ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்  முறைகேடுகள்  நடந்துள்ளது  என்ற 
குற்றச்சாட்டுக்கள்  பல காலமாக  இருந்த போதும், தோழர் சீத்தாராம் யெச்சூரி    பல  ஆதாரங்களை  அடுக்கிய போதும்  பிரச்சினை சூடு 
பிடித்தது  தலைமை தணிக்கை அதிகாரி  அளித்த அறிக்கைக்கு  பின்புதான்.
கிருஷ்ணா கோதாவரி  எரிவாயு  படுகையை  ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு   அளித்ததில்  முறைகேடுகள்  உள்ளது  என்பது அண்ணன் தம்பி அம்பானிகள்  அடித்துக் கொண்ட போது  வெளி வந்தது.  அந்த 
ஒப்பந்தத்தை  ரத்து  செய்ய வேண்டும்  என்று  அப்போதே  மார்க்சிஸ்ட் 
கட்சி   வலியுறுத்தியது. 
இதிலேயும் எண்ணற்ற முறைகேடுகள் நடந்துள்ளது, அது எவ்வளவு என
மதிப்பிட முடியாத இழப்பு, ரிலையன்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள்
மத்தியில் கூடா நட்பு உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது,
ஊழல் எதிர்ப்பு சூராதி சூரர்கள் இது பற்றி எதுவும் பேச மாட்டார்கள். ஏனென்றால் இது அவர்களின் ஸ்பான்சரான கார்ப்பரேட்டுகளின்
ஊழல்.
ஆனாலும் இது அடுத்த பூதம்தான். எத்தனை தலைகளுக்கு திகார்
காத்திருக்கிறதோ?
வெள்ளிக்கிழமை படம் வெளியாவது போல் வாரம் ஒரு செய்தியாக வருகிறது.
ReplyDeleteஊழல் ஒழிய சரியான முறையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete