெரிந்தது. 

விவால்டி என்றொரு ப்ரௌசர் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது.

Tuesday, March 24, 2026

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் க்யானேஷ்

 


தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு கடிதத்தில் கேரள பாஜகவின் முத்திரை இருப்பதும் அது அலுவலக ரீதியிலான தவறு என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததும்தான் இன்றைய பரபரப்புச் செய்தி.



எனக்கு சில உண்மைகள் தெரிஞ்சாகனும், மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்டு தலைமை தேர்தல் ஆணையரான மிஸ்டர் க்யானேஷ் குமார்.

பாஜக சீல் உங்கள் அலுவலகத்தில் உள்ளதா?

அல்லது

உங்கள் கடிதங்கள் பாஜக அலுவலகத்தில்தான் தயாரிக்கப்படுகிறதா?

ஆமாம்.

ஏழு வருடத்துக்கு முந்தைய கடிதம் இப்போது ஏன் சுற்றுக்கு வந்து கவனம் பெற்றது? 

உங்கள் அலுவலகத்தில் கூட நேர்மையான ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது இருக்கிறார்களா,  என்ன?

புதுவையில் அடி வாங்கும் காங்கிரஸார்.

 


புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமிக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படாததால் அவரது ஆதரவாளர்கள், புதுவையின் தற்போதைய மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வரும் தற்போதைய புதுவை காங்கிரஸ் தலைவருமான வி.வைத்தியலிங்கம் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தி காவல்துறையால் கலைக்கப்பட்டுள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.  அப்போது எழுதிய பதிவு கீழே நீல நிறத்தில் . . .

அடி வாங்கிய ஆளும் கட்சியினர்



ஒரு வழியாக புதுச்சேரி முதல்வர் யாரென்பது முடிவாகி விட்டது. மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது கிடையாது என்ற கொள்கை எனக்கு உள்ளதால் அது பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை.

இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத கட்சிக்காரர்கள் கல் வீசி  பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க, காவல்துறை அவர்களை துரத்தி துரத்தி தடியால் அடித்திருக்கிறது.

இந்தியாவிலேயே ஆளும்கட்சியினர் அடி வாங்கியது முதன் முதலாக புதுச்சேரியில் என்றுதான் நினைக்கிறேன். 

ஆரம்பம் அமோகமாக இருக்கிறது. 

பின் குறிப்பு : ஒரு பிளாஷ்பேக். புதுவையில் திரு சண்முகம் என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு வசதியாக தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய யாரும் தயாராக இல்லாததால் ஆறு மாதத்தில் ராஜினாமா செய்து விட்டார். 

இதில் என்ன வேடிக்கை என்றால் நாராயணசாமியை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று காங்கிரஸார் போலீஸிடம் அடி வாங்கினார்கள் (அப்போது அடி வாங்கிய நமச்சிவாயம் வகையறாக்கள் பின்னாளில் பாஜகவிற்கு தாவி விட்டார்கள் என்பது வேறு விஷயம்.) இப்போது நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அடி வாங்கினார்கள்.


Monday, March 23, 2026

8931 நாட்கள் வேதனைதான் சங்கிகளே

 


ஏதோ 1983 உலகக் கோப்பையில் கபில்தேவ் 175 ரன் அடித்து உலகச் சாதனையை உருவாக்கியது போல 

ஏதோ ஒரு சாதனை படைத்ததாக சங்கிகள் இன்று பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் முதல்வராகவும் இந்திய பிரதமராகவும் அவர் 8931 நாட்கள் பதவியில் இருந்து சாதனை படைத்ததாக பீற்றிக் கொள்கிறார்கள்.

குஜராத் முதல்வராகவோ அல்லது இந்திய பிரதமராகவோ அவர் எதுவும் கிழிக்கவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை.

பூஜ் நில நடுக்கத்தின் போது அன்றைய முதல்வர் கேசுபாய் பட்டேல் மீது ஏற்பட்ட  அதிருப்தி காரணமாக யானை மாலை போட்டு ...............அரசன் ஆன கதையாக அவர் முதலமைச்சர் ஆனார்.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றதுதான் அவருடைய ஒரே சாதனை. 

அவருடைய செல்வாக்கு சரியும் போதெல்லாம் போலி எண்கவுண்டர்கள் செய்தது இன்னொரு சாதனை.

அவருடைய சாதனைகள் தொடர்பாக அவர் முதல்வராக இருக்கும் போதே எழுதிய மூன்று பதிவுகளை படியுங்கள்.

உங்கள் மகன் மோடி போல இருப்பதை அனுமதிப்பீர்களா?

குஜராத் கோயபல்ஸ்கள்

டாடா நானோ -மேற்கு வங்கத்திலும் குஜராத்திலும்

பிரதமராக என்ன கிழித்தார் என்பதை நிறைய நிறைய எழுதியுள்ளேன். எதற்கும் லாயக்கில்லாத, ஊதிப் பெருக்கப்பட்ட வெற்று பிம்பம் மோடி.

அவருடைய ஆட்சிக்காலம் அவருடைய ஊதாரித்தனமான சொகுசு வாழ்விற்கு உதவியுள்ளது. எஜமானர்கள் அதானி, அம்பானி வகையறாக்கள் செல்வம் பெருக வழி வகுத்துள்ளது.  ட்ரம்ப், நெதன்யாகு போன்ற எஜமானர்கள்  அடி பணிந்து கிடப்பதே சொர்க்கமாய் நினைக்கிறார்.

மோடி குஜராத் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் கொடுத்தது

8931 நாட்கள் வேதனை மட்டுமே. 

அசிங்கப்படுத்தும் சங்கிப் பெண்ணின் நேர்மை


 கீழே உள்ள பதிவை எழுதிய பெண்மணி பாஜகவின் மகளிர் அணி பொறுப்பாளர். ஆபாசமாகவும் அசிங்கமாகவும் எழுதக்கூடியவர். 

கௌசல்யா சங்கர், ஃபாத்திமா பாபு ஆகிய பெண் ஆளுமைகளை இழிவு படுத்தி வாங்கிக் கட்டிக் கொண்டார். வாச்சாத்திப் போராளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களை அசிங்கமாக ஒருமையில் எழுதிய போது நான் சூடாக பதிலடி கொடுத்தேன்.

நேற்று முகநூல் இந்த அம்மையாரின் பதிவொன்றை மெனக்கெட்டு எனக்கு காண்பித்தது.


தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குஷ்புவை உருவக்கேலி செய்த அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே . . .


ஆமாம் இவர் இவ்வளவு தெனாவெட்டாக எழுதுவதற்கான காரணம் என்ன? எங்கிருந்து தைரியம் வருகிறது?

சனாதனம் கொடுக்கும் தைரியம், மேட்டிமை புத்தி கொடுக்கும் திமிர்.

 தோழர் பெ.சண்முகமும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சங்கரை மணம் செய்து அவரை பறி கொடுத்து ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நிற்பவர் கௌசல்யா. ஃபாத்திமா பாபுவும் குஷ்புவும் இஸ்லாமியர்கள். அதனால்தான் அவர்கள் மீதெல்லாம் இந்த சங்கிப் பெண்மணி வெறுப்பைக் கக்குகிறார்.

Sunday, March 22, 2026

மீண்டும் மஞ்சுமல் பாய்ஸ் வேண்டாம்

 


மலையாளத் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கேரளாவிலிருந்து கொடைக்கானல் உல்லாசப் பயணம் வந்து "குணா" குகையில் விழுந்து உயிர் தப்பிய இளைஞனின், அவனை மீட்ட நண்பர்களின் கதை.

கேரள் வாலிபர்களை குடிகாரர்கள், இத்யாதி, இத்யாதி என ஜெயமோகன் திட்டி அதனால் பாட்டு வாங்கியதும் "கண்மணி அன்போடு" பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டதும் கிளைக் கதைகள்.







மேலே உள்ள அழகிய படங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலையின் அற்புதக் காட்சிகள்.


நேற்று முன் தினம் அங்கே ஒரு வாலிபன் செல்ஃபி எடுக்கும்  மோகத்தில் வேகத்தில் கால் தவறி விழ நூறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான்.

ராணுவத்தினர் வந்து சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளனர்.


இன்று செல்பி மோகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

புகைப்படங்கள் எடுங்கள். 

ஆனால் உயிரைப்பற்றியும் கவலைப்படுங்கள்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது.

இன்னும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் அனுபவம் வேண்டாமே 


Saturday, March 21, 2026

நிலமே நடுங்கிப் போச்சு டாக்டரய்யா

 


நேற்று தமிழ்நாடு முழுதிலும் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தீர்களா?

ஆமாம்.

நான் கூட நடுங்கிப் போய் விட்டேன்.

காரணம் தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

இதோ பாருங்கள்


இந்த தேர்தலின் முதல் காமெடி இது.

இன்னும் என்னென்ன வருமோ? ஆட்டுக்காரன் தயவு செய்தால் நிறைய காமெடி கிடைக்கும்.