சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, September 28, 2012
Thursday, September 27, 2012
அண்ணாச்சி இன்னும் மிரட்டுகிறார்.....
சிறந்த நடிகர்களில் ஒருவரான திலகன் காலமானது
வருத்தமளிக்கிறது. ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாக
வாழும் சில கலைஞர்களில் அவரும் ஒருவர்.
கமல்ஹாசன் நடித்த மலையாளப் படமான
சாணக்யன் தான் நான் பார்த்த அவரது முதல் படம்.
மோசமான முதல்வராக அதிலே அவர் கலக்கி
இருப்பார்.
அவர் நடித்த முதல் தமிழ்ப்படம் என்பதற்காகவே
விஜயகாந்த் நடித்த சத்ரியன் பார்த்தேன்.
அருமைநாயகம் அண்ணாச்சியாக அதிலே
அவரது நடிப்பு மிக அருமை.
' பன்னீர் செல்வம், நீ மறுபடி போலீஸா வரனும்'
என்று அவர் சொல்லும் போதெல்லாம் அரங்கில்
கைத்தட்டல் குவியும்.
நாசர், பிரகாஷ்ராஜ், ரகுவரன் போல எல்லாவித
கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடியவர்.
உண்மையிலேயே அவரது இறப்பு திரையுலகிற்கு
ஒரு இழப்புதான்.
அவரது புகைப்படத்தை பார்க்கையில்
அருமைநாயகம் அண்ணாச்சியாக இன்னும்
அவர் மிரட்டுவது போலவே எனக்கு தோன்றுகிறது.
Wednesday, September 26, 2012
ஏன் பிறந்தாய் மன்மோகனே? ஏன் பிறந்தாயோ?
இன்று இந்தியத் துரோகி மன்மோகன்சிங்கிற்கு
பிறந்த நாளாம். அதனால் அவருக்கு ஒரு
ஸ்பெஷல் பாட்டு.
ஏன் பிறந்தாய் மன்மோகனே?
ஏன் பிறந்தாயோ?
நீ பிறந்த காரணத்தை
நீயே அறியும் முன்னே
நாங்கள் அறிந்து கொண்டோம்
மட மோகனே!
பணம் ஒன்றும் மரத்தினிலே
காய்த்திடவில்லை என்று
தத்துவம் பேசினாயே!
தரித்தர மக்களுக்கு மட்டும்
பணம் காய்க்கும் மரம்
எங்கே உண்டு?
சொல்லிடு மன்மோகனே!
இந்திய பிரதமராய்
பதவியில் இருந்தாலும்
அமெரிக்க உள்ளம்
கொண்ட துரோகியடா!
நீ ஒரு துரோகியடா!
அழிவை பிறப்பினிலே
கொண்டு வந்த
அழிவுசக்தியடா
மன்மோகனே!
ஏன் பிறந்தாய் ?
மன்மோகனே
ஏன் பிறந்தாயோ?
இந்தியாவை சீரழிக்க
இங்கு வந்து பிறந்தாயோ?
பணக்கார சாமியானதால் ! பறிபோன தலித் சாமி !
-தோழர் பி.சம்பத்,
தலைவர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை நகரத்தில் உள்ளது அம்பேத்கர் காலனி (இப்பகுதியின் முந்தைய பெயர் பாக்குப் பேட்டை) இங்கு பல நூற்றுக்கணக்கான தலித் குடும்பங்கள் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு நூற்றாண் டுக்கு முன்னதாக இவர்கள் வழிபடுவதற்கு என்று தங்கள் கால னியின் முன்பகுதியில் சோளிங்கர் பிரதான சாலையை யொட்டி ஒரு வழிபாட்டு தலத்தை உருவாக்கினர். முதலில் சில செங்கல்களை மட்டும் அடுக்கி வைத்து வழிபட்ட அவர் கள் பிறகு சிறிய மேடை கட்டி அதன் மேல் சாமியை வைத்து வழிபட்டனர். தாங்கள் வழிபடும் சாமிக்கு அம்மாவட்டத்தில் பிரபலமான சாமியான படவேட்டம்மன் என பெயரிட்டனர். அந்த பிரதான சாலை வழியாக செல்லும் லாரி டிரைவர் கள் அங்கு வண்டிகளை நிறுத்தி வழிபட்டு காணிக்கையாக நிதியளித்துவிட்டுச் சென்றனர். ஏராளமான லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டு ஏராளமான நிதிய ளித்ததால் சிறிய அக்கோவிலின் வருமானம் பெருகியது. இதனால் கோவிலும் சற்று விஸ்தரிக்கப்பட்டு அம்மன் சிலை யும் பெரிதாக வைக்கப்பட்டது. காலப்போக்கில் வருடந் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் வரும் கோவிலாக மாறி விட்டது. வருடத்திற்கு 50 முதல் 60 லட்சம் வரை நிதி திரள்வ தாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனை தலித் மக்கள் நிர்வகிக்கப் பொறுத்துக் கொள்வார்களா ஆதிக்க சக்திகள்?, கோவிலுக்கு கொடை நடத்துவது என்ற பெயரால் ஆதிக்க சக்திகள் தலித்துகளிடமிருந்து தந்திரமாக வும், படிப்படியாகவும் கோவில் நிர்வாகத்தை கைப்பற்றிக் கொண்டு விட்டனர். தலித்துகள் வழிபடும் சாமி பணக்கார சாமியானதால் அவர்களின் சாமியையும் கைப்பற்றிக் கொண்டார்கள் ஆதிக்க சக்திகள். இவ்வளவிற்கும் இக் கோவிலைச் சுற்றிலும் தலித் மக்கள் தான் மிகக் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.ஆதிக்க சக்திகள் சார்பாக தற்போது இக்கோவிலை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர் துரைவேல் என்பவர். இவர் ஒரு லாரி உரிமையாளர், அஇஅதிமுகவின் பிரமுகரும் கூட. கோவிலுக்கு வருடம் தோறும் கிடைக்கும் பல லட்சக்கணக்கான ரூபாய் வரு மானத்தை சுயநலத்தோடு நிர்வகித்து வருகிறார்.
இதுமட்டுமல்ல. காலம் சென்ற திரு. நாராயணசாமி என்பவர் தனக்குச் சொந்தமான கோவிலைச் சுற்றியுள்ள 5 ஏக்கர் நிலத்தில் 2 /2 ஏக்கர் நிலத்தை அம்பேத்கர் நகர் தலித் மக்களுக்கும், எஞ்சியுள்ள 2 1/2 ஏக்கர் நிலத்தை இக்கோவி லுக்கும் எழுதி வைத்துள்ளார். தலித் மக்களுக்கு எழுதி வைக் கப்பட்ட 2 1/2 ஏக்கர் நிலம் 50 தலித் குடும்பங்களுக்கு குடி மனைப்பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி யுள்ள மற்றொரு 2/2 ஏக்கர் நிலம் தற்போது தலித் மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலமாகவும் அவர்களின் நடைபாதை யாகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலத்தில் உள்ளடங்கி தலித் மக்களின் 3 வீடுகளும் உள்ளன. இவர்கள் 40 ஆண்டு களுக்கும் மேலாக அங்கு குடியிருந்து வருகின்றனர். கோவி லுக்குச் சொந்தமான இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாயாகும். தற்போது துரைவேல் உள்ளிட்ட ஆதிக்க சக்திகள் இந்நிலத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.படவேட்டம்மன் கோவிலைச் சுற்றி ஏற்கனவே காம்ப வுண்டு சுவர் உள்ளது. தற்போது கோவிலைச் சுற்றியுள்ள தலித் மக்களின் பயன்பாட்டையும் நடைபாதையாகவும் பறிக்கும் வகையில் ஆதிக்க சக்திகள் 15 அடி உயரத்தில் மற்றொரு சுற்றுச் சுவரைக் கட்டி நிலத்தை தமது கட்டுப் பாட்டிற்குள் வளைத் துப்போட்டுள்ளனர். இந்நிலத்தில் தீர்வை ரசீது, மின்கட்டண ரசீது, ரேஷன் கார்டு உள்பட தக்க ஆதாரங்களுடன் வாழ்ந்து வரும் 3 தலித் குடும் பங்களின் வீடுகளையும் காலி செய்யவும் இடித்து தரை மட்டமாக்கவும் மிரட்டி வருகின்றனர். கோவி லுக்கும், தலித் மக்களின் பயன்பாட்டிற்கும் சொந்தமான நிலத்தில் துரை வேலுவும் இதர சில லாரி உரிமையாளர் களும் தங்களது லாரிகளை கழுவி விடவும் நிறுத்திக் கொள்ளவும் முடிவு செய்து இந்த அடாவடித்தனமான செயலில் இறங்கியுள்ள னர். சுற்றுச் சுவரின் பல முனைகளில் லாரிகளை கழுவ உதவும் குழாய் இணைப்புக்களையும் பொருத்தியுள்ளனர். ராட்சத பம்பு செட் வைத்து இந்நிலத்தடி நீரையும் கொள்ளை யடிக்கத் திட்டமிட்டுள்ளனர். காலம் காலமாக தலித் மக்கள் நடந்து வந்த நிலத்திற்குள் ஆதிக்க சக்திகள் அத்துமீறி நுழைந்து தங்கள் சொந்த லாபத்திற்காக கட்டிக் கொண்ட இந்த சுவரில் ஒரு பாதை ஏற்படுத்திக் கொண்டதற்காக தலித் மக்கள் கடுமையாக மிரட்டப்படுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு மிரட்டி அடாவடித்தனம் செய்வது ஆதிக்க சக்திகள் மட்டுமல்ல அரசு நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து தான்.கோவில் சொத்தை கொள்ளை யடித்து நிலத்தையும் ஆக்கிரமித்து சுவர் எழுப்பியதை வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் இதனால் பாதிக் கப்பட்ட தலித் மக்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ளனர்.
அத்து மீறல்கள் செய்து கட்டப் பட்டுள்ள அக்கிரமமான தீண்டாமைச் சுவருக்கு காவல்துறை யினரே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ள வெட்கக் கேடும் அரங்கேறியுள்ளது. மொத்தத்தில் 300 ஆண்டுகாலமாக கோவில் நிலத்தைச் சார்ந்து வாழ்ந்து வரும் அம்பேத்கர் நகர் தலித் மக்களின் வாழ்வுரிமையும், பாதை உரிமை யையும் சில தனி நபர்கள் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக பறித்துள்ள போது ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்த்துள்ளது. ஊழல் அதிகாரிகள் சுயநல ஆதிக்க சக்திகளின் கைப்பாவை யாக மாறியுள்ளது கண்டு தலித் மக்களும் ஜனநாயக சக்திகளும் கொதிப்படைந்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஆகிய அமைப்புகள் இப்பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகத் தின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதங்கள் கொடுத்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை. இம்மக்களின் பிரச்சனைக ளுக்காக இந்த அமைப்புகள் ஒரு கண்டன இயக்கத்தையும் நடத்தியுள்ளன. சுயநல சக்திகளின் அத்துமீறல் கண்கூடாக நடந்துள்ள நிலையில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்பாவி மக்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டுவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை என இழுத்தடிக்கும் நிலைபாட்டிலேயே அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தீண்டாமை, வன்கொடுமை தமிழகத்தில் இல்லை என வெட் டிச் சவடால் பேசிய அதிமுக அமைச்சர் பெருமக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் இவை.22.9.2012 அன்று அம்பேத்கர் நகர் பகுதிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத், சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினர் என். குண சேகரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. நாராயணன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கவிதா சம்பத், மாவட்ட நிர்வாகி சம்பத், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் தினகரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சக்திவேல், மாநிலத் துணைத் தலைவர் லதா, மாதர் சங்க மாநில நிர்வாகி சங்கரி, வாலாஜாபேட்டை சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஊர் நாட்டாமை பெரியவர் மணி, துணை நாட்டாமை பிரகாஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சென்றனர்.ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், நடைபாதை அத்துமீறலால் கட்டப்பட்டுள்ள சாதிச் சுவர், சிறைச்சாலைக்குள் அமைந்தது போல உள்ள 3 தலித் வீடுகள் போன்றவற்றை நேரில் கண்ட னர். மக்கள் நெஞ்சம் கொதிப்போடும், ஆவேசத்தோடும் தங்க ளது பாதிப்பை விவரித்தனர். தலைவர்கள் மக்களுக்கு ஆறுத லும் நம்பக்கையும் அளித்ததோடு செப்டம்பர் 29ம் தேக்குள் மாவட்ட அரசு நிர்வாகம் அந்த சுவரை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அரசு நிர்வாகம் அவ்வாறு செய்யத் தவறினால் செப்டம்பர் 30ல் மேற்கண்ட அமைப்புகள் சார்பாக நேரடி நடவடிக்கையில் இறங்குவதென தீர்மானிக்கப்பட்டது. சுவர் அப்புறப்படுத்தப் படுவதோடு மிகுந்த வருமானம் வரும் கோவில் நிர்வாகத்தை தலித் மக்க ளிடம் ஒப்படைக்குமாறும் இல்லையேல் தமிழக அரசின் அறங் காவலர் துறையே இக்கோவிலை ஏற்று நடத்துமாறும், தலித் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகிற நடைபாதையில் அப்புறப்படுத்தித் தருமாறும், கோவில் நிலத்தில் வாழும் 3 தலித் குடும்பங்களின் வீடுகளையும் பாதுகாக்குமாறும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறு மாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அளவில் அறைகூவல் விடுத்துள்ள செப்டம்பர் 30ல் ஆதிக்க சக்திகளுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் அரசு நிர்வாகத்திற்கும் எதி ராக பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மட்டுமல்ல வேலூர் மாவட் டம் முழுவதுமிருந்து சாதிபேதமற்ற முறையில் உழைப்பாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் வாலாஜாபேட்டையில் ஆவேசமாக அணி திரளப் போகிறார்கள். தமிழக அரசு தாமதமின்றி தலையிடுமா?
நன்றி - தீக்கதிர்
பின் குறிப்பு ; மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள்
மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள்
நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது பிடி கொடுக்காமலே
பேசியுள்ளார். ஆதிக்க சக்திகளில் சிலரையும் பாதிக்கப்பட்ட
மக்களில் சிலரையும் நேற்று நள்ளிரவு முதல் இன்று
அதிகாலை வரை கைது செய்துள்ளனர். போராட்டத்தை
பலவீனப்படுத்தும் முயற்சி இது. ஆனாலும் மக்கள்
உறுதியாக உள்ளனர். போராட்டத்திற்கான தயாரிப்புக்கள்
நடந்து கொண்டிருக்கிறது, வேகமாகவே.

Tuesday, September 25, 2012
பக்தி எனும் போதையா அல்லது போதையால் பக்தியா?
இந்தத்
தலைப்பை படிக்கும் போதே ஆன்மீகவாதிகள் சிலருக்கு சுருசுருவென்று கோபம் வரும்.
ஆனால் வேறு வழியில்லை. நான் பார்த்த காட்சிகளை இங்கே கண்டிப்பாக பதிவு செய்தாக
வேண்டும். அதற்கு இதைத்தவிர வேறு பொருத்தமான தலைப்பு கிடையாது என்பதை
படிப்பவர்களின் மனசாட்சி கண்டிப்பாக ஒப்புக்கொள்ளும்.
வட
நாட்டிலிருந்து இறக்குமதியான பிள்ளையார் பெரு உருவச்சிலை, அதைக் கடலிலோ அல்லது
ஆற்றிலோ அல்லது குளம் ஏரியிலோ கொண்டு சேர்க்கும் விஸர்ஜன ஊர்வலம் இது எல்லாமே
பக்தியின் அடிப்படையிலானது அல்ல, சங் பரிவார அமைப்புக்களின் அரசியல் நாடகம்
என்பதும் அதற்கு அப்பாவிகள் பலர் இரையாகி வருகின்றனர் என்பது எனது உறுதியான
நிலைப்பாடு. இதுதான் உண்மையும் கூட.
இந்த ஆண்டு
இருபத்தி ஒன்றாம் தேதி கடலூர் சென்றேன். வேலூர், திருக்கோயிலூர், பண்ருட்டி,
கடலூர் ஆகிய இடங்களில் அன்றுதான் வினாயகர் ஊர்வலம். குட்டி யானை லாரிகளிலும்
ட்ராக்டர்களிலும் வினாயகர் ஏற்றிக் கொண்டு வரப்படுகின்றார். அந்த வாகனம் முழுதும்
இளைஞர்கள். அத்தனை இளைஞர்களும் குடி போதையில்தான் உள்ளனர். போதையில் வெறிக்
கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.
அத்தனை
ஊர்களிலும் அத்தனை பிள்ளையார்களோடும் நான் பார்த்த காட்சி இது. பக்தி உச்சத்திற்கு
ஏறி நிச்சயமாக இப்படி நடந்து கொள்ளவில்லை. இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
திட்டமிட்டு போதையேற்றப்படுபவர்கள்.
இவர்கள் மற்ற
நாளெல்லாம் கோயில்களுக்குச் செல்வார்களா என்பது கூட சந்தேகம். ஏற்கனவே தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்
ஆக்கிரமிப்பிற்கு சென்று கொண்டுள்ள வேளையில் இது போன்ற உசுப்பேற்றும் வேலைகள்
நிச்சயம் தமிழகத்திற்கு ஆரோக்கியமான ஒரு போக்கு அல்ல.
உண்மையான
கடவுள் நம்பிக்கையாளர்கள் இதனை முறைப்படுத்துவார்களா?
Sunday, September 23, 2012
தொழிற்சங்க இயக்கமும் ... சமுக நீதியும்...
க சுவாமிநாதன் ,
பொதுச்செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு,
ஒரு காலத்தில் அரசு அலுவலகங்களில் கூட இரண்டு குடிநீர்ப் பானைகள் இருந்திருக்கின்றன. தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எப்.எம்.குத்புதீன் கோபத்தோடு ஒரு பானையை உடைத்தார் என்று அவருக்கு அஞ்சலி செலுத்திய "தீக்கதிர்" கட்டுரையில் திரு ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார். சாதிய வேறுபாடுகள் பணித் தலங்களில் எப்படி பரவி விரவி இருந்தன என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. 1930 களில் "குடியரசு" இதழில் தந்தை பெரியார் சென்னை
தங்க சாலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் ஒரு ஆதி திராவிடப் பெண்
துணிச்சலாய் ஆலயப் பிரவேசம் செய்ததைப் பாராட்டியுள்ளார்.
சென்னை மாநகரத்தில் இப்படிப்பட்ட தீண்டாமைக் கொடுமைகள் கடந்த நூறாண்டுக்கு
உள்ளே கூட இருந்துள்ளது.
அண்மையில் சேலம் அருகில் உள்ள சந்நியாசிக் குண்டு என்ற கிராமத்திற்கு தோழர் குழந்தைவேலு (செயலாளர்,சேலம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி) தோழர்
ஆர் நரசிம்மன் (பொதுச் செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், சேலம் )
ஆகியோரோடு 16 08 2012 சென்று இருந்தேன். காலை 7 மணிக்கு கிராமக் கூட்டம்
நடந்தது. தலித் மக்களின் குடியிருப்பில் இருந்து வெளியே செல்வதற்குள்ள
எல்லாப் பாதைகளும் அடைக்கப்படுவதை கோபத்தோடும், குமுறலோடும் அம்மக்கள்
பகிர்ந்து கொண்டனர். ஒரு புறம் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் காம்பவுண்டு
சுவர் கோட்டை மதில் போல எழுந்து நிற்கிறது. சுவரில் அணையின் மதகுகள் போன்ற
பெரிய ஓட்டைகள் மூலம் கழிவு நீர் மட்டும் தலித் பகுதியின் பக்கம்
வெளியேறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பாதையில் இப்போது வீடு
கட்டும் ஒருவர் பாதையை மறிக்கும் சுவர் ஒன்றை எழுப்ப முயன்ற போதே
த.நா.தீ.ஓ.மு தலையிட்டு அதை தடுத்து நிறுத்தியுள்ளது. நிலத்தை அளந்து பாதை
இருப்பதை உறுதி செய்துள்ள அரசு நிர்வாகம் ஆனால் இதுவரை சாலை வசதி செய்து
தரவில்லை. பாறைகளும், முட்புதருமாய் உள்ள தற்போதைய தற்காலிகப் பாதை, பாம்பு
போல ஓரடி அகலத்தில் சுருண்டு சுருண்டு செல்கிறது. இருட்டிவிட்டால்
பாம்புகளின் நடமாட்டமும் இருக்குமாம். பள்ளிக் கூடம் போகிற குழந்தைகளை
பயந்து பயந்து அனுப்ப முடியுமா என்று ஒரு சகோதரி குமுறியபோது யாரிடமும்
பதில் இல்லை. பணமும் பணமும் சேர்ந்துகொள்கிறது, சனமும் சனமும் ஏன் சேர மாட்டேன் என்கிறது என்று
அதே பெண்மணி எழுப்பிய கேள்வி இந்தியச் சமுகத்தை தனது அனுபவத்தால் கூராய்வு
செய்கிற கத்தியாய்ப் பாய்ந்தது. அக் கிராமத்தில் த.நா .தீ.ஓ.மு தலைமையில்
போராட்டம் தொடர்கிறது.
இதுதான் இந்தியச்
சமுகத்தின் வித்தியாசமான ஒடுக்குமுறை. வர்க்க ஒடுக்குமுறைக்கான ஆயுதக்
கிடங்கில் சாதியம் மிக மிகக் கொடூரமான ஆயுதமாக இருக்கிறது. பொருளாதாரக்
கோபுரத்தின்
அடிக் கல் துவங்கி, பளபளக்கும் கலசம் வரை இதன் வெளிப்பாடுகளை நம்மால் காணமுடியும். சென்னை அரசு மருத்துவ மனையில் இறந்த குழந்தையின் கன்னத்தை ஒரு பெருச்சாளி குதறியதை செய்திகளில் படித்தோம். ஒரு சிறுவன் வாதாங் கொட்டை பார்ப்பதற்காக சுவர் ஏறியபோது ஒரு வெறி பிடித்த கனவானால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வந்த கடந்தாண்டு செய்தி பலருக்கு மறந்து போயிருக்கலாம். அண்ணா பல்கலை கழகத்தில் ஜோதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டாள். இம்மூன்று செய்திகள் தனித் தனியானதாக இருந்தாலும் ஒரு ஒற்றுமை தற்செயலானதல்ல.
இதில் பலியான எல்லோரும்
ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதே. வறுமை, உடல் நலக் கேடு, மன
அழுத்தம் போன்ற எல்லாவற்றுக்குள்ளும் ஆராய்ந்து பார்த்தால் சாதியச்
சமுகத்தின் தாக்கம் நிச்சயமாய் வெளிப்படும். பிசினஸ் வேர்ல்ட் இதழில்
அண்மையில் வெளியான டாலர் பில்லியனர், ருபாய் பில்லியனர் பட்டியலில் தலித்துகளை பூதக் கண்ணாடி போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை.
இவ்வளவு சாட்சியங்களும் சுட்டிக் காட்டுவது என்ன ? வர்க்க ஒடுக்குமுறைக்குள் சாதி ஒடுக்குமுறை சாரைப் பாம்புகளின் காதல் போல எப்படி
பின்னிப் பிணைந்திருக்கிறது! என்பதுதானே. எனவே சுரண்டலற்ற சமுகம் நோக்கிய
பயணத்தில் இவ்விரு ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடி முன்னேற
வேண்டியுள்ளது. அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இத் தெளிவான புரிதலை நமக்கு
தந்திருக்கிறது. அதனால்தான் இட ஒதுக்கீடு, சமுக நீதி, சாதிய ஒடுக்குமுறை
எதிர்ப்பு போன்றவற்றிற்கான களங்களில் சமரசமற்ற அணுகுமுறையை மேற்கொண்டு
வருகிறது. இதில் தமிழகக் கோட்டங்களின் பங்களிப்பு மகத்தானதாகும்.
இன்றைக்கு தீண்டாமைக் கள ஆய்வுகள் மிகப் பெரும் அம்பலப்படுத்தலாக (EXPOSE ) அமைந்து வருகின்றன. இதற்கான துவக்கபுள்ளியை வேலூர்க் கோட்டச் சங்கமே வைத்தது. வேலூர்,
விழுப்புரம்,கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும்
மேற்பட்ட சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்தி ஏராளமான கிராமங்களில் இருந்த
சாதியப் பாரபட்சங்களை வெளிக் கொணர்ந்தது. அதற்குப் பின்னரே உத்தபுரத்தை
உலகின் கவனத்திற்கு கொண்டுவந்த மதுரை மாவட்ட கள ஆய்வில் இன்சூரன்ஸ்
ஊழியர்கள் முக்கிய பங்கை வகித்தனர். இன்றைக்கு தமிழகம் முழுக்க இன்சூரன்ஸ்
ஊழியர்கள் முன் வரிசையில் நிற்கிறார்கள். குடியாத்தம் பகுதியில் பட்டா போராட்டத்தில் தோழர்
குபேந்திரன் (பொது இன்சூரன்ஸ்- த.நா.தீ.ஒ.மு மாவட்ட தலைவர்) தலைமையில்
தொடர் போராட்டங்களை நடத்தி ஒடுக்கப் பட்ட மக்களுக்கு வெற்றி தேடித்தந்தது
குறிப்பிடத்தக்கது. தஞ்சை அருகே சூரக் கோட்டை கிராமத்தில் சாதிமறுப்புத்
திருமணத்திற்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு எதிராக நடந்த போராட்டம் போன்ற
இயக்கங்களிலும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்கேற்பு பாராட்டுதலுக்குரியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்முறைக்கு இலக்கான பழங்குடி மக்களுக்கு கிராமத்திற்கே
சென்று நிவாரணம் அளித்தோம். வாச்சாத்தி மக்களோடு இணைந்து அம்பேத்கர்
பிறந்த நாளைக் கொண்டாடிய கோவை மண்டல பொது இன்சூரன்ஸ், சேலம் கோட்ட
ஊழியர்கள் ரூ 150000 பெறுமான கல்வி உதவி பொருட்களை அக்கிராம பள்ளி மாணவ
மாணவியர்களுக்கு அளித்துள்ளனர். இது போன்ற உதவிகள் , நிவாரணங்கள்
எல்லாம் அனுதாபத்தில் செய்யப்படுபவை அல்ல. 19 ஆண்டுகள் பாலின வன்முறைக்கு
எதிரான போராட்டத்தை நடத்திய வாச்சாத்தி பெண்களின் வீரத்திற்கு விலை ஏதும்
உண்டோ! தமிழகம் முழுவதும் ஆயிரம் ஒடுக்கப்பட்ட இளைஞர்களோடு வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் அம்பேத்கர் மையம் ஏற்படுத்தியுள்ள
உறவு விரிந்து கொண்டே வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களை கொண்ட
கோட்டங்களின் பட்டியலில் தஞ்சாவூருக்கு அடுத்ததாக வேலூர் இணைந்துள்ளது.
வேலூர், கடலூர் மையங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.
பொருளியல் , சமுக
தளங்களில் நிலவுகிற பாரபட்சங்கள் தொடருமேயானால் அரசியல் சனநாயகம் தகர்ந்து
போகுமென்ற டாக்டர் அம்பேத்கார் அவர்களின் எச்சரிக்கை மிக முக்கியமானது.
அதுபோன்று இப்பிரச்சினைகளில் சரியான நிலைகளை மேற்கொள்ளாவிட்டால்
தொழிற்சங்கங்களும் விரிந்த ஒற்றுமையை உறுதிப்படுத்த இயலாது. பொருளியல்
ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் சமுக ஒடுக்குமுறையால்
பாதிக்கப்படுகிற உழைப்பாளிகளை உணர்வு பூர்வமாக இணைக்க இயலாது. அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அனுபவமும், செயல்பாடுகளும் இவற்றை
நிரூபித்துள்ளன.
இப்பாதையில் நாம்
எடுத்து வைத்துள்ள அடிகள் நீண்ட நெடிய பாதையின் ஒரு சில மைல்களே. இன்னும்
எட்ட வேண்டிய இலக்கோடு ஒப்பிடுகையில் நம்மோடு கோர்க்க வேண்டிய கரங்கள்
நிறைய... செல்லவேண்டிய தூரமோ மிக மிக அதிகம்...
(வேலூர்க் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வெள்ளி விழா மலருக்காக )
(வேலூர்க் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வெள்ளி விழா மலருக்காக )
படவேட்டம்மன் ஆலயத்தில் படுபாதகச் செயல், காவல்துறை பாதுகாக்கும் தீண்டாமைச்சுவர்
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையிலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் வாலாஜா பி.டி.ஓ அலுவலகம் முன்பாக நெடிதுயர்ந்து
நிற்கும் படவேட்டம்மனின் சிலையை கவனிக்காமல் யாரும் கடக்க முடியாது. பரபரப்பான அந்த
கோயிலுக்குப் பின்னே ஒரு பெருந்துயரம் ஒளிந்திருப்பது சாலையைக் கடப்பவர்கள் கவனித்திருக்க
வாய்ப்பில்லை.
ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் சாலையோரத்தில்
மூன்று செங்கற்களை வைத்து படவேட்டமனாக தலித் மக்கள் வழிபடத் தொடங்கினார்கள். காலப்
போக்கில் அது சிறிய ஆலயமாக உருவாகியது. ஆலயம் இருந்த பகுதியை ஆலயத்திற்கும், அதற்குப்
பின்னால் தலித் மக்கள் குடியிருந்த பகுதியை அவர்களுக்குமே அந்த நிலத்திற்குச் சொந்தமானவர்
பட்டா போட்டுக் கொடுத்தார். அங்கே அம்பேத்கர் காலனி உருவானது. ஆலயத்திற்கும் அம்பேத்கர்
காலனிக்கும் இடைப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது.
கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தின் புகழ், படவேட்டம்மன்
புகழ் பரவ, பரவ பக்தர்களாய் வந்து போன பணக்காரர்கள் ஆலயத்தின் நிர்வாகத்தை கைப்பற்றிக்
கொண்டார்கள். வரவு செலவும் அதிகமானது. கோயிலுக்குச் சொந்தமானவர்கள், அதனை உருவாக்கி
காலம் காலமாக பராமரித்தவர்கள் மெல்ல, மெல்ல ஒதுக்கப்பட்டனர். அந்த எளிய மக்களும் வேறு வழியின்றி விலகிப் போனார்கள்.
விலகிப்போனாலும் துரத்தி வந்து தாக்கினார்கள்
கோயிலின் புதிய நிர்வாகிகள். ஆலயத்திற்கும் அம்பேத்கர் காலனிக்கும் இடையில் உள்ள ஏராளமான
இடம் அவர்களின் கண்ணை உறுத்தியது. ஏராளமான லாரிகளைக் கொண்ட நிர்வாகக் குழுத் தலைவருக்கு
தனது லாரிகளை நிறுத்த வசமான இடமாக இந்த காலி இடம் தெரிந்தது. கூடவே ஒரு கல்யாண மண்டபம்
கட்டினால் கூடுதல் காசும் பார்க்கலாம்.
ஆனால் அம்பேத்கர் காலனி மக்கள் அந்த இடத்தை
வழிப்பாதையாக பயன்படுத்துவது ஒரு தடையாக இருந்தது. காலம் காலமாக பயன்படுத்துவதை எப்படி
தடுத்து நிறுத்துவது? நல்லதைச் செய்ய யோசனைகள் கிடைப்பது கஷ்டம். கெட்டதைச் செய்ய வினாடிக்குள்
கோடி திட்டங்கள் கொட்டுமே! படவேட்டம்மன் போல பஞ்சமுக ஆஞ்சனேயர் பெரிய சிலையும், கோயிலுக்கு
சுற்றுச்சுவரும் கட்டுவதாக அறிவித்தார்கள். பக்தர்களிடம் நன்கொடை கேட்டு அறிவிப்பு
பலகை வைத்தார்கள்.
பண வசூல் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில்
ஆஞ்சனேயருக்கு ஒரு மேடை எழுப்பி, பிறகு. அதை அப்படியே அம்போவென்று போட்டு விட்டு, பிரம்மாண்டமான
சுற்றுச்சுவரை எழுப்பி விட்டார்கள். தங்களின் பயன்பாட்டில் இருந்த பாதை பறி போனதைக்
கண்டித்து தலித் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். சட்ட விரோதமாக கட்டப்பட்ட
நீண்ட நெடிய சுவரின் சிறு பகுதியை ஆவேசம் கொண்ட சில இளைஞர்கள் இடித்து விட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை உருவாக்குகிறோம் என்று
காவல்துறை உறுதியளித்தது. ஆனால் அதன் உள்ளத்தை ஆதிக்க சக்திகள் கொள்ளையடித்து விட்டார்கள்.
சுவர் கட்டப்பட்ட இடம் அரசின் நிலம். அங்கே
சுவர் எழுப்பியது ஆக்கிரமிப்புக் குற்றம். தலித் மக்கள் பயன்பாட்டில் இருந்த பகுதியில்
சுவர் எழுப்பியது தீண்டாமைக் குற்றம். ஆனால் காவல்துறையும் அரசு நிர்வாகமும் ஆதிக்க
சக்திகளுக்கு துணையாகவே இருக்கிறது. கட்டப்பட்ட சுவருக்கு பாதுகாப்பாக அங்கே காவலர்கள்
குவிக்கப்பட்டுள்ளனர். இரு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த முன்னேற்றமும்
இல்லை. ஒரு சக்தி மிக்க ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியும் இணைந்து நடத்தியுள்ளது.
கோயில் நிர்வாகத்திற்கு இது வருமானப் பிரச்சினை,
நிர்வாகிக்கு கௌரவப் பிரச்சினை. ஆனால் அம்பேத்கர் காலனி மக்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினை.
உரிமைப் பிரச்சினை. சுற்றுச்சுவருக்கு உட்பட்ட பகுதியில் மூன்று வீடுகள் உண்டு. அவர்கள்
இப்போது பயந்து போய் எங்கோ தலைமறைவாகி விட்டார்கள்.
நேற்று சம்பவ இடத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின்
மத்தியக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தீண்டாமை முன்னணியின் தலைவருமான தோழர் பி.சம்பத்,
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் என்.குணசேகரன், கட்சியின்
மாவட்டப் பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைக் கட்சியின் பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்.
அரசு நியாயம் வழங்க தயாராக இல்லாத போது நியாயத்தை
நாமே எடுத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தீண்டாமைச் சுவர் அகற்றப்பட
வேண்டும், படவேட்டம்மன் ஆலய நிர்வாகம் தலித் மக்களிடமே அளிக்கப்பட வேண்டும், இல்லையேல்
இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நேரடி
நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,
பகுஜன் சமாஜ் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து வரும் முப்பதாம் தேதி போராட்டத்தில்
ஈடுபடப் போகிறது. அடித்தால் திருப்பி அடி என்று எண்பதாண்டுகளுக்கு முன்பே கீழத் தஞ்சை
மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்து, போராட்ட உணர்வேற்றிய மகத்தான
தலைவர் தோழர் பி.சீனிவாச ராவ் அவர்களின் நினைவு நாளில் நடைபெறவுள்ள இந்த போராட்டம்
நிச்சயம் வெற்றி பெறும்.
பெண்களின் கண்களிலும் இளைஞர்களின் வார்த்தைகளிலும்
தெரியும் கோபம் அதற்கு கட்டியம் கூறுகிறது.
தகரப்போவது தீண்டாமை சுவர் மட்டுமல்ல,
ஆதிக்க சக்திகளின் ஆணவமும் அரசின் அலட்சியமும்
கூட.
Saturday, September 22, 2012
இனி மன்மோகன்சிங்கை நான் திட்டப்போவதில்லை, நாசமாய் போக!
இந்தியாவின் பிரதமர்,
அமெரிக்காவின் அடிமை,
பணக்காரர்களின் எடுபிடி,
ஏழைகளின் எதிரி,
நடுத்தர மக்களின் விரோதி
மன்மோகன் சிங்கை இனிமேல்
நான் திட்டப் போவதில்லை.
இனி யாரேனும் அந்த
பெரிய மனிதனை
நேர்மையானவர் என்று
சொன்னால்
சொன்னவனும்
நேர்மையற்றவன் என்றே
உரக்கச்சொல்வேன்.
பொய்களின் மூட்டையை
தொலைக்காட்சியில்
அவிழ்த்து விட்ட
அந்த மனிதன்,
இல்லை, இல்லையில்லை,
மன்மோகன் மனிதனே
இல்லை.
அரக்கனை திட்டினால்
அந்த ஜன்மத்திற்கு
புரியவா போகிறது?
நேற்று ஒரு கூட்டத்தில்
ஒரு புலவர் சொன்னார்.
புலவன் சபித்தால்
பலிக்கும், நான்
சபிக்கிறேன்,
மன்மோகன்சிங்
நாசமாகப் போகட்டும்
என்று சபித்தார்.
அதையே நான்
எதிரொலிக்கிறேன்.
இந்திய விரோதிகள்
மன்மோகன், சோனியா,
சிதம்பரம் என்று
ஒட்டு மொத்த
காங்கிரஸ் கூட்டமும்
நாசமாகட்டும்.
அமெரிக்காவின் அடிமை,
பணக்காரர்களின் எடுபிடி,
ஏழைகளின் எதிரி,
நடுத்தர மக்களின் விரோதி
மன்மோகன் சிங்கை இனிமேல்
நான் திட்டப் போவதில்லை.
இனி யாரேனும் அந்த
பெரிய மனிதனை
நேர்மையானவர் என்று
சொன்னால்
சொன்னவனும்
நேர்மையற்றவன் என்றே
உரக்கச்சொல்வேன்.
பொய்களின் மூட்டையை
தொலைக்காட்சியில்
அவிழ்த்து விட்ட
அந்த மனிதன்,
இல்லை, இல்லையில்லை,
மன்மோகன் மனிதனே
இல்லை.
அரக்கனை திட்டினால்
அந்த ஜன்மத்திற்கு
புரியவா போகிறது?
நேற்று ஒரு கூட்டத்தில்
ஒரு புலவர் சொன்னார்.
புலவன் சபித்தால்
பலிக்கும், நான்
சபிக்கிறேன்,
மன்மோகன்சிங்
நாசமாகப் போகட்டும்
என்று சபித்தார்.
அதையே நான்
எதிரொலிக்கிறேன்.
இந்திய விரோதிகள்
மன்மோகன், சோனியா,
சிதம்பரம் என்று
ஒட்டு மொத்த
காங்கிரஸ் கூட்டமும்
நாசமாகட்டும்.
Thursday, September 20, 2012
இத்தனை பணம் எங்கே இருக்கிறது?
சமீபத்தில்
நான் எனது பழைய இரு சக்கர வாகனத்தை விற்று விட்டு புதிய இரு சக்கர வாகனம்
வாங்கினேன். ஜூன் மாதம் முதல் நாள் வாகனம் பதிவு செய்யப்பட்டது. வாகன எண் 3802. இரு தினங்கள்
முன்பு ஒரு அதிகாரி வாங்கிய புதிய காரைப் பார்த்தேன். அதன் எண் 9200. அவரைக் கேட்ட
போது ஆகஸ்ட் முப்பது அன்று பதிவு செய்ததாய் கூறினார். ஆக மூன்றே மாதங்களில்
வேலூரில் மட்டும் 5400 புதிய வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.
ஒரு சின்ன
கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு மாதத்திற்கு 1800 வாகனங்கள்.
அவை 35,000
ரூபாய் மதிப்புள்ள டி.வி.எஸ் 50 ஆகவும் இருக்கலாம், பல லட்சம்
மதிப்பிலான சொகுசு கார்களாகவும் இருக்கலாம். இருப்பினும் சராசரியாக ஒரு வாகனத்தின்
மதிப்பு 50,000
ரூபாய் என்று மட்டும் எடுத்துக் கொண்டேன். அப்படிப் பார்த்தால் ஒரு மாதத்திற்கு
வேலூர் நகரத்தில் மட்டும் விற்பனையாகிற வாகனங்களின் மதிப்பு ஒன்பது கோடி ரூபாய்,
வருடத்திற்கு
108 கோடி ரூபாய்.
உண்மையில்
இந்த தொகை அதிகரிக்குமே தவிர குறையப் போவது இல்லை. எனது சந்தேகம் எல்லாம் இந்த
அளவு பணம் வேலூரில் எங்கே இருக்கிறது. சரி பாதிக்கும் மேல் வங்கிகளும் மற்ற நிதி
நிறுவனங்களும் அளிக்கும் கடன் என்றே வைத்துக் கொண்டாலும், கடன் பெறுபவரின் நிதி
நிலைமை உணர்ந்தே தரப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
புதிய
வாகனத்திற்காக ஆசை காட்டி கடன் வலையில் சாதாரண, நடுத்தர மக்களை சிக்க
வைக்கிறார்களோ என்ற கவலையும் ஏற்படுகிறது. இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுந்தது.
வாகனத்திற்காக
இவ்வளவு ரூபாய் கடன் அளிக்கும் நிறுவனங்கள், விவசாயத்திற்காகவோ அல்லது தொழில்
வளர்ச்சிக்காகவோ கடன் அளிக்குமா? கல்விக்கடன் பெறவே வங்கிகள் அலைக்கழிப்பதை நாம்
அன்றாடம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
இந்த
கணக்குகளை நாம் போடுகிறோமோ இல்லையோ பன்னாட்டுக் கம்பெனிகள் சரியாகவே போடுகின்றன.
அதனால்தான் அவை இந்தியாவை சுரண்ட ஆசைப்படுகின்றன.
பொருளாதார
நிலைமை முன்னேறி இந்த விற்பனையும் வளர்ச்சியும் இருந்தால் மகிழ்ச்சியான ஒன்றுதான்.
ஆனால் கடன் மட்டுமே அடிப்படை என்றால் நீர்க்குமிழி எப்போது வேண்டுமானாலும்
உடையலாம், அமெரிக்க வீட்டுக் கடன் பிரச்சினை போல. கடன் கொடுப்பவர்களும்
வாங்குபவர்களும் சற்று சிந்தித்தால் நல்லது.