Saturday, January 12, 2013

சுவாமி விவேகானந்தரும் அவரை முன்னிறுத்தும் போலிகளும்

 
 
சுவாமி விவேகானந்தர், தான் கண்ட இந்தியாவை, புரிந்து கொள்வது என்பதோடு மட்டுமல்லாது மாற்ற வேண்டுமென்று முயன்ற ஒரு அறிவுஜீவியும், தத்துவ ஞானியும் ஆவார். 
ஆனால் மாற்றம் என்றால் புத்தர் கனவு கண்டதுபோல் மீண்டும் புராதன குல சமூகத்திற்கு மாறுவதென்பதல்ல ஒரு நவீன, அறிவியல் சார்ந்த, ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியல் இந்தியாவை கட்டுகின்ற மாற்றம்தான். 
ஜாதிய சமூகத்தைக் கட்டுவதற்கு சங்கரர் எந்த வேதாந்தத்தை பயன்படுத்தினாரோ அதே வேதாந்தத்தை அதே ஜாதீய சமூக முறையை எதிர்பதற்கு மக்களைத் திரட்ட அவர் பயன்படுத்தினார். 
ஒரு இந்திய (இந்து) பாட்டாளி வர்க்க ஆட்சியின் வடிவத்தை சூத்திரர்களின் ஆட்சி என்கிற கோட்பாட்டில் அவர் முன்வைத்தார். சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான முழுமையான சமத்துவமே அவரது அறைகூவலாக இருந்தது. 
அவர் மார்க்சிய தத்துவங்களோடு தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளவும்மில்லை, அதைப் புரிந்து கொள்ளவுமில்லை. இருந்தாலும் அவர் ஒரு ஜனநாயகவாதி, சமூக கிளர்ச்சியாளர், இந்திய சமூகத்தை முழுமையாக மறு கட்டமைப்புச் செய்வதற்காக நின்றவர்.
 அவரும், அவருடைய தலைமுறை சகாக்களும் செய்த பணிகள் ஒரு நவீன உழைக்கும் வர்க்கமும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர சோஷலிச இயக்கமும் உருவாவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தன.
 
தங்களை விவேகானந்தரின் சீடர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்களால் சுவாமி விவேகானந்தரின் சிறப்பம்சங்கள் மறுக்கப்படுவதுடன் அவர்கள் அவருடைய புரட்சிகரமான போதனைகளை மறக்கவே விரும்புகின்றார்கள்.

                                                     - தோழர் இ . எம். எஸ் . நம்பூதிரிபாட் -
 
ரியாதொரு ருத்தில் ரியாதொரு திவை 
 முநூலில் வெளியிட்ட  தோழர் கா.சின்னையா
(சின்னையா காசி)  அவர்ளுக்கு மார்ந்நன்றி   

2 comments:

  1. விவேகானந்தரின் பன்முகப்பட்ட செயற் பாடுகளின் ஒரு சிறு பகுதியைப் பார்த்து, அவரின் ஆழுமையை அளந்து, தன்னால் புரிந்ததை பெரிதாகத் தந்துள்ளார். மார்க்சிய வாதியின் வழமையான எழுத்து இது.
    கணபதி

    ReplyDelete
  2. விவேகானந்தரின் பன்முகப்பட்ட செயற் பாடுகளின் ஒரு சிறு பகுதியைப் பார்த்து, அவரின் ஆழுமையை அளந்து, தன்னால் புரிந்ததை பெரிதாகத் தந்துள்ளார். மார்க்சிய வாதியின் வழமையான எழுத்து இது.
    கணபதி

    ReplyDelete