Monday, January 16, 2017

எல்லையிலே - நல்லா மிரட்டுப்பா




"எல்லையிலே ராணுவ வீரர்கள்" 

என்பது பாஜக எழுப்பிய முழக்கம். செல்லா நோட்டு  எனும் மோடியின் மூடத்தனத்தால் எழுந்த பிரச்சினைகளை விமர்சனத்திற்கு எதிர்வினையாக காவிக்கூட்டம் "எல்லையிலே ராணுவ வீரர்கள் சிரமப்படுகிற போது வரிசையில் நிற்கக் கூட முடியாதா என்று கேட்டது. காவிக்கூட்டத்திற்கு அச்சகத்திலிருந்தே புது நோட்டுக்கள் பெட்டி பெட்டியாக போனதான் வரிசையில் நிற்கும் சிரமமே அவர்களுக்கு வரவில்லை.

ராணுவ வீரர்கள் மீது அவர்கள் கொண்ட கரிசனமும் வழக்கம் போல போலியானது என்பது விரைவிலேயே அம்பலமாகி விடும் என்பது அவர்களே எதிர்பாராதது.

ராணுவ வீரர்களுக்குத் தரும் ரொட்டியும் பருப்பும் எவ்வளவு கேவலமாக உள்ளது  என்பதை தேஜ்பகதூர் யாதவ் எனும் எல்லை பாதுகாப்புப்படை வீரர் காணொளிக்காட்சி மூலம் அம்பலப்படுத்தினார். அவர் குடிகாரர், ஒழுங்கீனமானவர் என்று சொல்லி பிரச்சினையை புறம் தள்ளப் பார்த்தார்கள். குடிகாரர் கையில் ஏனய்யா துப்பாக்கியைக் கொடுத்தாய் என்று அவரது மனைவி எழுப்பிய கேள்விக்கு விடை இல்லை. 

தேஜ் பகதூர் யாதவைத் தொடர்ந்து மேலும் பல வீரர்கள் தாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். எல்லையிலே ராணுவ வீரர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை எதிரிகளோ, இயற்கையோ அல்ல, அலட்சியப்போக்கும் ஆணவப்போக்கும் கொண்ட உயரதிகாரிகளும் அவர்களை அரவணைக்கும் அரசும்தான் என்பது அம்பலமாகி வருகிறது. அரசு என்று வருகிறபோது காங்கிரஸ் அரசும் விதிவிலக்கல்ல. 

ராணுவ வீரர்களுக்கு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று ஜம்பம் பேசிய, தீபாவளிக்கு லட்டு கொடுத்த மோடியின் அரசு இப்போது எழுந்துள்ள பிரச்சினையை எப்படி அணுகுகிறது?

தேஜ்பகதூர் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சொல்கிறது.

இரண்டு சீனியர் அதிகாரிகளைத் தாண்டி இந்திய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள  ராவத், ராணுவ வீரர்களை எச்சரித்துள்ளார். மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். ராணுவ வீரர்களின் பிரச்சினைகளை சரி செய்வது பற்றியோ ஊழல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியோ வாய் திறக்கவில்லை.

கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது. 

இந்த அணுகுமுறை அப்படியே நீடிக்கட்டும். அப்போதுதான் எல்லையிலே  தியாகங்களை செய்யும் வீரர்களும் இந்த அரசு எவ்வளவு கேடு கெட்டது என்பதை உணர்ந்து கொதிப்பார்கள். 

நடத்துங்க உங்க அராஜக ஆட்சியை.


3 comments:

  1. இவை எல்லா ஆட்சியிலும் இருக்கும் குறைகளே.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அதையும் பதிவு செய்துள்ளேன் //எல்லையிலே ராணுவ வீரர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை எதிரிகளோ, இயற்கையோ அல்ல, அலட்சியப்போக்கும் ஆணவப்போக்கும் கொண்ட உயரதிகாரிகளும் அவர்களை அரவணைக்கும் அரசும்தான் என்பது அம்பலமாகி வருகிறது. அரசு என்று வருகிறபோது காங்கிரஸ் அரசும் விதிவிலக்கல்ல. //

      இதிலே ராணுவ வீரர்களுக்காக ஓவராக சீன் போட்டது மோடி என்பதை மறந்து விடக்கூடாது

      Delete
  2. MK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

    மேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

    நீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..

    நிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் .

    வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

    நமது நமது சேனல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.

    https://www.facebook.com/Mkcinema-298392973889075/app/212104595551052/

    ReplyDelete