Monday, April 30, 2018

ஒழியட்டும் கேடு கெட்ட ஆட்சிகள் . . .

காவல்துறை தேர்வுக்கு வந்தவர்களின் உடலில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி என்று முத்திரை குத்தி அவர்களை இழிவு படுத்தியுள்ளது மத்தியப் பிரதேச ஆட்சி.



காவிரி நதி நீர் உரிமைக்காக போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்த துணை ராணுவப் படையை அனுப்பியுள்ளது தரம் கெட்ட மோடியின் ஆட்சி.




மத்தியரசு அராஜகம் நிகழ்த்த ஒப்புதல் அளித்து தலையாட்டியுள்ளது தமிழகத்தின் எடுபிடி ஆட்சி.

இந்த கேடு கெட்ட ஆட்சிகள் ஒழிவதே இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் நல்லது. 


மாணிக் இடத்தில் இந்த மா....


"ஐஸ்வர்யா ராய் நல்ல சிவப்பு நிறத்தவர். அவருக்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி. போயும் போயும் பழுப்பு நிறத்து டயானா ஹெய்டனுக்கு எதற்கு உலக அழகி பட்டம் கொடுத்தார்களோ?"

"சிவில் இஞ்சினியர்கள் சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதலாம். மெகானிகல் இஞ்சினியர்கள் எதற்கு சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுகிறார்கள்?"

"அரசு வேலை வேண்டும் என்று இளைஞர்கள் அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்ததற்குப் பதிலாக பீடா கடை வைத்திருந்தால் இத்தனை நேரம் அவர்கள் வங்கிக் கணக்கில் ஐந்து லட்சம் ரூபாய் இருந்திருக்கும்"

மேலே உள்ள பொன்மொழிகள் எல்லாம் திரிபுராவின் பாஜக முதல்வர் பிப்ளப் குமார் தேப் உதிர்த்தது.

தோழர் மாணிக் சர்க்கார் அமர்ந்த இடத்தில் இடத்தில் இந்த மாங்காய் மடையன் அமர்ந்திருக்கிறான். 

காக்கா பிரியாணி சாப்பிட்டா உண்ணி கிருஷ்ணன் வாய்ஸா வரும் என்று நேற்றைய பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் இருக்கிற எல்லா லூசும் பாரதீய ஜனதா கட்சியில்தான் இருக்கிறது.

Sunday, April 29, 2018

ஆரவாரம் இல்லாமல் அமைதியாய் . . .

எங்கோ பல்லாயிரக்கணக்கான ஒளி வருடங்கள் தொலைவில் இருந்தபடி 

அமைதியாய், ஆரவாரமே இல்லாமல்
ஒளி வழங்கும் முழு மதியின் புகைப்படங்கள்.

இன்று கிளிக்கியது 






நேற்றைய கொலையாளி, இன்றைய . . .


வேலூர் நகரத்தின் பிரபல தாதா அவர். அவரை கொலை செய்ய மூன்றாண்டுகள் முன்பாக ஒரு முயற்சி நடந்தது. அந்த கொலையாளியை அந்த தாதாவின் மகன்கள் இருவரும் துரத்திச் சென்று பிரதான சாலையில் கல்லை தலையில் போட்டு கொலை செய்தார்கள். அவர்கள் கொலை செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் பிரபலமானது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். அந்த வழக்கு இன்னும் முடியவில்லை. பிணையில்தான் இன்னும் இருக்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்பாக அந்த தாதா கொல்லப்பட்டு விட்டார். தாதாவின் இடத்திற்கு மகன் வந்து விட்டார். தாதா ஆரம்பித்த பொறியியல் கல்லூரி பொறுப்பு உட்பட.

இரண்டு நாட்கள் முன்பாக அந்த இளைய தாதாவிற்கு பிறந்த நாள்.

அதனை முன்னிட்டு வேலூர் நகரெங்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஃப்ளெக்ஸ் பேனர்கள்.

அனைத்து பேனர்களும் சொன்ன வாசகம்

"இளம் கல்வியாளரே"

என்ன கொடுமை சார் இது!




பாவம் ராஜாஜிக்கு தெரியவில்லை.




மஹாபாரதத்தில் போர் நிகழ்வுகளை அமைச்சர் சஞ்சயன் அரசன் திருதராஷ்டிரனுக்கு விவரித்ததே அந்த காலத்தில் இணைய வசதி இருந்ததற்கான சான்று என்று திரிபுரா புது முதல்வர் சொன்னது கேட்டு புல்லரித்துப் போனேன்.

ராஜாஜி எழுதிய “மஹாபாரதம்” புத்தகத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்த்தேன். இணைய தள வசதி பற்றி ராஜாஜி ஏதாவது எழுதி உள்ளாரா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறையாக தேடினாலும் அது பற்றி அவர் ஒன்றுமே எழுதவில்லை.

போர் நிகழ்வுகள் பற்றி ராஜாஜி எழுதிய நூலிலும் கூட சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு விவரிக்கிறார். சஞ்சயனுக்கு எப்படி அந்த விபரங்கள் தெரிய வருகிறது என்று ராஜாஜி ஒரு வரி கூட எழுதவில்லை. பி.ஆர்.சோப்ரா இயக்கிய மஹாபாரத் தொலைக்காட்சி தொடரில் சஞ்சயனுக்கு அந்த சக்தியை வியாசர் கொடுத்தார் என்று ஒரு காட்சி வரும். ராஜாஜியின் நூலில் அப்படி கூட எதுவும் இல்லை.

மஹாபாரத காலத்தில் இருந்த இணைய வசதி பற்றி பாவம் ராஜாஜிக்கு எதுவும் தெரியவில்லை என்பதுதானே உண்மை!

ராஜாஜி வாழ்ந்த காலத்தில் கூட இணைய வசதி இல்லை என்பதும் இன்னொரு உண்மை. . .

பி.கு :  பிப்ளப் குமார் தேப் எனும் அந்த அறிவாளி பற்றி இன்னொரு பதிவு வேறு எழுதித் தொலைக்க வேண்டியுள்ளது.

காக்கா பிரியாணி வேட்பாளர்கள் . . .


இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான இக்கட்டுரையைப் படித்ததும் எனக்கு "காக்கா பிரியாணி சாப்பிட்டா காக்கா வாய்ஸ் வராம உண்ணி கிருஷ்ணன் வாய்ஸா வரும்?"  என்ற விவேக் காமெடிதான் நினைவுக்கு வந்தது.

காமுகர்கள் நிறைந்த பாஜக கட்சியில் வேட்பாளர்கள் என்ன விவேகானந்தர்களாகவா இருப்பார்கள். அவர்களும் காமுகர்களாகத்தானே இருக்க முடியும் !!!!!






‘வஞ்சிக்கப்பட்ட’ பெண்களின் தேர்தல் பிரச்சாரம்
கர்நாடக பாஜக வேட்பாளர்கள் கலக்கம்




பெங்களூரு, ஏப். 28 -
கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று பாஜக துடியாய்த் துடிக்கிறது. ஆனால், பாஜக-வினரின் பழைய கால கதைகள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னுக்கு வந்து, அந்த கட்சியைக் கலங்கடித்து வருகிறது.பாஜக-வினரையும் பாலியல் குற்றங்களையும் பிரிக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், பாஜக வேட்பாளர்களின் பாலியல் மோசடிகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், கர்நாடகத் தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் இறங்கி யிருப்பது, அந்த கட்சியை தற்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

பாஜக வேட்பாளர்கள் ரேணுகாச்சாரியா, ராமதாஸ் ஆகியோரால் பாலியல் மோசடிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள்தான் தற்போது பாஜக-வுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருக் கின்றனர்.நர்ஸ் ஜெயலட்சுமி எனப் படும் ஜெயலட்சுமி, கடந்த 2007-ஆம் ஆண்டு எழுப்பிய குற்றச் சாட்டு, அன்று பரபரப்பான செய்தியாக இருந்தது. அதாவது பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த ரேணுகாச்சாரியா, தன்னுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், ஆனால் பின்னர் தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். ரேணுகாச்சாரியா தன்னை முத்தமிடும் புகைப்படங்களை யும் வெளியிட்டார். இதையடுத்து அமைச்சர் ரேணுகாச்சாரியா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. அதிகாரத்தில் இருந் ததால், அப்பிரச்சனையை பாஜக அமுக்கியது.பின்னர் ஜெயலட்சுமி, கடந்த2010-ஆம் ஆண்டு தனது புகாரைத் திரும்பப் பெற்றா லும், பெண்கள் முன்னேற்றக் கட்சிஎன்ற அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால், ரேணுகாச் சாரியாவுக்கு பாஜக மீண்டும் சீட்கொடுத்துள்ள நிலையில், அவரை எதிர்த்து தற்போது ஜெயலட்சுமி கர்நாடகத் தேர்தலில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். 

இதேபோல பாஜக-வின் மற்றொரு அமைச்சரான ராமதாஸ் மீதும், கடந்த 2014-ஆம் ஆண்டு பாலியல் மோசடிப் புகார் எழுந்தது. அமைச்சர் ராமதாஸ் தன்னை திருமணம் செய்ததாகவும், பின்னர் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் பிரேமகுமாரி என்ற பெண்குற்றம்சாட்டினார். பத்திரிகை யாளர் சந்திப்பு நடத்தி அதிலும் உண்மைகளை போட்டு உடைத்தார். ஆனால், அதை பொய் என்றுகூறிய ராமதாஸ், தன்மீது தவறில்லை என்பதை நிரூபிப்பதற்காக தற்கொலை நாடகம் ஒன்றையும் நடத்தி, மருத்துவமனையில் படுத்துக் கொண்டார். இந்த பிரச்சனையும் பின்னர் அமுக்கப்பட்டது.ஆனால், ராமதாஸ் தேர்தலில் போட்டியிட்டால், அவரைஎதிர்ப்பேன் என்று அப்போதே கூறிய பிரேம குமாரி, சொன்ன படியே தற்போது கர்நாடகத் தேர்தலில் ராமதாஸூக்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

பாஜக வேட்பாளர்களால் பாலியல் மோசடிக்கு உள்ளான பெண்கள், தற்போது தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்வது, பாஜக வேட்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.இது இரண்டு நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை என்றாலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பாஜக வேட்பாளர் களாக நிறுத்தியிருப்பது, மாநிலம் தழுவிய அளவில் அந்த கட்சிக்கு எதிரானதாகவும் மாறியிருக்கிறது. 

ஏற்கெனவே, சட்டப்பேரவைக்குள் ஆபாசப் படம் பார்த்த முன்னாள் அமைச்சர்கள் லக்ஷ்மன் சாவடி, பட்டீல் ஆகியோருக்கு பாஜக மீண்டும் சீட் அளித்துள்ள நிலையில், பாலியல் மோசடி குற்றச்சாட்டு இருப்போருக்கும் பாஜக சீட் வழங்கியிருப்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இதே போல காங்கிரஸ் ஆட்சியில் கலால்துறை அமைச்சராக இருந்த மேத்தி என்பவருக்கு எதிராக, அவரால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி என்பவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேத்தி - விஜய லட்சுமி தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டைப் பொறுத்தவரை வீடியோவே வெளியானது. மேத்தியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், சிஐடிபோலீசார், மேத்தி மீது குற்ற மில்லை என்று கூறிவிட்டனர். விஜயலட்சுமி மனமுடைந்து தற்கொலை அளவிற்கு சென்றார். அவர்தான் தற்போது மேத்திக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளார்.

தாமரையை தோற்கடிப்போம்..!
பாஜக ‘தொண்டர்’களும் களமிறங்கினர்

பாஜக-வுக்கு எதிராக வஞ்சிக்கப்பட்ட பெண்கள் ஒருபுறம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,“தாமரைக்கு வாக்களிக்காதீர்கள்; நோட்டாவுக்கு வாக்களியுங்கள்” என்று பாஜக தொண்டர்களே பாஜக-வுக்கு எதிராக சுவரொட்டி வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளனர்.குறிப்பாக, மைசூரு மற்றும் சாமராஜ் நகர் மாவட்டங்களில் பாஜக-வினர் ஒட்டியிருக்கும் போஸ்டர்களால், அந்த மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

வருணா தொகுதியில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திராவை எதிர்த்து எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த தொகுதியில் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, அவரது ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்தது.முதலில், இவர்களை சமாளித்து விடலாம் என்றுதான் அந்த கட்சித் தலைமை கணக்குப் போட்டது. ஆனால், விஜயேந்திராவுக்காக, வருணா தொகுதியில் பாஜக தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது, சக பாஜக-வினரை உசுப்பி விட்டுள்ளது. தற்போது அவர்கள், “தாமரைக்கு வாக்களிக் களிக்காதீர்கள், நோட்டாவுக்கு வாக் களிப்பீர்” என போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். போஸ்டரோடு நின்றுவிடாமல், நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்ற வாசகத்தை சமூக வலைத்தளங்களிலும் பாஜக-வினர் வேகமாகப் பரப்பி வருகின்றனர்.

Saturday, April 28, 2018

சுட்டதும் சுடப்பட்டதும் - தொழில் தர்மம் . . .


உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகங்களை சுட்ட கதைகளை சில தோழர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.  ஹைதராபாத்தில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அன்புடன்  சுடப்பட்ட குடையுடன் என்ற  புகைப்படப் பதிவு ஒன்றையும்  முக நூலில் பார்த்தேன்.

இவையெல்லாம் கொஞ்சம் நினைவுகளை தூண்டி விட்டது.

மதுரை சௌராஷ்டிராக் கல்லூரியில் முதலாண்டு படிக்கையில் ரமேஷ் என்ற நண்பன், மதுரையில் உள்ள ஒரு பெரிய துணிக்கடை அதிபரின் பேரன், சுஜாதா புத்தகங்களை வாங்கிக் குவிப்பான். நான் படிப்பதற்கும் கொடுப்பான். ஒரு சமயத்தில் இரண்டு புத்தகம்தான் கொடுப்பான். அவற்றை திருப்பித் தந்தால்தான் அடுத்த புத்தகம் கிடைக்கும். முதலாண்டு  முடிந்த பின் விடுமுறையின் போது கொடுத்த இரண்டு புத்தகங்களைத்தான் திருப்பித் தர முடியவில்லை. ஏனென்றால் அவன் படிப்பை மதுரையில் தொடராமல் சென்னைக்கு போய் விட்டான். அவன் கொடுத்த “வைரங்கள்” மற்றும் “14 நாட்கள்” இன்னும் என்னிடம்தான் உள்ளது.

நெய்வேலியில் எல்.ஐ.சி பணிக்கு சேர்ந்தவுடன் அப்போதிருந்த முன்னணி தோழர் அ.சுப்பராயன் ( அவர் பின்பு எங்கள் வேலூர் கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட மேலாளராக பணியாற்றினார்) நிறைய புத்தகங்களை படிக்கக் கொடுப்பார். ஆனால் கறாராக திரும்பி  வாங்கி விடுவார். சுட வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கான வாய்ப்பு கிடைத்ததில்லை.

ஆனால் அதே நேரம் தோழர் சுப்பராயனோடு ஒரே இயக்கத்தில் செயல்பட்ட தோழர் பாலு என்ற தோழரும் புத்தகங்களைக் கொடுப்பார். திருப்பி வாங்க மறந்திடுவார். அவரது மறதியை பயன்படுத்தி சுட்ட புத்தகங்கள் உண்டு. “சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாறு” ராகுல சாங்கிருத்தியானின் “ராம ராஜ்யம்” ராஜேந்திர சோழனின் “எட்டு கதைகள்” ஆகியவை அப்படி சுட்ட புத்தகங்கள்.

கொஞ்சம் பொருளாதார முன்னேற்றம் வந்த பின்பு நூல்களை சுடுவதில்லை. வாங்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் புத்தகங்கள் சுடப்பட்டது இந்த காலகட்டத்தில்தான். வேலூர் வந்த பின்பு சுடப் படுவது என்பது மட்டும்தான்  நடைபெற்றது.  

சில முக்கியமான புத்தகங்களை படித்து விட்டு தருகிறேன் என்று வாங்கிக் கொண்டு போய் அதற்குப் பிறகு சில மாதங்கள் நம் கண்ணிலேயே படாமல் போன சிலர் உண்டு.  குறைந்த பட்சம் அவர்கள் அந்த புத்தகங்களை படித்திருந்தாலாவது சரி. நிச்சயம் திருப்பித் தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போது புத்தகங்களை அளிப்பது. ஆனால் அந்த எண்ணிக்கை குறைவுதான்.


அதே போல எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக நூல் அறிமுகம் எழுதி விட்டு அந்த நூலின் அட்டைப்படத்தையும் வெளியிட அச்சகத்திற்கு அனுப்பினால் அங்கிருந்து திரும்பி வராது.  படித்து விட்டு தருகிறேன் என்று தட்டச்சு செய்கிற தோழர் கோபி சொல்வார். சரி படிக்கட்டும் என்று விட்டுவிட்ட நூல்கள் அதிகம்.  

அதிலே ஒரு வருத்தம் உண்டு.

மறைந்த தோழர் சி.வெங்கடேசன், நந்தனார் பற்றி தோழர் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய புனைவு நூலான “மரக்கால்” நூலை எனக்காக  நூலாசிரியர் கையெழுத்தோடு  வாங்கி அன்பளிப்பாக அளித்தார். அந்த நூலை மட்டுமாவது திருப்பிக் கொடு என்று கேட்டும் வரவில்லை. 

ஆனால் ஒன்று அதிலே கற்றுக் கொண்ட பாடம் ஒன்று உண்டு. புத்தக அட்டைக்காக நூலை அச்சகத்திற்கு அனுப்புவதில்லை. நானே ஸ்கேன் செய்தோ அல்லது புகைப்படம் எடுத்தோ அனுப்பி விடுகிறேன். 

அகில இந்திய அளவிலான மாநாடுகள் என்றால் அங்கே கொடிகளை சுடுவது என்பது பலருக்கும் ஒரு மரபு. ஒரு கொடியையாவது சுட்டால்தான் மாநாட்டில் கலந்து கொண்ட திருப்தியே இருக்கும். 

அப்படி கொடி சுட்ட அனுபவம் எனக்கும் உண்டு என்பதோடு இப்பதிவை முடிக்கிறேன். 

சில விபரங்கள் சொல்லலாம். 



ஆனால் அதெல்லாம் Professional Ethics (தொழில் தர்மம்) கிடையாது. . .

Friday, April 27, 2018

வெறுப்பேற்றவா முதல் பக்க புகைப்படம் ???







எஸ்.சி/எஸ்.டி வன் கொடுமைச் சட்டத்தை பாதுகாக்க தலித் அமைப்புக்கள் சென்னையில் நடத்திய பேரணியை அனைத்து ஊடகங்களும் முற்றிலுமாக புறக்கணித்தனர்.

தீக்கதிர் தவிர வேறெந்த நாளிதழும் புகைப்படமோ செய்தியோ வெளியிடவில்லை.

ஹிந்து, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஆங்கில இதழ்களும் இந்த புறக்கணிப்பு வேலையை செய்தன.

பெரும் ஊடகங்கள் மீதான கடுமையான விமர்சனம் வந்த நிலையில்தான் 

நேற்று ஆங்கில ஹிந்து  முதல் பக்கத்தில் திருச்சூர் கோயில் விழாவின் படத்தை ஏதோ மிகப் பெரிய செய்தியாக வெளியிடுகிறது.

தலித் அமைப்புக்களின் போராட்டச் செய்தியை இருட்டடிப்பு செய்யும் அரசியலை கண்டித்தால் கோயில் விழா அதுவும் நம் மாநிலம் கூட கிடையாது, அதை வெளியிடுவது என்பது வெறுப்பேற்றும் வேலையாகத்தான் தெரிகிறது.

இது மோசமான அணுகுமுறை


Thursday, April 26, 2018

மோடி ஒன்றும் முட்டாளில்லை



ஆமாம்.

மோடி ஒன்றும் முட்டாள் கிடையாது.

பொய்யான வாக்குறுதி கொடுத்து ஒட்டு மொத்த இந்திய வாக்காளர்களை மோசடி செய்த மோடியை எப்படி முட்டாள் என்று சொல்ல முடியும்!

இந்தியாவின் மிகப் பெரிய கிரிமினல் என்பதையும் நம்மால் மறக்க முடியாது.

அதனால்தான் உத்தர்கண்டிலே அவர்களின் தில்லாலங்கடி குதிரை பேர ஆட்சி மாற்றத்தை அனுமதிக்காத நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க மறுத்து விட்டது. 

ஏற்கனவே நான்கு நீதிபதிகள் மோடி அரசின் தர்ம பரிபாலன லீலைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். 

இந்த சூழலில் இன்னொரு நேர்மையான நீதிபதியை, போதாக்குறைக்கு அவர் காவிகளுக்கு பிடிக்காத சிறுபான்மை மதத்தவர் வேறு, உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு வர 

மோடி ஒன்றும் முட்டாள் இல்லை.


ஹீரோவை வில்லன் வெறுக்கத்தான் செய்வான்


உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம் (முடிந்தவரை அதிகமானவர்களிடம் கொண்டு சேருங்கள்.)
**************************
“ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன... நான் உண்மையாகவே குற்றவாளியா...?”


சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்...!

சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்... “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அதன் பதில் உயர்ந்து வரும்...”இல்லை” என்று...

2017 ஆகஸ்ட் 10-ம் தேதியின் அந்த துன்பம் நிறைந்த இரவில் எனக்கு ஒரு வாட்சப் தகவல் கிடைத்த அந்த நிமிடத்தில், நான் என்னால் முடிந்ததை, ஒரு மருத்துவர், ஒரு தந்தை, ஒரு பொறுப்புள்ள இந்தியக்குடிமகன் என்ற முறையில் செய்வதை எல்லாம் செய்தேன்...!

திரவ நிலையிலுள்ள ஆக்சிஜன் (Liquid Oxygen) திடீரென்று நிறுத்தப்பட்டதால் அபாயத்திற்குள்ளான ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்ததெல்லாம் நான் செய்தேன்...

க்சிஜன் இல்லாததால் இறந்துகொண்டிருந்த அந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயற்சிகள் செய்தேன். நான் பைத்தியக்காரனைப் போல் எல்லோரையும் அழைத்தேன், நான் கெஞ்சினேன், நான் பலருடனும் பேசினேன், ஓடினேன், வண்டியை ஓட்டினேன், உத்தரவிட்டேன், அலறினேன், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டேன், ஆறுதல் சொன்னேன், அறிவுரை கூறினேன், பணம் செலவழித்தேன், கடன் வாங்கினேன், அழுதேன்...ஒரு மனிதனால் செய்ய முடிந்தது அனைத்தையும் செய்தேன்...

நான் எனது துறைத்தலைவரையும் என் சக ஊழியர்களையும் BRD மருத்துவக்கல்லூரி முதல்வரையும், பொறுப்பு முதல்வரையும், கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டையும், கோரக்பூர் சுகாதார கூடுதல் இயக்குனரையும் கோரக்பூர் CMS/SIC யையும், CMS/SIC BRD-யையும் அழைத்து, திடீரென்று ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பயங்கர நிலையைக் குறித்து தெரிவித்தேன். (என்னிடம் இந்த அழைப்புகள் பற்றிய ஆதாரங்கள் உள்ளன)

நான், வாயு கொடுக்கும் நிறுவனங்களான மோடி கேஸ், பாலாஜி கேஸ், இம்பீரியல் கேஸ், மயூர் கேஸ் ஏஜன்சி ஆகியவற்றையும் BRD மருத்துவக்கல்லூரியின் அருகிலுள்ள மருத்துவமனைகளையும் அழைத்து, அவர்களிடம் நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வாயு சிலிண்டர்களுக்காக மன்றாடினேன்.

நான் அவர்களுக்கு கொஞ்சம் பணம் முன்தொகையாக கொடுத்தேன். மீதிப்பணம் சிலிண்டர் தரும் பொழுது தருவேன் என்று உறுதி கூறினேன். (நாங்கள் திரவ ஆக்சிஜன் கொள்கலன் வரும் வரையில் 250 ஜம்போ சிலிண்டர்களை ஏற்பாடு செய்திருந்தோம். ஒரு ஜம்போ சிலிண்டரின் விலை 216 ரூபாய் ஆகும்)

நான் ஒரு கியுபிகிலிருந்து அடுத்ததற்கு, 10 வது வார்டிலிருந்து 12-வது வார்டுக்கும், ஒரு வாயு பகிர்மான முனையிலிருந்து அடுத்த முனைக்கும் வாயு வருகிறதா என்பதை உறுதி செய்வதற்காக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தேன்.


வாயு சிலிண்டர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நானே காரை ஒட்டிக்கொண்டு சென்றேன். அதுவும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்றான போது அருகிலுள்ள ஆயுதம் தாங்கிய எல்லைக்காவல் படையினரிடம் சென்றேன். அப்படையின் DIG-யை சந்தித்து நிலைமையின் அபாயத்தை விளக்கினேன். அவர்கள், எனது வேண்டுகோளை ஏற்று நேர்மறையான உடனடி நடவடிக்கை மூலம் எனக்கு உதவினார்கள். அவர்கள் ஒரு பெரிய கனரக வாகனமும் ஒரு இராணுவ வீர்களின் படையையும் எனக்கு உதவுவதற்காக அனுப்பினார்கள். இராணுவ வீரர்கள் கேஸ் ஏஜன்சிகளிலிருந்து BRD-க்கு வாயு சிலிண்டர்களை கொண்டுவந்து சேர்ப்பதற்கும் காலி சிலிண்டர்களை திருப்பித் தரவும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தொடர்ந்து 48 மணிநேரங்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்களின் மனதைரியம் எங்களுடைய மனதைரியத்தை அதிகரித்தது. நான் அவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அவர்களின் உதவிக்கு என்றென்றும் நன்றி உடையவனாகயிருப்பேன்.

ஜெய் ஹிந்த்!


என்னைவிட மூத்த மற்றும் இளைய மருத்துவர்களிடம் பேசினேன்...என்னுடன் பணிபுரியும் செவிலியர்களுடன் பேசினேன். “யாரும் குழப்பமோ பதற்றமோ அடையாதீர்கள்... நிலைகுலைந்து போயிருக்கும் தாய் தந்தையரிடம் கோபப்படாதீர்கள்...யாரும் ஓய்வெடுக்காதீர்கள்...நாம் ஒன்றுபட்டு ஒரே குழுவாக வேலை செய்தால்தான் எல்லோருக்கும் சிகிச்சையளிக்கவும் எல்லா உயிரையும் பாதுகாக்கவும் இயலும்...” என்று கூறினேன்.

நான் குழந்தைகளை இழந்த கண்ணீருடன் நின்ற தாய்தந்தையாருக்கு ஆறுதல் கூறினேன்... குழந்தைகளை இழந்த, துக்கத்தில் ஆத்திரப்பட்டு, கோபத்துடன் இருந்த தாய்தந்தையருக்கு ஆறுதல் கூற முயன்றேன்...அப்பகுதி எங்கும் மனக்குழப்பம் நிறைந்து காணப்பட்டது...அவர்களிடம் திரவ ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாகவும் அதற்குப் பதிலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்த முயற்சி செய்வதாகவும் விளக்கினேன்...!

நான் அனைவரிடமும் உயிர்காக்கும் முயற்சிகளில் கவனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன் ...நான் அழுதேன்... என்னுடைய குழுவில் உள்ள அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள்...குறிப்பிட்ட காலத்தில் வாயு வாங்கியதற்காக பாக்கிப் பணத்தை பட்டுவாடா செய்யாத ஆட்சியாளர்களின் தோல்வியைக் கண்டு...அதனால் ஏற்பட்ட மீளத்துயரதைக் கண்டு...அழுதோம்...!

13-08-2017 அதிகாலை 1:30 க்கு திரவ ஆக்சிஜன் கொள்கலன் வந்துசேருவது வரை நாங்கள் எங்கள் பணிகளை நிறுத்தவேயில்லை..!

ஆனால்... அன்றைய தினம் விடிந்த பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மகாராஜ் மருத்தவமனைக்கு வந்த பிறகு தான் எனது வாழ்க்கை தலைகீழாக மாறியது...!

அவர் என்னிடம் கேட்டார், ”அப்ப...நீங்க தான் டாக்டர். கஃபீல் இல்லையா...? நீங்கள் தானே வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்தவர்?”

“ஆமாம் சார்” நான் பதில் சொன்னேன்.

அவர் கோபத்துடன், “அப்படி என்றால், வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததால் நீங்கள் ஒரு ஹீரோ ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் அப்படித்தானே...? நாம் பார்க்கலாம்..”


யோகிஜி கோபப்படுவதற்கு காரணமிருக்கிறது...இந்த செய்தி ஊடகங்களில் வந்துவிட்டது என்பது தான் அந்த காரணம்...நான் அல்லாவின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன்...நான் அன்றைய தினம் இரவு எந்த ஊடகவியலாளருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அன்றைய தினம் இரவில் அங்கிருந்தார்கள்..

போலீசார் எனது வீட்டிற்கு வந்தார்கள்...எங்களை வேட்டையாடினார்கள், மிரட்டினார்கள், எனது குடும்பத்தாரை கொடுமைப்படுத்தினார்கள். என்னை ஒரு மோதலின் மூலமாக கொலை செய்துவிடுவதாக எச்சரித்துக் கூறினார்கள்... எனது குடும்பத்தில் அம்மாவும், மனைவியும் குழந்தைகளும் அச்சத்திலாழ்ந்தார்கள்... அவர்களுக்கு ஆறுதல் சொல்ல என் வாயில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை...


எனது குடும்பத்தை அவமானத்திலிருந்து காப்பாற்ற நான் போலீசில் சரணடைந்தேன்...அப்போதும் நான் தவறேதும் செய்யவில்லை என்றும் அதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்றும் உறுதியாக நம்பினேன்...!

ஆனால் நாட்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன...ஆகஸ்ட் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை....ஹோலி வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டு வந்தது, தீபாவளி வந்தது...ஒவ்வொரு நாளும் ஜாமீன் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் கடந்தது...அப்போது தான் நீதி, சட்ட முறைகளும் கூட அவர்களின் கடும் அழுத்தத்தில் இருக்கிறதென்று எங்களுக்குப் புரிந்தது... (அவர்களும் அவ்வாறு தான் சொன்னார்கள்)


நான் இப்போது...150-க்கு அதிகமான சிறைக்கைதிகளுடன் ஒரு குறுகலான அறையின் கட்டாந்தரையில் தான் தூங்குகிறேன்...இரவில் இலட்சக்கணக்கான கொசுக்களுக்கும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுக்கும் நடுவில் வாழ்வதற்காக, உணவு உட்கொண்டு, அரைநிர்வாணமாக குளித்து, உடைந்து நொறுங்கிய கதவுகளைக் கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொண்டு...எல்லா ஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் எனது குடும்பத்தாரை எதிர்பார்த்தவாறே சிறையில் காத்துக் கிடக்கிறேன்...

எனக்கு மட்டுமல்ல எனது குடுமபத்திற்கும் வாழ்க்கை நரகமாகவே கழிகிறது...ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்... காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு கோரக்பூரிலிருந்து அலகாபாத்திற்கு...நீதி கிடைப்பதற்காக...ஆனால் அனைத்துமே வீண் முயற்சிகளாகின...


எனது குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட என்னால் முடியவில்லை...அவளுக்கு இப்போது ஒரு வயதும் ஏழு மாதங்களும் ஆகின்றன...குழந்தைகள் மருத்துவர் என்ற முறையில் எனது குழந்தை வருவதைப் பார்க்க முடியாதது மிகவும் வேதனையானது என்பதோடு ஏமாற்றமளிப்பதுமாகும். ஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில், குழந்தைகளின் வளர்ச்சிக் காலகட்டங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி நான் தாய்தந்தையருக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் எனது குழந்தை நடக்கத் துவங்கிவிட்டதா, பேசுகிறதா, ஓடுகிறதா என்பது ஏதும் எனக்குத் தெரியாது...

மீண்டும் ஒரு கேள்வி என்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது...நான் உண்மையில் குற்றவாளிதானா...? இல்லை...இல்லவேயில்லை...!

2017 ஆகஸ்ட் 10 –ம் தேதி நான் விடுப்பிலிருந்தேன் (என்னுடைய துறைத்தலைவர் அனுமதியுடன்). என்றபோதும் எனது கடமையை உணர்ந்து ஓடோடிச் சென்றேன். அதுவா நான் செய்த தவறு?


அவர்கள் என்னை துறைத்தலைவராகவும், BRD-யின் துணைவேந்தராகவும் 100 படுக்கைகளைக் கொண்ட அக்யுட் என்கேபலைட்டிஸ் சின்ட்ரோம் வார்டின் பொறுப்பாளராகவும் மாற்றிக்கொண்டார்கள்...நான் அங்கே பணி அடிப்படையில் இளைய மருத்துவர்களில் ஒருவராவேன். 08-08-2016 அன்று தான் எனது பணிநிரந்தர ஆணையைப் பெற்றேன். அங்குள்ள NRHM- பொறுப்பு அதிகாரியும் குழந்தை மருத்துவத்துறையின் விரிவுரையாளருமாவேன்... எனது வேலை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதுமாகும். திரவ ஆக்சிஜன் கொள்கலன், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவை வாங்குவதற்கோ டெண்டர் கொடுப்பதற்கோ, பராமரிப்புப்பணி செய்வதிலோ, பணம் பட்டுவாடா செய்வதிலோ நான் எந்த பணியிலும் ஈடுபட வேண்டியதில்லை.

ஆக்சிஜன் கொடுத்து வந்த புஷ்பா சேல்ஸ் என்னும் நிறுவனம் வாயு கொடுப்பதை நிறுத்தியதற்கு நான் எவ்வாறு பொறுப்பாளியாவேன். மருத்துவத்துறை பற்றி தெரியாதவர்களுக்குக் கூட டாக்டர்கள் சிகிச்சையளிப்பவர்கள் என்றும், ஆக்சிஜன் வாங்கும் பணி செய்பவர்கள் அல்ல என்பதும் தெரியும்.

புஷ்பா சேல்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய 68 லட்சம் ரூபாய் பாக்கியை பட்டுவாடா செய்யக்கேட்டு அந்நிறுவனம் அனுப்பிய 14 நினைவூட்டல் கடிதங்களுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த DM, மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் ஆகியவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.

உயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது.... அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்..!


புஷ்பா சேல்ஸ் இயக்குனர் மனீஷ் பண்டாரிக்கு ஜாமீன் கிடைத்தபோது. எனக்கும் நீதி கிடைக்குமென்றும் எனது வீட்டருடன் வாழவும் மருத்துவ சேவை செய்யவும் இயலும் என்று நாங்கள் நம்பினோம்.

ஆனால், நம்பிக்கையை இன்னும் இழந்துவிடவில்லை...நாங்கள் இப்போதும் காத்திருக்கிறோம்...

எனக்கு, ஜாமீன் பெறும் உரிமையை தருவதோடு சிறையை தண்டனையைத் தவிர்க்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது... எனது வழக்கு நீதிமறுப்பிற்கான சிறந்த உதாரணம் ஆகும்.

நான் விடுதலைபெற்று எனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருக்கும் காலம் வருமென்று நம்புகிறேன். உண்மை நிச்சயம் வெல்லும்..நீதி கிடைக்கும்...!


நிராதரவாக நிற்கும், இதயம் நொறுங்கிய தந்தை, கணவன், சகோதரன், மகன், நண்பன்.

டாக்டர். கஃபீல் கான்.
18-04-2018

ஜூஸ் குடிக்க பத்து கோடி

தோழர் ஸ்ரீரசா அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
எனக்கும் இரண்டு கேள்விகள் உண்டு. அவை கடைசியில்.
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.


"வருசத்துல நவராத்திரி எத்தனை நாள்?"

"முண்டம் அதான் கேள்வியிலயே பதில் இருக்கே, நவம்னா ஒன்பது.. நாள்.."

"ஓ.. அப்புடியா? சரி, ஒரு வருசத்துக்கு ஒன்பது நாளுன்னா, நாலு வருசத்துக்கு எத்தனை நாட்கள்?"


"ஒன்பதாம் வாய்ப்பாடு கூடவா தெரியாது? 

ஒன்பத்து நான்கா முப்பத்தாறு... "


"ஒரு நாளைக்கு ஒரு மனுசன் எம்புட்டுத் தண்ணி குடிக்கலாம்... எம்புட்டுப் பழச்சாறு அருந்தலாம்?"

"மூணு லிட்டர் தண்ணி... ஒரு லிட்டர் பழச்சாறு...வரை..."

"அப்புடீன்னா,36 நாளைக்கு எம்புட்டு லிட்டர் தண்ணி, எம்புட்டு லிட்டர் பழச்சாறு?"

"36 X 3 = 108 லிட்டர் தண்ணி

36 X 1 = 36 லிட்டர் பழச்சாறு..."


"அதுக்கு எம்புட்டுச் செலவாகும்?"

"பத்து கோடியே ஒன்பது லட்சத்து எட்டு ஆயிரத்து நாற்பத்தைந்து ரூபாய். (10,09,08,045)..."

"ஓ.. நீ... இந்தியாவுல ஆர்எஸ்எஸ்-பாஜக பிரதமரா இருக்கிறயா?"


என்னுடைய இரண்டு கேள்விகள்

இப்படி ஒரு ஊதாரியை இதுவரை உலகம் கண்டதுண்டா?

அந்த பழங்கள் எல்லாம் அமேசான் காட்டு அரியவகை பழங்களாக இருக்குமோ? இவ்வளவு காஸ்ட்லியாக உள்ளதே!

Wednesday, April 25, 2018

யாமிருக்க பயமேன் ஆசாராம் சாமியாரே!


கவலை வேண்டாம் ஆசாராம்,
யாமிருக்க பயமேன்?

ஆயுள் தண்டனை அளித்தாரென
கவலை வேண்டாம் ஆசாராம்!

கீழமை நீதிமன்றங்கள்
என்றாவது நியாயமாய்
தீர்ப்பளித்தால்
எப்போதும் நிராகரிக்கும்
மேல் மன்றங்கள்
என்றும் உண்டு எம் வசம்!

தீர்ப்பை மாற்றுவோம்
தேவையெனில்
தீர்ப்பு எழுதுவோரையே
தீர்த்துக் கட்டுவோம்.

லோயாக்கள் வாழ்ந்த
மன்றங்களில்
இன்று வாழ்வதென்னவோ
மிஸ்ராக்கள்தான்.

எங்கள் வாழ்க்கை
உங்களின் தயவால்
உங்களைக் காக்கத்தான்
மன்றத்தின் 
உச்சத் தலைவர்.
அவரைக் காக்க
வெங்காயங்கள்,
எங்களின் தயவில்
வெங்காயங்கள்.

இதுதானே நம்
குற்றச் சுற்று.

தூக்குத் தண்டனையென
அவசரச்சட்டமா?
அது குறித்தெல்லாம்
உமக்கு கவலையா?

வழக்கமான என்
வாய்ச்சொல்
எப்போதும் போல்
பிறருக்குத்தான்.

காமுகர்களைக் காக்க
கையில் தேசியக்கொடி
காஷ்மீரில் ஏந்தியது
நாம்தானே!

தண்டனைக்கே
தண்டனை தருபவர்
நாமெல்லவோ?

கவலை வேண்டாம்
ஆசாராம்.
ஆயுள் தண்டனை
அதி விரைவில் மாறும்.

நீதியா?
அது கிடக்கட்டும் கழுதை!

பொறுப்பா பேசுய்யா வெங்காயம் . . .



தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மனுவை திங்கட்கிழமை அன்றே நிராகரித்து,  மூன்று நாட்களில் எடுக்கப்பட்ட முடிவை முப்பது நாள் அவகாசம் எடுத்து மிகவும் ஜிந்தித்து எடுக்கப்பட்டதாக கதை விடும் பெரிய மனிதரை மேலே உள்ள தலைப்பு சொல்வதாக யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

என்னதான் இருந்தாலும் ஒரு குடியரசுத் துணைத்தலைவரை எல்லாம் அப்படி சொல்ல மாட்டேன், அந்த பதவிக்கு சற்றும் தகுதியற்ற வெத்து வேட்டு, வேடதாரியாக இருந்தாலும் கூட.

பொறுப்பா பேசு என்று நான் பொதுவாக சொல்கிறேன்.


Tuesday, April 24, 2018

யாக குண்டத்திலேயே கிளுகிளுப்பென்றால் ?????




மாசுக்கும் மாசுக்கும் சண்டை என்று போன மாதம் எழுதியிருந்த ஒரு பதிவிற்கு நேற்று ஒரு பின்னூட்டம் வந்தது.

ஹோம குண்டங்களின் வடிவைப் பார்த்தீர்களா? இதய வடிவில் அமைத்துள்ளார்கள் என்று சொன்னது அந்த பதிவு.

அதன் பிறகு அப்படத்தை கவனித்தேன். ஆமாம் அப்படித்தான் வடிவமைத்துள்ளார்கள். ஒரிஜினல் செய்தியும் அதை உறுதிப் படுத்துகிறது.

இப்படி யாக குண்டத்தில் கூட காவிகள் தங்கள் கிளுகிளுப்பைக் காண்பிக்கிறதை நம்மால் புரிந்து கொண்டால் அவர்கள் காமுகர்களாகவும் உருவெடுப்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும் . . .


Monday, April 23, 2018

காவிகள் = காமுகர்கள் ?????



காவிகள் அனைவரையும் காமுகர்கள் என்று சொல்லி விட முடியாது.

ஆனால் காமுகர்கள் அனைவரும் காவிகளாகத்தான் உள்ளார்கள்.


லேட்டஸ்ட்  உதாரணம் நேற்று நள்ளிரவில் மாட்டிக் கொண்ட பாஜக முன்னாள்  ஆர்.கே.நகர் வேட்பாளர்.




இந்நிலை வாராதிருக்கட்டும் . . .

சில தினங்கள் முன்பாக வாட்ஸப்பில் உலா வந்த படங்களை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.






இப்படிப்பட்ட அவல நிலை எதிர்காலத்தில் வாராதிருக்க அவசியம் வாசியுங்கள். . .

உங்களுக்கு எது சாத்தியமோ, அதை வாசியுங்கள் . . .

எதிர்காலத் தலைமுறைக்கு வாசிப்பின் ருசியை கற்றுக் கொடுங்கள் . . .

உலக புத்தக தின வாழ்த்துக்கள் . . .

Sunday, April 22, 2018

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தோழர் யெச்சூரி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

தலைப்பில் ஏன் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றொரு வினா வரலாம். வர வேண்டும், வருவதுதான் இயல்பு.

தோழர் யெச்சூரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு கிடையாது, இயக்கம் பிளவு படும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பலர். 

அவர்கள் யாரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களும் இல்ல. இயக்கத்தை முடக்க வேண்டும் என்றே மனதாற விரும்பியவர்கள்.  பெயரளவில் மற்றவர்களைப் போல் இருந்தால் போதும் என்றே ஆசைப்பட்டவர்கள். 

கூட்டு முடிவு, கூட்டு இயக்கம் என்பதுதான் பிரதானமாக இருந்த போதிலும் தனி நபரின் பங்களிப்பையோ, அர்ப்பணிப்பையோ புறக்கணித்து விட முடியாது. கூடாது. மோடி ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்தும் பணியை தோழர் சீதாராம் யெச்சூரியைக் காட்டிலும் சிறப்பாக செய்ததாக வேறு யாரையும் சொல்லிட முடியாது. மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரைகளே அதற்குச் சான்று. 

சிறப்பாக பணி செய்து கொண்டிருந்த தோழர் சீதாராம் யெச்சூரி பொறுப்பில்  தொடரக் கூடாது என்ற அவர்கள் விருப்பமே அவரைக் கண்டு அவர்கள் அச்சப்படுகின்றனர் என்பதன் அடையாளம். 

பன்னாட்டு கார்ப்பரேட்டுகள், மத அடிப்படைவாதிகள் ஆகியோர் அஞ்சுவது இடதுசாரிகளைக் கண்டுதான். அதிலே பிரதான இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி மீது  அவர்களுக்கான எரிச்சலும் கோபமும் இயற்கையானது.

உலகமயம் என்ற பெயரில் முதலாளித்துவம் செய்கிற சுரண்டல், நாற்காலிக்காக மத வெறியைத் தூண்டும் அடிப்படைவாதிகளின் கேடு கெட்ட உத்திகள் - இரண்டிற்குமே சவாலாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் அக்கட்சி மீது அவதூறு செய்வதையே அவை பிழைப்பாகக் கொண்டுள்ளன. 

தான் பின்பற்ற வேண்டிய அரசியல் நிலைப்பாடு குறித்து நாடெங்கிலும் உள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை திரட்டுவது, அக்கருத்தின் அடிப்படையில்  முடிவை எடுப்பதும் எடுக்கப்பட்ட முடிவை அனைவரும் ஒருமித்து அமலாக்குவதும்  வேறெங்கும் இல்லாத நடைமுறை. அந்த உன்னதமான ஜனநாயகத்தை கோஷ்டி என்று சிறுமைப்படுத்திய ஊடகங்கள் இப்போது  மிகவும் சோகத்தில் ஆழ்ந்து போயிருக்கும். 

தோழர் யெச்சூரி மீண்டும் பொறுப்பேற்றுள்ள சூழல் மிகவும் முக்கியமானது. 

இந்திய நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலான பாஜக ஆட்சியை வீழ்த்துவதே பிரதானமான கடமை என்று அகில இந்திய மாநாடு தெளிவாக வரையறுத்துள்ளது.

அந்த கடமையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார், செய்து முடிப்போம் 

என்று அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் தோழர் பொதுச்செயலாளர்.

உங்கள் பாதையில் எங்கள் பயணம் வெற்றியை நோக்கி . . .
இந்திய நாட்டின் விடியலை நோக்கி . . .


Saturday, April 21, 2018

ஓபிஎஸ் மனதில் "மீண்டும் ?????"

எடப்பாடியை சாமியாய் சித்தரிக்கும் விளம்பரப்படம் குறித்த முந்தைய பதிவின் தொடர்ச்சி இது . . .

அந்த விளம்பரப்படத்தைப் பார்த்த ஓ.பி.எஸ் ஸின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் இருக்குமோ?

ஒரு சின்ன கற்பனை


எடப்பாடி சாமியாம்! தைரியம்யா உங்களுக்கு !!!




எடுபிடி, அடிமை, ஊழல் பேர்வழி, அமைதிப்படை அமாவாசை போல முதலமைச்சரானவர், லாயக்கில்லாதவர் என்றெல்லாம் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற எடப்பாடிக்கு ஆனாலும் அளவுக்கதிகமான தைரியம்தான்.

அரசின் பணத்தில் “எடப்பாடியை சாமி”யாக சொல்கிற விளம்பரத்தைத் தான் சொல்கிறேன்.






ஜெயலலிதா கூட தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டதாக நினைவில்லை.


தமிழக மக்களின் கடுமையான வெறுப்பில் இருக்கும் போதே இப்படி ஒரு விளம்பரம் என்றால்?????

Friday, April 20, 2018

போட்டோஷாப் தெரியாதா சிப் சேகரு?????



சிப்பு சேகரின் திமிர் கொஞ்சமும் அடங்கவில்லை. இவரு இஷ்டத்திற்கு எதையாவது எழுதுவாராம், அப்புறம் அதை இவரே நீக்கிடுவாராம். 

இவரு நீக்கிட்டா உடனே உத்தமனாயிடுவாரா?

இந்தாள் எவ்வளவு மோசமானவன்னு உலகத்துக்கு தெரிய, இவர் போட்ட பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டவர்களை இவரு வன்மையா கண்டிப்பாராம். 

நீ காமெடியன் கிடையாது. கடைந்தெடுத்த வெறியன் என்பது அம்பலமாக அம்பலமாக பதட்டமா இருக்கா சேகரு?

அது சரி, ஸ்க்ரீன் ஷாட்/போட்டோ ஷாப்  ன்னு எழுதின உமக்கு அந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

நீர் எழுதினதை அப்படியே எடுத்துப் போட்டது ஸ்க்ரீன் ஷாட். அது எப்பவுமே ஒரிஜினல்.

மோடி அதைக் கிழிச்சாரு, இதைக் கிழிச்சாருன்னு நீங்க எல்லாம் எப்பவுமே கதை விட சில படம் போடுவீங்களே, அதுதான் போட்டோஷாப், எப்பவுமே ஃபிராடு, உடான்ஸ், அது உங்க கட்சியோட பிறவிக்குணம்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டில சிப்பு இருக்குன்னு சொன்ன அடி முட்டாள், இல்லையில்லை அதிமேதாவிதான நீரு!

காலையில் கதிர் போட்ட கார்ட்டூனும் அதை கமல் இன்னும் செழுமைப்படுத்திய கார்ட்டூனும் கூட உமக்கெல்லாம் பத்தாது. 


லேட்டஸ்ட் ஆபாச வார்த்தைகள் . . .

சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

முக நூலில் வேகமாக உலா வருவதை நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

படித்து சிரியுங்கள்




கார்ட்டூனால் புரோகித் ராஜினாமா????

நேற்று ஹிந்து இதழில் திரு சுரேந்திரா போட்ட கார்ட்டூன் 
மரண பங்கம்.

இதற்கே பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆனால் அதெல்லாம் . ....


Thursday, April 19, 2018

சிப் சேகர், அந்த பயம் இருக்கட்டும்

எச்.ராசாவுக்கு எந்த விதத்திலும் தான் சளைத்தவனில்லை என்று நிரூபிக்க சிப்பு சேகர் ஒரு கேவலமான பதிவை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். 

இதுதான் அந்த கேவலமான பதிவு. ஊடகங்கள் இனியாவது பாஜகவை புறக்கணிக்க வேண்டும்.



ஆனால் இப்போது அந்த பதிவு அந்த மனிதனின் பக்கத்தில் இல்லை.

பயந்து போய் நீக்கி விட்டார் போல.  அது நான் போடலை. என் அட்மின் போட்டது என்று விளக்கம் அளிக்கலாம்.

அந்த பயம் இருக்கட்டும்.

பின் குறிப்பு : புரோகித்துக்கு ஏன் இப்படி பரிந்து பேசி இவர்கள் எல்லாம் அசிங்கப்படுகிறார்கள்? இதில் ஏதோ மர்மம் உள்ளது. வெறும் காவிப்பாசம் மட்டும் இருக்க வாய்ப்பில்லை . . .


கவர்னராகனும், கன்னத்தை தட்டனும்



அந்த நீதிபதி லோயா எப்படி செத்தா எங்களுக்கென்ன?

அப்பவே டீல் பேசினபோது ஒழுங்கா ஒத்துக்கிட்டிருந்தா இப்படி அகால மரணம் சம்பவத்திருக்குமா?

சி.பி.ஐ நீதிபதியாக இருந்து என்ன பிரயோசனம்? வழக்கில சம்பந்தப்பட்டவங்க யாரு? என்ன பேக் க்ரவுண்டு? எத்தனை கொலை செஞ்சவங்க?  இதையெல்லாம் தெரிஞ்சுக்காம நீதி, நேர்மை என்றெல்லாம் யோசிச்சா செத்துத்தான் போகனும். . .

லோயாவோட கதியைப் பார்த்த பிறகும் அவர் எப்படி மரணம் அடைந்தார்னு மறு விசாரணை நடத்தச் சொல்ல நாங்க என்ன முட்டாள்களா?

அப்படியெல்லாம் நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் பார்த்தால்

நாங்க எப்படி கவர்னராவது?
பேட்டியெடுக்க வந்த பெண்ணின் கன்னத்தில் தட்டுவது?