Tuesday, September 30, 2025

மொழிபெயர்ப்பு தினம் - செல்ஃபி வாழ்த்து

 


எச்சரிக்கை : இது ஒரு தற்பெருமை பதிவு  😝😝😝😝😝

இன்று உலக மொழிபெயர்ப்பு தினம். சில வாழ்த்துக்களைப் பார்த்தேன். தோழர்கள் ச.சுப்பாராவ், விஜயசங்கர் ராமச்சந்திரன், கி.ரமேஷ், இ.பா.சிந்தன் போல பெரிய பெரிய புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்யாவிட்டாலும் சங்கச் சுற்றறிக்கைகள், இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழின் கட்டுரைகள், சில அமைப்புக்களின் அறிக்கைகள் என்று நானும் கொஞ்சம் கொஞ்சம் மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.




எங்கள்  வேலூர் கோட்டத்தின் சார்பில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பிரசுரங்களின் அட்டைப்படங்கள்தான் மேலே உள்ளது.

முதல் பிரசுரத்தில் ரோஹித் வெமுலாவின் இறுதிக்கடிதம், கன்னையா குமாரின் உரை, இன்சூரன்ஸ் வொர்க்கரில் தோழர் அமானுல்லா கான் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் தமிழாக்கம் உள்ளது. கன்னையா குமார் உரையை தமிழாக்கம் செய்தவர் தோழர் விஜயசங்கர். மற்றவை என் முயற்சி.

1985 ல் இந்தோரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் தோழர் சுனில் மைத்ரா நிகழ்த்திய உரையை நான் தமிழாக்கம் செய்திருந்தேன்.

மூன்றாவது பிரசுரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியமான போராட்டமான கதவடைப்பிற்கு எதிரான போராட்டம் பற்றியது. தோழர்கள் சுனில் மைத்ரா, சந்திர சேகர் போஸ், அமானுல்லா கான் ஆகியோரின் கட்டுரைகள், இன்சூரன்ஸ் வொர்க்கரில் அப்போதும் இந்திய குடியரசு தினம் பற்றி கடந்த ஆண்டும் வெளியான தலையங்கள்கள். தோழர் அமானுல்லா கானின் கட்டுரையை கோவைக் கோட்ட பொதுச்செயலாளர் தோழர் கே.துளசிதரன் தமிழாக்கம் செய்திருந்தார். மற்றவை எனது முயற்சி.

மொழிபெயர்ப்பாளர் என்று மற்றவர்கள் கூறுமளவிற்கு இவை போதுமானதல்ல.

அதனால் கன்னி ராசி படத்தில் கவுண்ட மணி அவர் படத்திற்கு அவரே மாலை போட்டது போல மொழிபெயர்ப்பு தினத்திற்கு நானே எனக்கு வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். 




கரூர் : சதி என கட்டமைக்கப்படும் சதி

 


கரூர் நெரிசல் மரணங்களுக்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியான விஜய்யை தப்புவிக்கவும் தவெக கட்சியின் தற்குறித்தனங்களை மடை மாற்றவும் விஜய்யின் மறைமுகக் கூட்டாளிகள் இப்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வும் திமுகவின் கரூர் மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி உடனடியாக மருத்துவமனை சென்றார், அன்பில் மஹேஷ் பொய்யாமொழி ஏன் உடனடியாக திருச்சியிலிருந்து கரூர் சென்றார், முதலமைச்சர் ஏன் கரூர் போனார், துணை முதல்வர் துபாயிலிருந்து ஏன் திரும்பினார்  போன்ற அபத்தமான கேள்விகளை அறிவார்ந்த கேள்விகள் என்று நினைத்து சங்கிகளும் அதிமுகவினரும் தவெக தற்குறிகளும் நாதக தம்பிகளும்  கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். அதே நேரம் இலங்கைப் பயணத்திலிருந்து பாதியில் வந்த ஆட்டுக்காரனை பாராட்டுகிறார்கள். 

எந்த ஒரு இயற்கைச் சீற்றமானாலும் பேரழிவாக இருந்தாலும் அதைப் பற்றி கவலையே படாத மோடி, ஆணவத்தின் மறு வடிவமான நிர்மலா அம்மையாரை அனுப்பி வைக்கிறார். தன் சொந்த மாநிலங்களில் நடக்கும் துயரங்களையே கண்டு கொள்ளாமல் ஒப்பனையில் கவனம் செலுத்தும் ஹேமாமாலினி, டெல்லி கலவரக் குற்றவாளி அனுராக் தாகூர், பிஞ்சிலேயே வெம்பிய தேஜஸ்வி சூர்யா ஆகியோரையெல்லாம் கொண்ட ஒரு குழுவை அனுப்பப்போகிறார். இப்படி ஒரு குழு மணிப்பூருக்குச் செல்லவில்லையே! இரண்டாண்டுகளுக்குப் பிறகு இவர் சென்றும் எதுவும் கிழிக்கவில்லை என்பது வேறு கதை.

சம்பவ இடத்திலிருந்து விஜய் ஓடிப் போன பின்பு  இறந்து போனவர்களின் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் ஆம்புலன்ஸ்கள் ஏற்றிச் செல்கையில் தவெக கட்சியின் இரு பெண்கள் "எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத போது எதற்கு இங்கே இத்தனை ஆம்புலன்ஸ்கள்?" என்று கேட்கும் காணொளி ஒன்றை பார்த்தேன். அவ்வளவுதான் அவர்களின் அறிவு!

விஜய் மூலமாக அரசியல் அறுவடை நடத்தலாம் என்று ஆசைப்பட்டு அவருக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்த அழிவு சக்திகள் எல்லாம் இந்த கரூர் நெரிசல் மரணங்கள்  மூலமாக ஆடிப் போய் விட்டன. விஜய் ஓடிப் போனதும் அதிசயமாக அரசு  இயந்திரம் வேகமாக செயல்படத் தொடங்கியதும் அந்த ஆட்டத்தை அதிகமாக்கி விட்டது.

அதனால்தான் அபத்தமான கேள்விகளை எழுப்பி கரூர் சம்பவமே ஒரு சதி என்று கட்டமைக்கப் பார்க்கிறது. இதன் மூலமாக விஜய்க்கு அனுதாபம் தேடித்தரவும் முயல்கிறது.

ஆனால் இந்த சதிகாரர்கள் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்பார்கள் என்பதை எதிர்காலம் உணர்த்தும். 




Monday, September 29, 2025

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க. . .

 நெரிசல் மரணங்கள் உருவாக்கியுள்ள துயரத்திலிருந்து மனதைச் சற்று மாற்ற . . .




Sunday, September 28, 2025

கரூர் மரணங்கள் - யாரெல்லாம் பொறுப்பு?

 


நேற்று கரூரில் நடைபெற்ற நெரிசல் மரணங்கள்  மனதை மிகவும் பாதித்தது. எல்லா அழிவுகளைப் போலவும் இங்கேயும் பெண்களும் குழந்தைகளும்தான் அதிக அளவில் மரணமடைந்துள்ளனர்.

இதனை ஒரு துயர சம்பவம், துன்பியல் நிகழ்வு என்றெல்லாம் கடந்து போய் விட முடியாது.

இதனை வெறும் விபத்து என்றும் சுருக்கிட முடியாது, கூடாது. கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டிய சோகம் இது.

இச்சம்பவத்தின் முதல் குற்றவாளி கண்டிப்பாக விஜய் மற்றும் அவருக்கு ஆலோசனை கூறும் அறிவிலி தலைவர்களும்தான்.

அந்த காலத்தில் எம்.ஜி.ஆருக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து அவரை பார்த்து விட்டு போவார்கள் என்று சொல்லி உசுப்பேத்தி விஜய்க்கும் தான் ஒரு எம்.ஜி.ஆர் என்ற நினைப்பு வந்து விட்டது. அதனால்தான் 12 மணிக்கு வர வேண்டிய கூட்டத்திற்கு மாலை ஏழு மணிக்கு வருகிறார். 

அத்தனை நேரம் சோறு, தண்ணி இல்லாமல் வெயிலில் காத்து நிற்பவன் சோர்வாகி விழாமல் என்ன செய்வான்? கூட்டத்தை காக்க வைக்காமல் குறித்த நேரத்திற்கு வருவதற்கு விஜய்க்கு என்ன கேடு? 

ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று தெரிகிற போது எதற்கு சாலையில் கூட்டம் நடத்த வேண்டும்? ஒரு மைதானத்தில் நாற்காலிகள் போட்டு நடத்த வேண்டியதுதானே!

எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் உட்படாத தற்குறிகளாகத்தான் தன் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதைக் கூட புரிந்து கொள்ளாத விஜய்க்கு எதற்கு அரசியல் பிரச்சாரக் கூட்டங்கள்?

இந்த மரணங்களுக்கான முதல் குற்றவாளி கண்டிப்பாக விஜய்தான். 

விஜய் மீது மட்டும் பழி போட்டு தமிழ்நாடு அரசோ  காவல்துறையோ தப்பித்துக் கொள்ள முடியாது.

கரூரின் துயரங்கள் விஜயின் முந்தைய கூட்டங்களில் கூட நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்தது. ஏதோ அந்த மக்களின் அதிர்ஷ்டம் அவர்கள் உயிர் தப்பித்து விட்டனர். அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு விஜயின் சாலையோரக் கூட்டங்களுக்கு அரசு அனுமதி மறுத்திருக்க வேண்டும்.  "என்ன பயந்துட்டீங்களா ஸ்டாலின் அங்கிள்?" என்று விஜய் பேச வாய்ப்பு தரக்கூடாது என்று விஜய் கூட்டங்களை அனுமதித்த அரசும் இந்த மரணங்களுக்கு பொறுப்பு.

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மக்கள் திரளும் போதே காவல்துறை  அந்த சாலையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கட்டுக்கடங்காமல் கூட்டம் சேரும் போது கலைத்து விட்டிருக்க வேண்டும்.  அதையும் விஜய் கலாய்ப்பாரே என்ற பயத்தில் தங்களுக்கென்ன என்று அலட்சியமாக இருந்த காவல்துறையும் இந்த மரணங்களுக்கு பொறுப்பானவர்கள்தான்.

பொறுப்பின் சதவிகிதம் வேண்டுமானால் 80:10:10 என்று இருக்கலாம். ஆனால் அனைவரும்தான் பொறுப்பு.

அதே சமயம் கொஞ்சம் கூட பொறுப்பில்லாதவர் விஜய் என்பது அவர் சம்பவ இடத்தை விட்டு ஓடி சென்னைக்கு பறந்ததில் என்பதில் புரிகிறது. 

பெரும் தவறிழைத்த விஜயுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை WE STAND WITH VIJAY என்று அவரது ரசிகக் கண்மணிகள் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் அரசியல் புரிதல் அற்ற மூடர்கள். அப்படித்தான் சொல்வார்கள். நாதக வும் பாஜக வும் ஏன் அப்படிப்பட்ட நிலை எடுக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் மூவருமே கூட்டாளிகள். . . .




Friday, September 26, 2025

வெளிநடப்பில் இந்தியாவும் உண்டா?

 


ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் இன்று இஸ்ரேல் நாட்டின் பிரதமர், கொடுங்கோல, கொடூரன், கொலைகாரன் நெதன்யாஹூ பேசத் தொடங்குகையில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.



கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ள நிலையில் இந்த வெளிநடப்பு இஸ்ரேலை உலக நாடுகள் ஒதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதன் அடையாளம்.

பெரும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் ஆதரவே இஸ்ரேலின் அராஜகத்திற்கு முக்கியக் காரணம்.

சரி,

இந்தியா இந்த வெளிநடப்பில் கலந்து கொண்டதா?

நண்பன் கிறுக்கன் ட்ரம்பின் அதிருப்தியை பெறக்கூடாது என்பதற்காக நாற்காலியில் பசை போட்டு உட்கார்ந்து விட்டார்களா? 

அதுக்குள்ள மாலை போட்டுட்டாங்களே ஆட்டுக்காரா!!!

 




பாவம் ஆட்டுக்காரன்!

ஆட்டுக்காரனின் எதிரிகள் பாஜக கட்சிக்கு வெளியே இல்லை, பாஜக கட்சியில் உள்ள எதிர் கோஷ்டிகளிலும் இல்லை. 

பாஜகவில் உள்ள ஆட்டுக்காரனின் அல்லக்கைகள்.

ரசிகர் மன்றம் ஆதரிப்பதில் தவறில்லை. அதற்காக போர்ட் வைப்பதிலும் தவறில்லை. ஆனால் அதற்கு மாலை போடுவதுதான்  உதைக்கிறது.

குழப்பமாக உள்ளதா?

கீழேயுள்ள படத்தை பார்க்கவும்.



Thursday, September 25, 2025

மகளிர் இட ஒதுக்கீடு - அதான் வராதே சபாநாயகரே . . .

 


மகளிர் சட்டம் அமலானால் பெண்களுக்கு உரிய இடம் கிடைத்திடும் என்று திருப்பதியில் ஒரு கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியுள்ளார்.


சரி சபாநாயகரே, அந்த மகளிர் சட்டம் எப்போ அமலாகும்?

மக்கட்தொகை கணக்கெடுப்பு நடந்து அதன் பின்பு தொகுதி சீரமைப்பு செய்து அதன் பின்பு பெண்களுக்கான தொகுதிகள் எவை என்று கண்டறியப்பட்டு பிறகு ஒதுக்கப்படும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.

மக்கட்தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும்?

தெரியாது.

மக்கட்தொகை கணக்கெடுப்பே எப்போது நடக்கும் என்று தெரியாத நிலையில் அது எப்போது துவங்கி, எப்போது முடிந்து அதன் பின்பு எப்போது தொகுதி சீரமைப்பு நடந்து பின் எப்போது மகளிருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்?

மொத்தத்தில் 

மகளிர் இட ஒதுக்கீடு வரும், ஆனால் வராது . . .

Wednesday, September 24, 2025

எப்படி இருந்த லடாக்கை இப்படி???

 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான லடாக்கை மோடி அரசு ஜம்மு காஷ்மீரிலிருந்து துண்டித்து தனியான யூனியன் பிரதேசமாக அறிவித்தது. 

லடாக், லே  பகுதியின் அழகை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


இப்படி அழகு கொஞ்சும் இடத்தின் இன்றைய நிலை என்ன?


இங்கே எரிந்து கொண்டு இருப்பது லே நகரில் உள்ள பாஜக அலுவலகம்.

காரணம் என்ன?

தனி யூனியன் பிரதேசம் ஆனதால் லே, லடாக் பகுதியில் தேனும் பாலும் கரை புரண்டோடும் என்றொரு ஜூம்லா வாக்குறுதியை மோடி அளித்தார். 

வழக்கம் போல எதுவும் நடக்கவில்லை. புதுவை போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளதைப் போல சட்டப்பேரவையும் கிடையாது. அதனால் பிரச்சினைகளை பேச எம்.எல்.ஏ க்களும் கிடையாது. 

அதனால் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று போராட்டம் நடந்தது. 

3 இடியட்ஸ் படத்தில் ஷாருக்கான், நண்பன் படத்தில் விஜய் தோன்றிய கொஸாக்ஸி பசப்புகழ் பாத்திரத்தின் ஒரிஜினலான சோனம் வாங்க்சுக் என்பவர் இந்த போராட்டத்தின் மையப்புள்ளி.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த பயனும் இல்லை. அவ்வளவு சீக்கிரம் மோடி விட்டுக் கொடுத்திடுமா என்ன! அதிலும் 2024 மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற பாஜக வேட்பாளருக்கோ மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

ஜம்மு காஷ்மீருக்கே இன்னும் மாநில அந்தஸ்து தராத மோடி அரசு லடாக்கிற்கு அவ்வளவு சுலபமாக கொடுத்திடுமா என்பது சந்தேகமே.

பாஜக அரசின் அணுகுமுறை கலவரமாக வெடித்து நால்வர் இறந்து போக மக்களின் கோபம் பாஜக அலுவலகத்தின் மீது நெருப்பாக வெடித்துள்ளது. 

உரைய வைக்கும் குளிர்ப் பிரதேசத்தை பற்றி எரிய வைத்ததுதான் மோடியின் சாதனை.

Tuesday, September 23, 2025

வடிவேலு பாக்கெட்டும் மோடி ஃபைலும்

 


என்னத்தான் போட்டோ ஷூட் என்றாலும் அந்த ஃபைலில் ஒரே ஒரு காகிதத்தையாவது மோடி வைத்திருக்கலாம் . . .

என்ன அவர் மேல்மாடி காலியாய் இருப்பதை சிம்பாலிக்காக சொல்கிறார் போல . . .

ஞாபகம் வருதா மோடி???

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்த செய்தி வெளியாகியிருந்தது. அந்த புகைப்படம் ஜெய்சங்கரின் முகத்தில் தென்பட்ட கவலை ரேகைகளை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தது.


இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 % வரி, ஹெச்1பி விசாக்கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தியது போன்ற அமெரிக்க ஜனாதிபதி கிறுக்கன் ட்ரம்பின் முடிவுகள் மிகப் பெரிய இடியாக விழுந்துள்ள நிலையில் இவற்றை எப்படி மாற்ற வைக்க முடியும் என்ற கவலையெல்லாம் இருக்குமல்லவா! அதுதான் அவர் முகத்திலும் வெளிப்படுகிறது.

ட்ரம்பும் மோடியும் நண்பர்கள் அல்லவா! அப்படி இருக்கையில் மோடிக்கு வலி கொடுக்கும் முடிவுகளை எப்படி ட்ரம்ப் எடுக்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழலாம்.

ஆமாம். மோடியும் ட்ரம்பும் நண்பர்கள்தான்.

எப்போது ?

ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் . . .

அவர் இரண்டாவது முறையாக போட்டியிட்ட போது அவரது வெற்றிக்காக மோடி மிகவும் பாடுபட்டார். "நமஸ்தே ட்ரம்ப்" என்ற பெயரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் எல்லாம் செய்தார். சங்கிகள் இந்தியாவில் யாகம் எல்லாம் செய்தார்கள். அவர் மூன்றாவது முறையாக போட்டியிட்ட போதும் சங்கிகள் யாகம் செய்தனர்.

ஆனால் இரண்டாவது முறை போட்டியிட்ட தேர்தலில் தோற்றுப் போன பின்பு மோடி அவரை கண்டுகொள்ளவில்லை. ஜனாதிபதி ஜோ பைடனின் நல்ல புத்தகங்களில் ( GOOD BOOKS ) இடம் பெறவே விரும்பினார். ஜோ பைடனின் மனைவிக்கு மோடி அளித்த நாற்பது லட்ச ரூபாய் வைர நெக்லஸ் ( அது ஒன்றும் தாமோதர்தாஸ் வீட்டு சொத்தல்ல, இந்திய கஜானாவிலிருந்து செலவழிக்கப்பட்டதுதான்) எல்லாம் கிறுக்கன் ட்ரம்பை எரிச்சலூட்டியிருக்கும்.

அது மட்டுமா ட்ரம்ப் மூன்றாம் முறையாக போட்டியிட்ட சமயத்தில் மோடி அமெரிக்கா சேன்ற போது "மோடி என்னை சந்திக்கவுள்ளார்" என்று ட்ரம்ப் சொன்ன போது அப்படியெல்லாம் எந்த திட்டமும் இல்லை என்று அவசரம் அவசரமாக மறுத்தார்.

இதன் விளைவாகவே ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு மோடிக்கு அழைப்பே கிடையாது.  இந்திய வரி விதிப்பு முறையையும் எரிச்சலோடு கண்டித்தார்.

இந்திய பாகிஸ்தான் போரை நான்தான்  தடுத்தேன் என்று இருபதுக்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் சொல்லியும் மோடி அதனை ஏற்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 

அது மட்டுமா ஒபாமா போல தானும் நோபல் அமைதி விருது பெற வேண்டும் என்று ஆசைப்படுகையில் அதற்கான போட்டியாளராக மோடியை அவரது அல்லக்கைகள் முன்னிறுத்துகின்றனர்.

இவையெல்லாம் நினைவுக்கு வருகிறதா மோடி?

மோடிக்கு ஞாபகம் இல்லையென்றாலும் உங்களுக்கு நினைவில் உள்ளதல்லவா ஜெய்சங்கர்?

மோடி மத உணர்வை உசுப்பேற்றும் கிறுக்கனென்றால் ட்ரம்ப் இன உணர்வை உசுப்பேற்றும் கிறுக்கன்.

இந்த  இரண்டு கிறுக்கன்களின்  கிறுக்குத்தனத்தால் பாதிப்பு என்னமோ சாதாரண மக்களுக்குத்தான்.

இந்த பிரச்சினைகள் தீர என்ன வழி?

அது அந்த இருவருக்கே வெளிச்சம் . . .



Monday, September 22, 2025

மோடி டி.வி ல பேசினா?

 


மோடி தொலைக்காட்சியில் பேசப் போகிறார் என்றாலே மக்கள் பதற்றமடைந்து விடுகின்றனர். காரணம் நவம்பர் எட்டு கறுப்பு தினம். இந்தியப் பொருளாதாரத்தை நிலை குலைய வைத்த முட்டாள்தனமான நடவடிக்கையை எடுத்த மோசமான நாள் அல்லவா அது!

ஜி.எஸ்.டி 2.0 என்று மோடி பீற்றிக் கொண்டுள்ளார். மக்களின் சேமிப்புத் திருவிழா என்றெல்லாம் கதை விட்டுள்ளார்.

இப்போது ஜி.எஸ்.டி யை அகற்றியதும் விகிதத்தை குறைத்ததும் மிகப் பெரிய சேமிப்பை மக்களுக்கு தரும் என்றால் இத்தனை நாள் அந்தா ஜி.எஸ்.டி மூலமாக மக்களின் சேமிப்பை களவாடியதும்  இவர்தானே! அது ஒன்றும் நேரு கிடையாதே!

Saturday, September 20, 2025

கட்சியா பாண்டிமடமா விஜய்????

 


ரிமோட்டில் சேனல்களை மாற்றி வருகையில்  நாகப்பட்டிணத்தில் விஜய் பேசிய பேச்சை கேட்க நேரிட்டது. சினிமா வஜனம் போலவே இருந்தது என்பது வேறு விஷயம்.

மின்சாரத்தை துண்டித்தது பற்றி கேள்வி கேட்கிறார். அவரது தற்குறி ரசிகர்களின் அடாவடியை கட்டுப்படுத்த வக்கில்லாமல் அவரது மாவட்டச் செயலாளர்தான் மின்சாரத்தை துண்டிக்கச் சொல்லி கடிதம் கொடுத்தார். இவர் இப்படி கேள்வி கேட்கிறார்,

எனக்கு ஒரு கேள்வி உண்டு.

த.வெ.க என்பது அரசியல் கட்சியா இல்லை பாண்டி மடமா?


பிகு1 : பாலாவின் சேது படத்தில் மன நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்களின் இருப்பிடமாக காண்பிக்கப்படுவதுதான் பாண்டிமடம்.


பிகு2 : பிரவீண் காந்தி என்ற மொக்கை டைரக்டர் முன்பு ரஜினி ஆதரவாளராக இருந்து இப்போது விஜய் ஆதரவாளராக மாறியுள்ளார். அவர் ஒரு தொலைக்காட்சி விவாதித்தில் பேசியதை கேட்ட போது மனநிலை பாதிக்கப்பட்டவராகவே காட்சியளித்தார். 

Friday, September 19, 2025

ஆணியே வேண்டாம் விஜய்

 


கீழேயுள்ள செய்தியை படிக்கையில் எரிச்சலாக வந்தது.



எந்த வித சுய கட்டுப்பாடும் இல்லாமல் தற்குறித்தனமாகத்தான் தன் கட்சி ஆட்கள் இருப்பார்கள் என்றால் விஜய் கட்சி நடத்தக்கூடாது. அப்படி முதல்வர் கனவை கைவிட முடியாது என்றால் பிரச்சாரத்திற்காவது செல்லாமல் இருக்க வேண்டும். 

அவர் கட்சி ஆட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அவர்களின் திமிர், முட்டாள்தனம் ஆகியவை காரணம்.

அவர்களின் திமிருக்காக மற்றவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்.

உலக மகா உருட்டு மோடி

 


கீழேயுள்ள செய்தியே சொல்லும், மோடியின் உலக மகா உருட்டை . . .




Wednesday, September 17, 2025

எல்.ஐ.சி யை, எல்.ஐ.சி யாகவே நீடிக்க வைத்தவர்


 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாள் இன்று.

பி.யு.சி படிக்கும் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பத்து மாத காலம் சிறைத்தண்டனை பெற்றவர். சுதந்திரப் போராட்ட தியாகிக்கான எந்த சலுகையையும் பெறாதவர்.

தனியார் கம்பெனிகள் காலத்தில் பணியில் சேர்ந்த அவர், சங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் நாக்பூர், கோவை, அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரூகர் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றார்.  என்ன ஆனது? அங்கேயெல்லாம் சங்கம் வலிமையானது.

தேச உடமையாக்கப்பட்ட பிறகு  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணித் தலைவராகிறார். சங்கத்தின் போர் அமைச்சர் என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு உத்திகளை வகுப்பதில் விற்பன்னர்.

அவரது போராட்ட உணர்வும் திறமையும் ஞானமும் அவரை மேலும் மேலும் உயரங்களுக்கு எடுத்துச் சென்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை 1980 ல் கல்கத்தா வட கிழக்கு தொகுதியில் மக்களவைக்கு போட்டியிட வைத்தது. ராஜிவ் காந்தி காலத்தில் அமைச்சரான  அஜித் குமார் பஞ்சா என்ற பெரும் பணக்காரரை வென்று நாடாளுமன்ற உறுப்பினர்.

பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பீப்பிள்ஸ் டெமாக்ரஸியின் ஆசிரியராகவும் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட காலத்தில்தான் எல்.ஐ.சி நிறுவனத்தை ஐந்து கூறுகளாக பிரிக்கும் மசோதாவை 19.12.1983 அன்று  அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிகிறார். அப்போதே தோழர் சுனில் மைத்ரா கடுமையாக  எதிர்க்கிறார். 48 மக்களவை உறுப்பினர்களிடமிருந்து உடனடியாக கடிதம் பெற்று சபாநாயகரிடம் அளிக்கிறார்.

அவரது கடுமையான முயற்சி காரணமாக மசோதா நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவின் ( STANDING COMMITTEE)  பரிசீலனைக்குச் செல்கிறது. அங்கே ஒருமனதான கருத்து எட்டப்படாததால் நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் (SELECT COMMITTEE)  பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த தேர்வுக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட தோழர் சுனில் மைத்ரா, யாரெல்லாம் தங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று விழைகிறார்களோ, அவர்கள் அனைவரது கருத்துக்களையும் குழு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதனை குழுவும் ஏற்றுக் கொள்கிறது. 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு புறத்தில் வேலை நிறுத்தம், பிரச்சார இயக்கம், கையெழுத்து இயக்கம் போன்ற நடவடிக்கைகளையும் மறுபுறம் தொழிற்சங்க அமைப்புக்கள், அறிவு ஜீவிகள், பல துறை ஆளுமைகள் ஆகியோரை தேர்வுக்குழுவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கடிதம் எழுத வைக்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தேர்வுக்குழு நூற்றுக் கணக்கானவர்களின் கருத்துக்களை கேட்கிறது. தேர்வுக்குழுவின் முன்பாக நானும் சாட்சியம் சொன்னேன் என்று இந்தியாவின் முக்கிய பொருளாதார நிபுணர்களில் ஒருவரான தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவரோடு  பேசிக் கொண்டிருக்கையில்  ஒரு முறை கூறினார்.

ஆளும் கட்சியே பெரும்பான்மை என்பதால் தேர்வுக்குழு எல்.ஐ.சி யை பிரிப்பதற்கு ஆதரவாகவே பரிந்துரை அளித்தது. 25.08.1984 அன்று மசோதா மீது விவாதம் நடக்கிறது. தோழர் சுனில் மொய்த்ரா ஆவேசமாக உரையாற்றுகிறார். முடிவு எதுவும் எடுக்கப்படாமல் அவை ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டத் தொடரும் கூட.

சில மாதங்களிலேயே இந்திரா அம்மையார் கொல்லப்படுகிறார். புதிய பிரதமரான ராஜீவ் காந்தி மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கு ஆயத்தமாகிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தேர்தல் காலத்தில் இதனை ஒரு முக்கியமான பிரச்சினையாக முன்வைக்கிறது. அனைத்து வேட்பாளர்களிடமும் ஆதரவு கோருகிறது.

தேர்தலுக்குப் பின்பு மீண்டும் பிரதமரான ராஜீவ் காந்தியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர்கள் சந்தித்து எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பதன் பாதகங்களை விளக்கி பேசுகின்றனர்.

மத்தியரசு தன் முடிவை கைவிடுகிறது. தன் அன்னை எடுத்த முடிவை மாற்றுவதா என்று ராஜீவ் காந்தி ஈகோ பார்க்கவில்லை. எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கும் முடிவை கைவிடுகிறோம் என்று ராஜீவ் காந்தியே தோழர் சுனில் மைத்ராவுக்கு நேரடியாக கடிதம் அனுப்புகிறார். 


எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.

எல்.ஐ.சி யின் இயக்குனர் கூட்ட அறையில் (BOARD ROOM)  ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கிய அன்றைய நிதியமைச்சர் திரு சிந்தாமணி தேஷ்முக் அவர்களின் படம் உள்ளதாம். அங்கே வைக்க வேண்டிய இன்னொரு படம் தோழர் சுனில் மைத்ராவுடையது. எல்.ஐ.சி, எல்.ஐ.சியாகவே நீடிப்பது அவரால்தானே!

செவ்வணக்கம் தோழர் சுனில் மைத்ரா 

பிகு: அவரைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது. அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில் . . .


மோடியை பெரியாராக்கும் பாஜக

 



பாஜக சென்னையில் ஒட்டியுள்ள சுவரொட்டி கீழே உள்ளது. 



தந்தை பெரியார் பெயரை பயன்படுத்தினால்தான் அவர்கள் ஒட்டிய சுவரொட்டியை மக்கள் பார்ப்பார்கள் என்ற அறிவு பாஜகவில் உள்ள ஏதோ ஒரு கோஷ்டிக்கு தெரிந்திருக்கிறது.

மோடியை பெரியார் என்று அழைத்ததைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்  சமூக நல்லிணக்க பெரியார் என்று விளிப்பதெல்லாம் அநியாயம்.

மோடிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?

சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் விஷமல்லவா அவர்!

Tuesday, September 16, 2025

ஆட்டுக்காரன் குழுவின் திருந்தாத ஜென்மங்கள்

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கடந்தாண்டு மறைந்த போது அவரது உடல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு சங்கிகள் தோழர் யெச்சூரி மீது ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்தனர். அதாவது அவர் கிறிஸ்துவராக மதம் மாறினாலும் சீத்தாராம் என்ற பெயரை மாற்றிக் கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார் என்பது அந்த பொய்ப்பிரச்சாரம்.

அதனை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நான்கைந்து சங்கிகள் பதிவு போட்டு விஷத்தை கக்கியிருந்தனர்.

கடுமையாக சண்டை போட்டதால் என்னை ஒரு வாரம் குழுவிலிருந்து இடை நீக்கம் வேறு செய்திருந்தார்கள்.

அப்போது எழுதிய இரு பதிவுகளின் இணைப்பை கீழே அளித்துள்ளேன்.

அவசியம் படியுங்கள்.

கேவலமான, அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள்


மத்யமர் சங்கிகளுடனான சண்டை ஓயவில்லை


இதோ ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் அதே பொய்யை பரப்பத் தொடங்கியுள்ளனர்.





இந்த பதிவிற்கு ஒரு சங்கி ஆபாசமாக ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தான். இதுதான் உங்கள் குழுவில் கடைபிடிக்கும் நாகரீகமா என்று அந்த சங்கி மாடரேட்டரை கேட்டவுடன் அந்த ஆபாச பின்னூட்டத்தை நீக்கி விட்டார்கள். 

ஒரே பொய்யை எவ்வளவு முறை பரப்புவீர்கள்? இந்த குழு பொய்களை, வெறுப்பை, விஷத்தைத்தான் பரப்புகிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா என்று அட்மினிடம் கேட்டதற்கு மட்டும் எந்த பதிலும் இல்லை. 

இவர்களுக்காகத்தான் அன்று வாலி

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ?

என்று  எழுதியிருக்கிறார்,
இந்த ஜென்மங்கள் மனித குலத்திற்கே பெருத்த அவமானம்.

அஸ்ஸாமில் மோடியின் அற்ப அரசியல்

 


பூபென் ஹசாரிகா - இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவர். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் பாடகராக, இசை அமைப்பாளராக, இயக்குனராக முத்திரை பதித்தவர். 2011 ல் இறந்து போனவர். 

2019 ல் அவருக்கு மோடி அரசு பாரத ரத்னா விருது கொடுத்தது. 2021 ல் அஸ்ஸாமில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

நேற்று முன் தினம் பச்சைக் கொடி ஆட்டி ரிப்பன் வெட்ட அஸ்ஸாம் போன மோடி புதிதாக ஒரு கதை விட்டார்.

"பூபென் ஹசாரிகாவிற்கு பாரத ரத்னா விருது  கொடுத்த போது  பாடகர்களுக்கும் நடனம் ஆடுபவர்களுக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கிறார் மோடி" என்று காங்கிரஸ் தலைவர் பேசிய காணொளியை அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் காண்பித்தார்" என்று பேசிய மோடி பூபென் ஹசாரிகாவை காங்கிரஸ் இழிவு படுத்தி விட்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்த தலைவர்? எப்போது பேசினார்? என்றெல்லாம் மோடி சொல்லவில்லை. மோடிக்கு காணொளியை காண்பித்ததாக சொல்லப் பட்ட ஹிமாந்த பிஸ்வாஸ் மிகப் பெரிய மோசடிப் பேர்வழி.  அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஊழல்வாதி என்று மோடியால் குற்றம் சுமத்தப்பட்டு கட்சி மாறிய பின் பாஜக வாஷிங் மெஷினில் புனிதமாக்கப் பட்டு முதலமைச்சர் பதவி பெற்றவர். அவர் யோக்கியதையே பெரிய கேள்விக்குறி.

பூபென் ஹசாரிகா உயிருடன் இருக்கையில் காங்கிரஸ் அவருக்கு

பத்மபூஷன்,

தாதா சாஹேப் பால்கே விருது,

சங்கீத நாடக அகாடமி விருது,

நியமன மாநிலங்களவை விருது

ஆகியவற்றை அளித்துள்ளது. 

அவர் 2011 ல் இறந்த பின்பு 2012 ல் பத்ம விபூஷன் விருதும் அளித்துள்ளது. 

இத்தனை விருதுகளை அளித்த காங்கிரஸ் எப்படி அவரை இழிவுபடுத்தும்?

மேலும்

பண்டிட் ரவிசங்கர்,

பீம்சென் ஜோஷி,

எம்.எஸ்.சுப்புலட்சுமி

பிஸ்மில்லாகான்

லதா மங்கேஷ்கர்

போன்ற இசைக் கலைஞர்களுக்கு பாரத் ரத்னா விருது கொடுத்துள்ளது. அவர்கள் எப்படி பாடகர்களுக்கும் நடனமாடுபவர்களுக்கும் விருது கொடுப்பதை இழிவு படுத்துவார்கள்.

மொத்தத்தில் இது மோடியின் வழக்கமான அற்ப அரசியல்... 


Monday, September 15, 2025

மோடியின் அடுத்த அவதாரம் ??????

 



அஸ்ஸாமில் மோடி பேசிய வஜனம் 

"நான் சிவன் போல.  என் மீது சொல்லப்படும் வசைகளை சிவன் விஷத்தை தொண்டையிலேயே வைத்துக் கொண்டதை போல என் தொண்டையில் நிறுத்திக் கொள்கிறேன்."

மோடியின் அல்லக்கைகள் முன்பு அவரை ஜகன்னாதரின் அவதாரம் என்று உருட்டினார்கள். 

அந்த ஜகன்னாதரே அவர்தான் என்றும் சொன்னார்கள்.

அவரும் தன்னை தெய்வக்குழந்தை என்று சொல்லிக் கொண்டார்.

இப்போது அவர் தன்னை சிவனைப் போல என்று சொல்கிறார்.

சிவனின் வடிவம் என்று இனி அல்லக்கைகள் பேசுவார்கள்.

ஆனால் மோடி விஷத்தை தொண்டையில் நிறுத்திக் கொள்ளவில்லை. மூளையில் உருவாக்கி பேச்சின் மூலம் கக்கிக் கொண்டிருக்கிறார்.

அஸ்ஸாமில் விஷம் கக்கும் மோடி

 


அஸ்ஸாம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ளது. அதனால் அங்கே மக்களை பிளவு படுத்த விஷம் கக்குவதை மோடி தொடங்கி விட்டார்.

வட கிழக்கு மாநிலங்களில் ஊடுறுவல்கள் அதிகமாகி விட்டதாகவும் அதனால் அந்த மாநிலங்களில் சிறுபான்மை மதத்தினர் அதிகமாகி விட்டதாகவும் பெரும்பான்மை மதத்தினரான இந்துக்களின் எண்ணிக்கையை விட மற்றவர்கள் அதிகமாகி விட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி இந்த ஊடுறுவல்களை வாக்குகளுக்காக வேடிக்கை பார்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்,

மத்தியில் பாஜக 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அநேகமாக அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் பாஜகதான் தேர்தலின் மூலமாகவோ அல்லது வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கியோ ஆட்சியில் உள்ளது.

சமீப ஆண்டுகளில் ஊடுறுவல் அதிகமாகி உள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையோ புள்ளி விபரத்தையோ மோடி தரவில்லை. வழக்கம் போல வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார்.

ஊடுறவல் அதிகமாகி உள்ளதென்றால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பாஜகவின் மத்தியரசும் மாநில அரசுகளும் தோல்வி அடைந்துள்ளது என்பதுதானே  அர்த்தம்!

தன்னுடைய தோல்விக்கு அடுத்தவர்கள் மீது பழி போடுவது என்ன நியாயம்?

தேர்தல் ஆதாயத்திற்காக மத வெறி நச்சை உமிழும் கேவலமான உத்தியை மோடி துவக்கியுள்ளார்.

பிரதமர் என்ற பொறுப்பிற்கு கொஞ்சமும் தகுதியற்றவர் என்பதைத்தான் அவரது விஷப்பிரச்சாரம் காண்பிக்கிறது.

பிகு: இன்னொரு பொய்யும் மோடியால் சொல்லப்பட்டுள்ளது. அது நாளை. 

Saturday, September 13, 2025

பெருமையில்லை து.ஜ, அசிங்கம்

 


மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குகளில் பவனி வருவது இழிவாக பார்க்கப்படும்  காலகட்டம் இது. 

ஏதோ ஒரு ஆதீனம் பல்லக்கில்தான் பட்டிணப் பிரவேசம் செய்வேன் என்று அடம் பிடித்ததையும் அதற்கு வக்காலத்து வாங்கிய ஆட்டுக்காரன் நானே பல்லக்கை தூக்கி வருவேன் என்று சொன்னதை எள்ளி நகையாடிய மாநிலம் தமிழ்நாடு.

சடலங்களை நான்கு  பேர் சுமப்பது என்பது கூட காலப்போக்கில் மிகவும் குறைந்து விட்டது. 

இப்படிப்பட்ட சூழலில் ஒரு காணொளியை பார்க்கையில் எரிச்சலாக இருந்தது.

அதிலிருந்து இரண்டு படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.



வேலூருக்கு அருகாமையில் உள்ள மகாதேவமலை என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இப்படிப்பட்ட தேர்ப்பவனியை, தங்களை மனிதர்கள் இழுத்துச் செல்வதை இந்தியாவின் இரண்டாம் குடிமகன் அனுமதிக்கலாமா?

அசிங்கமாக இருக்கிறது.

இவ்வளவு பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்டவருக்கு தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஓட்டு போடவில்லை என்று மோடி ஆதரவாளர்கள் ஒப்பாரி வேறு வைக்கிறார்கள். 

Thursday, September 11, 2025

மோடி மாதிரியே அவரு ஆளுங்களும் . . .

 


தன் ஆட்சியின் அனைத்து அலங்கோலங்களுக்கும் நேருவை குறை சொல்லுவது மோடியின் முட்டாள்தனத்திற்கு  உதாரணம்.

இப்போது நேபாளத்தில் நடைபெறும் பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்லியுள்ளார் பீகார் துணை முதல்வர்.



மோடியின் ஆதரவாளர்களும் மோடியைப் போலவே வரலாறும் தெரியாத அரசியலும் புரியாத முட்டாள்கள் என்பது இப்பதிவிலிருந்து தெரிகிறது.

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்பது 1806 ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய்கள் புரட்சிதான்.  1857ல் வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்கள் புரட்சியை முதல் விடுதலைப் போர் என்று சொல்பவர்களும் உண்டு.

முடியாட்சியாக இருந்த போதிலும் கூட 1768 முதலே நேபாளம் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. 1768 லிருந்தே தனி நாடாக உள்ள அந்த நாட்டை எப்படி ஐயா 1947 ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி தனி நாடாக மாற்றியிருக்க முடியும்? 


Tuesday, September 9, 2025

தாளம் போட வைத்த .......

 


தஞ்சையில் டிசம்பரில் நடைபெறவுள்ள தமுஎகச அமைப்பின் 16 வது மாநில மாநாட்டின் இலச்சினைதான் மெலே உள்ளது.

இந்த இலச்சினையுடன் அல்லது இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் இந்த இலச்சினையை ஒரு காணொளியாக தயாரித்து உள்ளனர்.

அதை கேளுங்கள்.

உங்களையும் அறியாமல் உங்கள் கால்கள் தாளம் போடும்.

இதோ அந்த காணொளி



இதனை தயாரித்த தோழருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

எனக்கு அனுப்பிய தமுஎகச துணைப் பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்ட தோழருமான தோழர் களப்பிரனுக்கு நன்றிகள் பல . . .

து.ஜ : எதிர்பார்க்காதே, ஏமாறாதே

 


துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்குள் முடிவுகளும் வந்து விடும்.

எம்.பி க்களின் எண்ணிக்கை அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணன் செல்வதற்கான வாய்ப்புதான் அதிகம். என்ன மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெல்வார். 

சி.பி.ராதாகிருஷ்ணன் வென்றால் தமிழ்நாட்டிற்கு அவர் இமய மலையையே பெயர்த்து கொண்டு வந்து விடுவார்கள் என்று சங்கிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டும்.

இதற்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கடராமன், ஜனாதிபதியாக மட்டும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோர் இருந்துள்ளனர்.

அவர்கள் யாரும் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்ததில்லை.

ஜனாதிபதிகளே எதுவும் செய்ததில்லை எனும் போது துணை ஜனாதிபதி அதிலும் பாஜககாரர் நல்லது செய்வார் என்று நினைப்பதை மூட நம்பிக்கை என்றுதான் கூற முடியும்.

Monday, September 8, 2025

பத்துக்கும் போக மாட்டார் மோடி

 


காலத்தே செல்லாமல் கழுத்தறுத்து விட்டு, பின்பு நானும் இருக்கிறேன் நண்டு வளையில் என்று சீன் போடுபவர்களை "செத்ததுக்கு வாடான்னா பத்துக்கு வந்திருக்கே" என்று கேட்பது தமிழ் மக்களின் பழக்கம். இது ஜீன்ஸ் படத்தில் ஒரு காட்சியாகவே வந்திருக்கும்.

உயிரிழப்பு, பொருளிழப்பு, சொந்த வீட்டை விட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் இன்னும் வாழ்க்கை,  உலகமே காறி உமிழ்ந்த பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை என்று மிக மோசமான மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. நிலைமை இன்னும் சீராகவில்லை என்பது வேறு விஷயம்.

இது நாள் வரை மணிப்பூர் செல்வது பற்றி யோசிக்காத 56 இஞ்சார், இப்போது மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்தது.

பக்கத்தில் உள்ள மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் பச்சைக் கொடி ஆட்டுதல், ரிப்பன் வெட்டுதல் ஆகிய போட்டோ ஷூட் நிகழ்வுகள் இருப்பதால் மணிப்பூருக்கும் போய்த் தொலைக்கலாம் என்று முடிவு செய்திருக்கலாம்.

அதனால் குகு இன அமைப்புக்களோடு ஒரு ஒப்பந்தம் கூட உருவானது. அது ஒன்றும் பெரிய ஒப்பந்தம் என்று சொல்ல முடியாது. பிரச்சினைகள் தொடர்பாக பேசலாம் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

ஆனால் அதை நிராகரிப்பதாக பெரும்பான்மை மெய்தி இன அமைப்புக்கள் நிராகரித்து விட்டன.

அவர்களை மீறி மோடி மணிப்பூர் வருவதோ சிறுபான்மை மக்களான குகு பழங்குடி மக்களோடு பேசுவதோ நடக்கவே நடக்காது.

ஆக போட்டோ ஷூட்டுக்கள் வேண்டுமானால் நடக்கலாம். மணிப்பூர் செல்வதெல்லாம் . . . .




Saturday, September 6, 2025

GST - பீற்றிக் கொள்ளும் பாஜகவினருக்கு . . .

 GST விகிதங்களைக் குறைத்து மக்களின் துயரத்தை போக்கியுள்ளார் 56 இஞ்ச் மாவீரன் என்று பீற்றிக் கொள்ளும் பாஜகவினருக்கு கீழே உள்ள படம் சமர்ப்பணம். 




Thursday, September 4, 2025

GST அகற்றம் AIIEA வின் வெற்றி

 


தனி நபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான 18 % ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது. நேற்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவு இது.

இந்த முடிவு கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த முடிவு அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. அதன் பின்னால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான, தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சார இயக்கங்களும் முயற்சிகளும் அடங்கியுள்ளன.

தன் குடிமக்களுக்கு எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை ஒரு மக்கள் நல அரசிற்கு உண்டு. அனைவருக்குமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.

ஆனால் இந்த கடமையை நிறைவேற்றுவதைப் பற்றி உலகமயக் கொள்கையை பின்பற்றும் எந்த அரசும் கவலைப்படுவதில்லை.

அதனால் மக்களே தங்களின், தங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய ஆயுள் காப்பீட்டை நாடுகின்றனர். மருத்துவ செலவினங்களை சமாளிக்க மருத்துவக் காப்பீட்டை நாடுகின்றனர்.

அரசு செய்யத் தவறியதை குடிமக்களே தங்களது சொற்ப சேமிப்பில் இருந்து மேற்கொள்கிற போது அதற்கு 18 % ஜி.எஸ்.டி விதிப்பதென்பது ஒரு விதத்தில் அராஜகமே.

சேவை வரி என்று ஆரம்பித்த காலம் முதலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அதனை எதிர்த்து வருகின்றது. மக்கள் மத்தியில் 2004ம் ஆண்டு முதல் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தி வந்தது ஏ.ஐ.ஐ.இ.ஏ.

பாலிசிதாரர்களுக்கு தேவையற்ற சுமையாக மாறியது ஜி.எஸ்.டி, இன்சூரன்ஸ் பரவலை அதிகரிக்க வேண்டும் என்று உபதேசித்த அரசு, வழக்கமாக வரும் வணிகத்தைக் கூட ஜி.எஸ்.டி பாதிக்கிறது என்ற யதார்த்தத்தை கணக்கிலெடுக்க மறுத்தது. 

2019 முதல் இந்த இயக்கம் தீவிரமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது, ஜி.எஸ்.டி கவுன்சில்  உறுப்பினர்களை சந்தித்து  ஆதரவு திரட்டுவது, பாலிசிதாரர்களிடமிருந்து கடிதங்கள் பெற்று நிதியமைச்சருக்கு அனுப்புவது என எத்தனையோ இயக்கங்களை சங்கம் நடத்தியது. எங்கள் கோட்டத்தில் கூட புதுவை முதல்வர் திரு நாராயணசுவாமி அவர்களை இரண்டு முறை எங்கள் தென் மண்டலத் தலைவர்களோடு சந்தித்து விவாதித்துள்ளோம். தொகுதிக்கு வராத எம்.பிக்களை தவிர அனைவரையும் சந்தித்துள்ளோம்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு  இயக்கம் சூடு பிடித்தது. நாடு முழுதிலும் நானூறுக்கும் மேற்பட்ட எம்.பிக் களை சந்தித்தோம். பாஜக உறுப்பினர்கள் கூட எங்களின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு அளித்தார்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஜி.எஸ்.டி யை அகற்றச் சொல்லி நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.


எங்கள் கோட்டத்திலும் எம்.பி க்களை சந்தித்தோம்.



மக்களவை, மாநியல்ங்களவையில் எம்.பிக்கள் பிரச்சினையாக எழுப்பினர்.

இந்தியா அணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா நடத்தினர்.



ஆனாலும் நிர்மலா அம்மையார் அசையவில்லை.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது தொடர்பான விவாதம் வந்த போது ,முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.  ஜி.எஸ்.டி அமைச்சரவைக்குழு விவாதித்து பரிந்துரை அளிக்கட்டும் என்று காலம் தாழ்த்தப்பட்டது.

இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற சூழல் உருவான பின்பு, இப்போது ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது.

மக்களுக்காகவும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இந்த போராட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக ஜி.எஸ்.டி அகற்றம் திகழும். 

எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு.

வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் காண்பிக்கிற அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் ஒளி வீசும் மணி மகுடத்தில் இன்னும் ஒரு ரத்தினக்கல் பதிக்கப் பட்டுள்ளது.

இந்த வெற்றியோடு சங்கத்தின் பயணம் தொடரும், மேலும் உறுதியாக, மேலும் உற்சாகத்துடன். . .


Wednesday, September 3, 2025

மோடிக்கு உலகில் பிடிக்காத நாடு

 

ஆமாங்க.

நெஜமாத்தான் . . .

ஆதாரம் வேணுமா?

கீழேயுள்ள படத்தை பாருங்க . . .

அவரு இந்தியாவில எப்படி இருக்காரு, வெளிநாடு போனா எப்பாடி இருக்காரு என்று.

படம் ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கரிடமிருந்து சுட்டது. 



Monday, September 1, 2025

இன்சூரன்ஸிற்கும் பொருந்துமா சேகரு?

 


இன்று எல்.ஐ.சி யின் 70 வது உதய தினம். அனைவருக்கும் எல்.ஐ.சி உதய தின வாழ்த்துக்கள். இந்நாள் பற்றிய விரிவான பதிவு நாளை.


கீழே உள்ளது சங்கி எஸ்.ஆர்.சேகரின் பதிவு,



சுதேசிப் பொருள் மட்டும் வாங்க வேண்டும் என்ற மோடியின் வேண்டுகோள் இன்சூரன்ஸ் சேவைக்கு பொருந்தாதா? இந்திய கம்பெனிகளோடு கூட்டு வைத்துள்ள விதேசி கம்பெனிகளை வெளியேறச் சொல்லும் தைரியம் மோடிக்கு உண்டா?

அதை விட இன்னும் முக்கியமாக, விதேசி முதலாளி மட்டும் கூட்டு இல்லாமல் வணிகம் செய்ய உதவியாக இன்சூரன்ஸ் துறையில் 100 % அன்னிய முதலீட்டை அனுமதிக்கா மசோதா ஒன்றை வைத்துள்ளீர்கள் அல்லவா! அதை அப்படியே கை விட உங்கள் அரசு தயாரா?

முடியாதுல்ல! அப்பறம் எவனை ஏமாத்த இந்த வேண்டுகோள்?

வாழ்க்கையில ஒரு முறையாவது நேர்மையா இருங்கடா . . .